அண்ணாமலையார் கிரிவலம்
அண்ணாமலையார் கிரிவலம்
வேலுார்: டிச 15–
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் கார்த்திகை தீபம் திருவிழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 13 ம் தேதி காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை பெளர்ணமி நேற்று (14) மாலை 4.17 மணிக்கு தொடங்கி இன்று (15 ) மாலை 3. 13 மணிக்கு முடிகிறது. அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழகம், ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், துர்கை அம்மன், அடி அண்ணாமலை கோவில்
சுவாமி அம்மன் ஆகிய உற்வசர் சுவமிகள் இன்று கிரிவலம் சென்றனர்.
நேற்று இரவு கோவில் தெப்பகுளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. இதில் அண்ணாமலை, உண்ணாமலையம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் அடங்கிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம் நடந்தது.
TKS
ReplyDelete