Posts

Showing posts from April, 2024

காலை வணக்கம்

Image
இறைவனிடமும் இயற்கையிடமும் மௌனமாக பேசுங்கள்........ மனிதர்களிடம் கவனமாக பேசுங்க......!! *இனிய காலை வணக்கம் நண்பர்களே இனிய காலை வணக்கம் இன்றைய சிந்தனை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! "மகிழ்ச்சி எங்கே இருக்கிறது.."? ¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡ உலகில் பிறந்த எல்லாருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். மனிதன் பொருட்களில், பணத்தில், பதவியில், பட்டத்தில் என்று பல வகைகளில் மகிழ்ச்சியைத் தேடி அலைகின்றான். இதில் கிடைத்து விடாதா அதில் கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தோடும், ஆதங்கத்தோடும் இங்கும் அங்கும் அலைகின்றான். இறுதியில் அவனுக்குக் கிடைப்பது ஏமாற்றமே. மகிழ்ச்சி என்பது வெளியே விலை கொடுத்து வாங்கக் கூடிய பொருளோ, இடமோ அல்ல. இது ஒவ்வொரு மனிதனின் கையிலும் உள்ளது. இந்த உண்மையை மனிதன் எப்போது உணர்ந்துக் கொள்கின்றானோ, அப்போது அவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான். அப்போது அவனது மகிழ்ச்சியை அவனிடமிருந்து யாரும் எடுத்துக் கொள்ள முடியாது. ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் குவிந்து கிடந்தன.ஆனால், மகிழ்ச்சியும், நிம்மத

இரவின் மடியில்

Image
🌺🌸 *இரவின் மடியில்* 🌸🌺  🎼🎧🎤🎸🎻🎼🎻🎸🎤🎧🎼    *   ┈┉┅━❀••🌿🍁TSN🍁🌿••❀━┅┉┈  🎬 : *ஜென்டில் மேன்*   🎻 : *எ.ஆர். ரஹ்மான்*   🖌: *வைரமுத்து*   🎤 : *எஸ்.பி. பாலசுப்ரமணியம்சுஜாதா*   📅 : * ┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈     பெண் : { என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார் என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார் என் நெஞ்சை சொல்லுமே } (2) ஆண் : வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது வாய் பூட்டு சத்தம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது பெண் : வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுகே கேட்காது ஆண் : ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது பெண் : ஆளான பின்னாலே அல்லி பூ மூடாது ஆண் : ஆசை துடிக்கின்றதோ ஆண் : உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார் உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார் என் பெயர் சொல்லுமே பெண் : சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே ஆண் : சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது

கொலை

Image
*சித்த மருத்துவர் வெட்டி படுகொலை* சென்னை, ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை  கொலை செய்து விட்டு நகை, பணம் திருடப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸ்சார் விசாரணை

கொடைகானல் வந்தார்முதல்வர்

Image
*கொடைக்கானல் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்* 5 நாட்கள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பலி

Image
வேலூர்     29-4-24 ஒடுக்கத்தூர் அருகே  நீச்சல் பழகிய போது பரிதாபம்2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் மூழ்கி பலி சோகத்தில் மூழ்கிய கிராமம்   வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்தஒடுக்கத்தூர் அருகேயுள்ள  கரடிகுடி அருகே உள்ள பிச்சநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40).  இவரது மனைவி பவித்ரா (30). தம்பதியரின் மகன் ரித்திக் (9), மகள் நித்திகா ஸ்ரீ (7).தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்தனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உளள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக செய்தார். அதன்படி   பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றார். நீண்ட நேரம் குளித்துக் கொண்டிருந்தபோது தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கினர். இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த சுரேஷ் அக்கம் பக்கம் வீடுகளில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. உடல்கள் மீட்பு இந்த நிலையில் இன்று  விவசாய கிணற்றின் அருகே சிலர் நடந்து சென்றனர்.அப்போது சிறுமி நித்திகா ஸ்ரீ பிணமாக மிதங்கினார். இது குறித்து அந்த பகுதி மக்கள் ஒடுகத்தூர் தீயணைப்பு

