Posts

Showing posts from August, 2023

கைது

Image
காட்பாடியில் நடந்து சென்றவரிடம்  செல்போன் பறித்த ஆந்திராவைச் சேர்ந்த 4பேர் கைது 9 செல்போன்கள், கார் பறிமுதல் காட்பாடியில் நடந்த சென்ற வருடம் செல்போன் பறித்துக் கொண்டு தப்பியோடிய கும்பலை போல போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர் அவர்களிடம் இருந்து 9 செல்போன்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்த காரை பறிமுதல் செய்தனர் இந்த சம்பவம் பற்றி போலீஸ் அரசியல் கூறப்படுவதாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த திருத்தணி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் வயது 54 இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது காரில் வந்த நான்கு பேர் அவர் சட்டை பையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர் இது குறித்து சீனிவாசன் காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் உடனே குடியாத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்த காரை துரத்தி பிடித்து மடக்கினர் காரில் இருந்தவரிடம் விசாரித்த போது அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.  அவர்கள் ஆந்திர மாநிலம் மேற்க

கைது

Image
வன விலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது ஆம்பூர், ஏப். 6– ஆம்பூர் அருகே, வன விலங்குகளை வேட்டையாட முயன்றவரை துப்பாக்கியுடன் வனத்துறையினர் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் வனத்துறையினர் இன்று காலை  நாயக்கனேரி  காப்புக்காட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அதில், மூணுகல் மலையில் சென்ற போது, வாலிபர் ஒருவர் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றிக்கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பனங்காட்டேரி பகுதியை சேர்ந்த திருப்பதி, 23, என்பதும், வன விலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. ஆம்பூர் வனத்துறையினர் அவரை கைது செய்து நாட்டு துப்பாக்கி ஒன்றை பறிமுதல்  செய்தனர்.  

நடுக்கல்

Image
15 ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுக்கல் கண்டெடுப்பு திருப்பத்துார்,  திருப்பத்துார் அருகே, 15 ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுக்கல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து திருப்பத்துார் துாய நெஞ்சக்  கல்லுாரி  பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்துார் அருகே புதுப்பேட்டை காட்டூர் ஏரி கால்வாயை நாட்டு நலப்பணிகள்  திட்டத்தில், கல்லுாரி மணவர்கள் சுத்தம் செய்தனர். அதில் நடுக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதை ஆய்வு செய்ததில், 15 ம் நுாற்றாண்டை சேர்ந்த விஜய நகர காலத்து நடுக்கல் என்பதும்,. 4 அடி உயரமும். 2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் அமைக்கப்பட்ட நடுக்கல்லில், இடது கையில் வில்லும், வலது  கையில் அம்பும் வைத்துள்ள வீரனின் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. போரில் வீர மரணம் அடைந்த வீரினின் ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக இந்த நடுக்கல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டி

Image
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தனி நிநி நிலை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் இ. கு. கட்சி  தலைவர் தமிழரசன்   குடியாத்தம், ஏப். 6– பட்ஜெட் கூட்டத்தொடரில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு  தனி நிநி நிலை அறிக்கையை  தமிழக அரசு வெளியிட வேண்டும் என இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு. தமிழரசன்  கூறினார். வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் தமிழரசன் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடரில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தனி நிநி நிலை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.  கல்வித்துறையில் பொதுப்பள்ளிகளுடன் ஆதிதிராவிட பள்ளிகள் இணைக்கும் திட்டத்தை கை விட வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும். புத்த பூர்ணிமாவுக்கு மத்திய, மாநில அரசுகள் விடுமுறை அறிவிக்க வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மதமாற்ற சட்டத்தை கட்டாயமாக அமல்படுத்தி சிறுபான்மையின மக்களை நசுக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் தலித்குமார்,  செயலாளர் அசோக்குமார் உடனிருந்தனர்.