தீர்ப்பு

Image
வேலூர்         29-4-24 20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் வேலூர் மாநகராட்சி முன்னாள் ஆணையருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிப்பு -  வேலூர்  நீதிமன்றம்  தீர்ப்பு      வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சியில் 2017-ம் ஆண்டு டெங்கு கொசு ஒழிப்பு பணி ஒப்பந்தம் எடுத்திருந்த பாலாஜி என்பவரிடம் ஒப்பந்த தொகை 10 லட்சத்து 23 ஆயிரத்தை விடுவிக்கரூ.20,000  லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமார் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.  இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் முன்னாள் வேலூர் மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்

பெருமாள்

Image
🙏 *பெருமாள் திருமொழி* சுற்றமெல்லாம்பின்தொடரத் தொல்கானமடைந்தவனே     அற்றவர்கட்குஅருமருந்தே அயோத்திநகர்க்குஅதிபதியே!    கற்றவர்கள்தாம்வாழும் கணபுரத்துஎன்கருமணியே !   சிற்றவைதன்சொற்கொண்ட சீராமா!  தாலேலோ. ஆலினிலைப்பாலகனாய் அன்றுஉலகமுண்டவனே!    வாலியைக்கொன்றுஅரசு இளையவானரத்துக்குஅளித்தவனே!    காலின்மணிகரையலைக்கும் கணபுரத்துஎன்கருமணியே!    ஆலிநகர்க்குஅதிபதியே!  அயோத்திமனே!  தாலேலோ. 🌹

வெயில் சிறுவன் பலி

Image
ராணிப்பேட்டைமாவட்டம்       29-4-24 குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு   நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சென்ற 14 வயதுடைய சிறுவன்  வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த டி,சி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யா(43) இவர் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி வெண்ணிலா(40) இந்த தம்பதியர்களுக்கு அர்ஷன் (14 )பரத் (12) ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்இந்த நிலையில் சத்யா  தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவர்களது குலதெய்வ கோவில்  பக்கத்து கிராமமான நத்தம் பகுதியில் உள்ள மலை மீது அமைந்துள்ள மூங்கில் வாழி அம்மன் கோவிலுக்கு  நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மலை அடிவாரத்தில் இருந்து நடைபயணமாக  சென்றுள்ளனர் அப்போது அதிகப்படியான வெயிலின் காரணமாக நடந்து சென்று கொண்டிருந்த சத்யாவின் மூத்த மகன் அர்ஷன் திடீரென மயங்கி விழுந்து உள்ளார்உடனடியாக சத்யா குடும்பத்தினர் மயங்கி விழுந்த அர்ஷனை தூக்கிக்கொண்டு அருகே உள்ள  தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிப்பதற்கு கொண்டு சேர்த்துள்ளனர்அப்போது மயக்க நில

விபத்து

Image
*நாட்றம்பள்ளி அருகே நேற்று ஏற்பட்ட   இருசக்கர வாகன  விபத்தில் சிக்கி வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும்  அண்ணாமலை  என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு*

தண்டனை

Image
வேலூர் மாநகராட்சியில் 2017-ம் ஆண்டு 20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

திருமண விழா

Image

ஊட்டி

Image
இன்று *ஊட்டியில்* *வேலூர் மாவட்டத்தின்* *செல்லப்பிள்ளை,* *இளைஞர்களின் நாயகன்,* *இளம்புயல்* *அண்ணண்* திருமிகு, *A.P.நந்தகுமார் MA,MLA,*  *வேலூர் மாவட்ட செயலாளர்,* *அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்,*  அவர்களுடன் திருமிகு, *மு.பாபு BA,* *பெருந்தலைவர்,* *வேலூர் மாவட்ட ஊராட்சி குழு (ம) திட்ட குழு தலைவர்,* *அணைக்கட்டு மேற்கு ஒன்றிய கழக செயலாளர்,*  அவர்கள்  திரு, *கோ.குமரபாண்டியன் BA,* *அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,*  அவர்கள்  *திரு.P.வெங்கடேசன்,*  *அணைக்கட்டு மத்திய ஒன்றிய கழக செயலாளர்,*  அவர்கள்  மற்றும் *ஒன்றிய,நகர, பகுதி,பேரூர் கழக செயலாளர்கள்,*  உடன் இருந்தனர்......

மரக்கன்று நடுங்கள்

Image
🌱🌱🌱🌱🌱🌱🌱🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌴🌴🌴🌴🎋🎋🎋🎋🎋 🙏🤝🙏    *இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போ உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்போ நம்மால் தாங்க இயலாது.*  *குழந்தைகள் காப்பாற்றுவதற்கு சிரமம்* *இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பலம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது.* *நம்ம வீட்டை சுற்றி இடமிருப்பின் முடிந்த அளவிற்கு மரங்களை நடுங்கள்,* *மரம் நடுவோம் இயற்கையை காப்போம்* வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 10 கோடி மர கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம் மர கன்றுகள் உற்பத்தியாளர்கள்,  வன துறை,  பள்ளி தாளாளர்கள்,  உயர் பதவிகளில் இருப்போர்,  பிரபலங்கள்,   ஆன்மீக தலைவர்கள்,  அனைத்து மதங்களின் குருமார்கள்,  கிராம தலைவர்கள்,  ஊர் தலைவர்கள்,  அனைத்து கட்சி தலைவர்கள் ஒன்று கூடி செயல்படுவோம்.  அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகி கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கி கொள்ளுங்கள் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மர கன்றிற்கும் அடுத்த 1 வருடம் தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும்.  இதே

விழா

Image
🖤🤍❤️✌🏼✌🏼✌🏼🖤🤍❤️ திருப்பத்தூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை சட்டமன்றதொகுதி  ஜோலார்பேட்டை நகரம் *குடியானகுப்பம்* மற்றும் நட்றாம்பள்ளி ஒன்றியம் *ஜங்களாபுரம்* பகுதியில்  கழகத் தொண்டர்கள் மற்றும்  ஊர்பொதுமக்களின் அழைப்பை ஏற்று கும்பாபிஷேக விழாவில்...   மாண்புமிகு  திரு. *K.C.வீரமணி  B.A.,* மு.வணிகவரி (ம)  பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்  திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர்  அஇஅதிமுக திருப்பத்தூர் மாவட்டம். அவர்கள்  கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்  🖤🤍❤️✌🏼✌🏼✌🏼🖤🤍❤️

நீர் மோர் பந்தல் திறப்பு

Image
💚மாண்புமிகு *புரட்சித்தலைவர், எம்.ஜி.ஆர்,* மாண்புமிகு *புரட்சித்தலைவி அம்மா* ஆகியோரின் தெய்வீக நல்லாசியுடன்... *மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர்,* கழகபொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர்,*புரட்சிதமிழர்,* அண்ணன்,*எடப்பாடி கே.பழனிச்சாமி* அவர்களின் ஆணையின்படி... நாள்:26.04.2024 இடம்: *காஞ்சி கூட்ரோடு, சி.கெங்கம்பட்டு, எறையூர்* திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், *கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி,*  *புதுப்பாளையம்* ஒன்றிய கழக சார்பில், *கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு* *புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தண்ணீர் பந்தலை* மாண்புமிகு முன்னாள் அமைச்சர், *சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளர்,* கழக விவசாய பிரிவு செயலாளர், மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அண்ணன், *அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.MLA.,* அவர்கள் திறந்துவைத்து,*பொதுமக்களுக்கு நீர்,மோர், இளநீர், தர்பூசணி*  போன்றவற்றை வழங்கினார்.  *இந்நிகழ்ச்சியில்,* திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர், ஒன்றிய கழக செயலாளர்,*M.கலியபெருமாள்* அவர்கள்,மாவட்ட பொருளாளர், *M.S.நைனாகண்ணு,* ஒன்றிய கழக செயலாள

மனிதன் நினைப்பது என்ன

Image
மனிதன் நினைப்பதுண்டு                         வாழ்வு நிலைக்குமென்று                                   இறைவன் நினைப்பதுண்டு                      பாவம் மனிதனென்று தாத்தா சொத்தை பேரன் அழிப்பான்                                                                  என்பது வழக்கத்தில் இன்னும் இருக்கு  *தமிழ்நாட்டுக்கு இன்று மஞ்சள் அலெர்ட்* தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தாலாட்டு

Image
🌷மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே! தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர் கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ!🙏🌷 ஸ்ரீகுலசேகராழ்வார்  ♦  பெருமாள் திருமொழி 8.1 நிலை நின்ற புகழையுடைய கௌஸல்யையினுடைய் அழகிய வயிற்றிலே பிள்ளையாகத் திருவவதரித்தவனே! தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய பத்துத் தலைகளையும் சிதறப் பண்ணினவனே! . செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய் அழிவில்லாததாய் விலக்ஷணமாய் பெரிதான திருமதிளாலே நாற்புறமும் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற நீலரத்நம் போன்ற எம்பெருமானே! எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே! ஸ்ரீராமனே! தாலேலோ! (உனக்குத்) தாலாட்டு 🙏🪷🌷

நிம்மதி எங்கு கிடைக்கும்

Image
எங்கே நிம்மதி...... எங்கே நிம்மதி.....          அங்கே......எனக்கோர் இடம் வேண்டும் பெரியவர் சொன்ன ரகசியம்... ஒரு மனிதன்.... எந்தக் குறையும் இல்லை அவனுக்கு... ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை...  சிரமப்பட்டான்... அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள். பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு...  அங்கே ஒரு பெரியவர் இருக்கார்...  போய்ப் பாருங்கள்!" ஆசிரமத்துக்குப் போனான்... பெரியவரைப் பார்த்தான். ஐயா....  மனசுலே நிம்மதி இல்லே...  படுத்தா தூங்க முடியலே!" அவர் நிமிர்ந்து பார்த்தார்... தம்பி...  உன் நிலைமை எனக்குப் புரியுது...  இப்படி வந்து உட்கார்!" பிறகு அவர் சொன்னார்: உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது... தெரிந்தா உன் நிம்மதி போயிடும்! அது எப்படிங்க? சொல்றேன்...  அது மட்டுமல்ல...  மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்! ஐயா  நீங்க சொல்றது எனக்கு புரியலே! புரியவைக்கிறேன்.... அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு. வயிறு நிறையச் சாப்பிட்டான். பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட

பென்சில்

Image
🌹பென்சில் போல் வாழ்ந்தால்...🍒🍒 *♻️ஒருவனுடைய உழைப்பு என்றுமே வீணாவதில்லை. அவன் எதிர்பார்த்த பலன் உடனே கிடைக்காமல் இருக்கலாம்.* *♻️பலன் கிடைக்கவில்லையே என்று மனம் தளர்ந்து உழைப்பதை விட்டு விடக்கூடாது.* *♻️பல மாதங்கள் தொடர்ந்து உழைத்து வந்தால் பெரிய பெரிய வெற்றிகளை நம்மால் பெற முடியும்.* *♻️ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார்..* *♻️வெற்றிக்கு யார் உங்களுக்கு வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள்.* *♻️இவர் தான்” என்று சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய திசையில், தங்க பிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்!* *♻️நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், இந்தப் பென்சில் எனக்கு ஐந்து செய்திகளைக் கற்றுத் தந்தது.* *♻️பல கருத்துக்களையும், சிந்தனைகளையும் எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது.* *♻️அவ்வப்போது நாம் அதை சீவுகிறோம். சீவும் போது எல்லாம் கூர்மையடைகிறது.* *♻️தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது.* *♻️வெளியே எப்படி இருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.* *♻️சின்னஞ்சிறிய பென்சிலாகும் அ

சித்ரகுப்தன்

Image
*சித்ரகுப்தன்* *ஆயுள் விருத்தி தரும் சித்ரகுப்தனை மனதார வழிபடுங்கள்...* சூரியன் உச்சம் பெறும் மாதமாக சித்திரை மாதம் உள்ளது. அந்த மாதத்தில் வரும் பௌர்ணமியில் சந்திரன் முழு மதியாக பலம் பெறுகிறார். இப்படி ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் பலம் பெறும் மாதம் என்பதால் சித்திரை மாத பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என புகழப்படுகிறது. சித்ரகுப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்ரகுப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் தருவார். அதனைக் கொண்டே உயிர்களின் அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார் என்பது மக்களின் நம்பிக்கை. *சித்ரகுப்தரின் பிறப்பு* பார்வதி அம்பாள் சித்ரம் எழுதி உயிர் கொடுத்தார். சித்ரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்ரகுப்தா என பெயர் பெற்றார் என்று சிலர் கூறுகின்றனர். காமதேனுவின் வயிற்றில் உதித்தார் என்றும், அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம், நைவேத்தியம் செய்யக்கூடாது. எருமைப்பால், எருமைத்தயிர்தான் அபிஷேகம், நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர். *சி

தென்றல்

Image
💫💕💕💕💕💕💫 *தென்றலுக்கோர்* *தாலாட்டு*  💫💕💕💕💕💕💫 *பூங்கதவே* *தாள்* *திறவாய்*  *பூங்கதவே* *தாள்* *திறவாய்*  பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் ... *நீரோட்டம்* *போலோடும்*  *ஆசைக்* *கனவுகள்* *ஊர்* *கோலம்*  ஆஹா ஹா  ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும் *காதல்* *தெய்வம்* *தான்* *வாழ்த்தும்*  *காதலில்* *ஊறிய*  *தாகம்* .. *ம்ம்* ... பூங்கதவே தாள் ... *திருத்* *தேகம்* *எனக்காகும்*  *தேனில்* *நனைந்தது* *என்* *உள்ளம்*  பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும் *மாலை* *சூடும்* *மங்கையிடம்*  *மங்கள* *வாழ்த்தொலி* *கீதம்* ... *ம்ம்* ... பூங்கதவே தாள் ... 💫💕💕💕💕💕💫 படம் : *நிழல்கள்*  பாடகர் : *தீபன்* *சக்ரவர்த்தி* *&* *உமா* *ரமணன்*  பாடலாசிரியர் : *வைரமுத்து*  இசை : *இளையராஜா*  💫💕💕💕💕💕💫

விற்பனை தொடக்கம்

Image
*சென்னையில் ஏப்.28ல் மோதும் சென்னை - ஐதராபாத் அணிகள்* நாளை காலை 10.40 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடக்கம் ரூ.1700 முதல் ரூ.6000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 46-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை காலை 10.40 மணிக்கு தொடங்கும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஆயிரத்து 700 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஆறாயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை PAYTM மற்றும் INSIDER இணைய பக்கங்களின் மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஜாலி

Image
 *தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது* தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் விடுமுறை தொடங்குகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மட்டும் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தாலி

Image
*எனது தாய் சோனியா காந்தி நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி* காங்கிரஸ் கட்சி பெண்களின் தங்கம், தாலியை பறிக்கும் என தேர்தலுக்காக பிரதமர் மோடி பேசி வருகிறார். போராட்டத்தின்போது உயிரிழந்த 600 விவசாயிகளின் மனைவிகளுடைய தாலி குறித்து பிரதமர் கவலைப்பட்டாரா? மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலை பட்டாரா?  காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது யாரேனும் உங்கள் தங்கத்தை, தாலியை பறித்தார்களா?  என்னுடைய பாட்டி இந்திரா காந்தி, போரின்போது இந்த நாட்டுக்காக தனது தங்கத்தை கொடுத்தார். எனது தாயார் நாட்டுக்காக தாலியை தியாகம் செய்தார் என்றார்.

நடவடிக்கை

Image
*67 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு.* மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.  அவற்றில் ஒரு மருந்து தவறான வா்த்தக பெயருடன் விற்பனைக்கு இருந்ததும் தெரியவந்துள்ளது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை மேற்கு வங்கம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.  நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.  அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் வலி, காய்ச்சல், ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, கிருமித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதன் விவரங்களை மத்திய ம

புலி இறப்பு

Image
*சேனாங்கோடு ரப்பர் தோட்டத்தில் புலி இறப்பு* கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சேனாங்கோடு மலைப் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் புலி புகுந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்துவதும் சிலரை தாக்கு உள்ளதும் தெரிய வந்தது. இந்த நிலையில்  வனப்பகுதியான ஒரு ரப்பர் தோட்டத்தில் புலி ஒன்று இறந்த நிலையில் கிடந்தது இது குறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்தில் விரைந்து சென்று இறந்த புலியை கைபற்றி  விசாரணை மேற்கொண்டனர்  அதில் அந்த புலியை ஏதோ மற்றொரு காட்டு மிருகம் தாக்கியதில் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

விலை கம்மி

Image
*ரயில் நிலையங்களில் குறைந்த விலையில் உணவு விற்பனை* ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் கீழ் லெமன் சாதம், பூரி ₹20, மசால் தோசை ₹50, 200 மிலி தண்ணீர் கேன் ₹3க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில் நிலைய நடைமேடையில் இதற்கான கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன

மஞ்சள் அலர்ட்

Image
*☂️வானிலை*☂️ கொளுத்தும் கோடை வெயில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக வெயில்

Image
கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல் *இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம்* இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம் (108.14°F) பிடித்துள்ளது.  ஆந்திராவின் அனந்தப்பூர் (110.3°F ) முதலிடத்திலும்  ஒடிசாவின் பரலாகிமுண்டி (109.04°F) 2ம் இடத்திலும் உள்ளன

உரிமை

Image
அடிப்படை உரிமைகள் யாது?  அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள – அடிப்படை உரிமைகள் 1. சமத்துவ உரிமை (பிரிவு 14-18) 2. சுதந்திர உரிமை (பிரிவு 19-22) 3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (23-24) 4. சமய உரிமை (25-28) 5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (29-30) 6. தீர்வு பெறும் உரிமை (பிரிவு 32-25)  சமத்துவ உரிமை   பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சட்டத்தின் முன்பு சமத்துவத்தையோ சம பாதுகாப்பை அரசு மறுக்கக் கூடாது.  பிரிவு 15 – எந்த குடிமகனையும் மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றில் ஏதனையாவது காரணம் காட்டி அவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது.  பிரிவு 16 – பொது வேலைவாய்ப்பில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.  பிரிவு – 17 தீண்டாமை ஒழிப்பு: தீண்டாதோர் என்று யாரையும் ஒதுக்கி வைத்தல் இச்சட்டத்தின் மூலம் அழிக்கப்படுகிறது. தீண்டாமை நடைமுறைப்படுத்தப் படுவதைத் தடுக்கிறது. தீண்டாமையின் மூலம் தகுதியிண்மை கடைப்பிடிக்கப்பட்டால் அது குற்றமாக கருதப்பட்டு தண்டிக்கப்படும்.  சுதந்திர உரிமை   பிரிவு 19 அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திர உரிமைகள் அ. பேச்சு மற்ற

தெரியுமா

Image
தூர்தர்ஷனில் சிவாஜி நடித்திருக்கிறார் யாருக்காவது தெரியுமா.  1974 ஆம் ஆண்டு மராட்டிய மன்னன் சிவாஜிக்கு 300 வது ஆண்டு நினைவாக  விழா கொண்டாடப்பட்டது அப்பொழுது அதை நினைவூட்டும் வகையில்  தூர்தர்ஷனில் ஒரு படம் எடுக்கலாம் என மராட்டிய அரசு திட்டமிட்டது. அப்பொழுது நடிகர் திலகர் சிவாஜி கணேசன் சத்ரபதி சிவாஜி ஆக நடிகக தேர்வு செய்யப்பட்டார். இந்த படம் எடுப்பதற்கு தேவையான செலவு முழுவதையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தாமே ஏற்றுக்கொண்டு முழு படத்தையும் தயாரித்து முடித்து கொடுத்தார். ஏவிஎம் ஸ்டுடியோ தனது பங்கிற்கு ஸ்டுடியோவில் ஏற்பட்ட செலவுகளை  அது ஏற்றுக்கொண்டது. 1974 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் பிரபலமாக ஓடிய சத்ரபதி சிவாஜி படம் அவருக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்தியது

எது இருந்தால் எது தேவை இல்லை

Image
*எது இருந்தால், எது தேவை இல்லை... ?* உங்கள் ஊரில் கருவேல மரம் இருந்தால் Tooth Paste தேவை இல்லை. உங்கள் வீட்டில் குப்பை மேனி செடி இருந்தால் Soap தேவை இல்லை. உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் shampoo தேவை இல்லை. உங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் Tea தூள் தேவை இல்லை. உங்கள் தெருவில் பூந்திக்காய் மரம் இருந்தால் Washing powder & Dish wash Soap தேவை இல்லை. உங்கள் வீட்டில் எழுமிச்சை, கரும்பு சர்க்கரை இருந்தால் Floor, bathroom, tiles cleaner தேவை இல்லை. உங்கள் வீட்டில் தேங்காய் இருந்தால் பாக்கெட் பால், தயிர் தேவை இல்லை. உங்கள் வீட்டில் மண் பானை இருந்தால் Water filter system தேவை இல்லை. உங்கள் ஊரில் பனை, தென்னை மரங்கள் இருந்தால் குளிர்பானங்கள் தேவை இல்லை. உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் கொசு விரட்டி தேவை இல்லை. உங்கள் வீட்டில் மூங்கில் கூடை இருந்தால் Fridge தேவை இல்லை. உங்கள் வீட்டில் செடி, கொடி, மரங்கள் இருந்தால் Ac தேவை இல்லை. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் அழகு சாதனப் பொருட்கள் தேவை இல்லை. *தேவையானதை இழந்து, தேவை இல்லாததை பெறும் நம் அடிமை வாழ்வு என்று மாறுமோ?* நீங்கள்

சிறப்பு ரயில்சேவை

Image
மே 2 முதல் #சென்னை_கடற்கரை முதல் #அரக்கோணம், #வேலூர் வழியாக #திருவண்ணாமலை வரை புதிய மெமு ரயில் சேவை தொடக்கம் #சென்னை_பீச் To #திருவண்ணாமலை சென்னை கடற்கரை - 18:00 வேலூர் கண்டோன்மெண்ட் - 21:35/21:40PM பெண்ணாத்தூர் - 21:50/21:51 கண்ணமங்கலம் - 22:04/22:05 ஒண்ணுபுரம் - 22:14/22:15 சேதராம்பட்டு - 22:20/22:21 ஆரணி ரோடு (களம்பூர்) - 22:28/22:29 வடமாதிமங்கலம் - 22:35/22:36 போளூர் - 22:46/22:47 திருவண்ணாமலை - 00:05 #திருவண்ணாமலை To #சென்னை_பீச் திருவண்ணாமலை - 4:00 போளூர் - 4:28/429 வடமாதிமங்கலம் - 4:39/4:40 ஆரணி ரோடு (களம்பூர்) - 4:46/4:47 சேதராம்பட்டு  - 4:54/4:55 ஒண்ணுபுரம் - 5:00/5:01 கண்ணமங்கலம் - 5:10/5:11 பெண்ணாத்தூர் - 5:24/5:25 வேலூர் கண்டோன்மெண்ட் - 5:40/6:00 சென்னை கடற்கரை - 9:50

கராத்தே

Image
வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் வள்ளலார் நடுநிலைப் பள்ளியில் கோடைகால கராத்தே பயிற்சி முகாம் தினசரி காலை 8 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது உங்கள் ஆண் பெண் குழந்தைகளை அனுப்பி தற்காப்பு கலையை கற்றுக் கொள்ளவும்  மாஸ்டர் நாதன் செல் 9942260247🥋🙏

அப்பாடா வெயில்

Image
*தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது!* தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள்!  ஈரோடு - 108°F  திருப்பத்தூர் - 107°F  சேலம் - 107°F  கரூர் பரமத்தி - 107°F  தருமபுரி - 105°F நாமக்கல் - 105°F திருச்சி - 104°F திருத்தணி, வேலூர் - 104°F கோவை - 103°F மதுரை விமான நிலையம் - 103°F மதுரை நகரம் - 101°F பாளையங்கோட்டை - 100°F  தஞ்சாவூர் - 100°F

அடிக்கடி தண்ணீர் குடிக்க முதல்வர் ஆலோசனை

Image
*கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாா்.* அடிக்கடி தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சாப்பிட அறிவுறுத்திய அவர், குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்களை வெப்பத்திலிருந்து காக்குமாறு வலியுறுத்தியுள்ளார் மேலும், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனக் கூறிய அவர், அரசு நிர்வாகம் கவனத்துடன் செயல்பட ஆணையிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

புதிய வரவு

Image
*அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி*  *-விரைவில் அறிமுகமாகும் சொமேட்டோவின் புதிய அம்சம்* கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது Zomato மேலும் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான Platform Fee எனப்படும் கட்டணத்தையும் ₹5ஆக உயர்த்துகிறது.

நீர் மோர் பந்தல் திறப்பு

Image
*வேலூர் மாநகரம் வேலூர் மேற்கு பகுதி கழகத்தின் செயலாளர் எஸ் நாகு என்கிற நாகராஜன் தலைமையில் வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அன்பு சகோதரர் எஸ் ஆர் கே அப்பு அவர்களின் முன்னிலையில்.. மாவட்ட மாணவரணி நிர்வாகி விபிஎம். குமார்.. ஏற்பாட்டில் மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்... கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ✌️ அவர்களின் ஆணைக்கிணங்க... கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க கழகத்தின் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா சீரும் சிறப்புமாக மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழக செயலாளர் வட்டக் கழகச் செயலாளர்கள் பிற அணி நிர்வாகிகள்...  கலந்து கொண்டு.. சிறப்பித்தனர்...  சூளை கே எம் ஆனந்தன் வேலூர் ❤️*