மீன்கள்

Image
தடுப்பணையில் செத்து மிதந்த மீன்கள் சோளிங்கர், ஏப். 6– சோளிங்கர் தடுப்பணையில், மீன்கள் செத்து மிதந்தது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்குப்பட்ட எசையனுார் தடுப்பணையில் மீன்கள் வளர்க்கப்படுகிறது.  தடுப்பணையில் இன்று  காலை ஏராளமான மீன்கள்  செய்து மிதந்து துர்நாற்றம் வீசியது. சோளிங்கர் நகராட்சி ஊழியர்கள் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தி தடுப்பணையை சுத்தம் செய்தனர். விசாரணையில், சோளிங்கர் நகராட்சி கழிவுநீர் கலந்ததால் மீன்கள் செய்தது தெரியவந்தது.

பறிமுதல்

Image
ராணிப்பேட்டை மாவட்டம்  வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் சாலை ஓரம் உள்ள புதரில் செம்மரம் இருப்பதாக திருவலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் போலீசார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து சாலை ஓரம் உள்ள புதரில் இருந்த சுமார் 300 கிலோ எடை கொண்ட 10 செம்மரக்கட்டைகள் மீட்கப்பட்டு ஆற்காடு வன சரகர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது

பரிசு

Image
🔸  *செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் வடக்கு மண்டல காவல் துறை தலைவர் மரு.K.கண்ணன்,இ.கா.ப., அவர்களின் தலைமையில் 03.04.2023 மற்றும்  04.04.2023 ஆகிய இரண்டு நாட்கள் வடக்கு மண்டல காவல்துறையினர் அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகள நடைபெற்றது.* *இதில் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் முதலிடத்தையும், இன்சாஸ் (INSAS) ரக துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடத்தையும், பிஸ்டல் (PISTOL) ரக துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டாம் இடத்தையும் வென்றார்.* *மேலும் வந்தவாசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.N.கார்த்தி அவர்கள் ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் மூன்றாமிடத்தையும் வென்றார்.* *இதன் தொடர்ச்சியாக பெண் காவலர்களுக்கென நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட திருவண்ணாமலை மாவட்ட பெண் காவல் ஆளிநர்கள் ஐந்து பதக்கங்களை வென்றனர்.*

பரிசு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியில் தண்ணிப் பாம்பை வாயால் கடித்து துப்பிய சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் சின்ன கைனுர் சேர்ந்த மோகன் (33) சூர்யா (21) சந்தோஷ் (21) ஆகிய மூன்று பேர் கைது ராணிப்பேட்டை ஆற்காடு வனச்சரக அலுவலர் சரவண பாபு நடவடிக்கை பாம்பை வாயால் கடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவத்தில் அரக்கோணம் பகுதியை சேர்ந்த மூவர் கைது

கைது

Image
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியில் தண்ணிப் பாம்பை வாயால் கடித்து துப்பிய சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் சின்ன கைனுர் சேர்ந்த மோகன் (33) சூர்யா (21) சந்தோஷ் (21) ஆகிய மூன்று பேர் கைது ராணிப்பேட்டை ஆற்காடு வனச்சரக அலுவலர் சரவண பாபு நடவடிக்கை பாம்பை வாயால் கடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவத்தில் அரக்கோணம் பகுதியை சேர்ந்த மூவர் கைது

சுதந்திர தின விழா

Image
அனைவருக்கும் சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் தென்னம்பட்டு சுவாமி தயானந்த சரஸ்வதி எய்ம் பார் சேவா சார்பாக இயங்கும் பெண் மாணவர்கள் விடுதியில் இன்று 77 வது விடுதலை திருநாளை முன்னிட்டு அடியேன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினேன் நிகழ்ச்சியில் திரு அறிவொளி ஆனந்தன் மற்றும் காப்பக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்

பாதுகாப்பு

Image
*சுதந்திர தின பாதுகாப்பு பணி*  ஆகஸ்டு மாதம் 15-ம் நாள் 76 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் இரண்டு கூடுதல்  காவல் கண்காணிப்பாளர்கள், ஐந்து துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் , காவல் உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1200 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள்*  மாவட்டம் முழுவதும் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

புகார்

Image
மரம் வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக பிரமுகர் புகார் வேலுார், ஆக 11– வேலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார். அப்போது வேலுார் சத்துவாச்சாரி பேஸ் 3 பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் வள்ளலார் ரமேஷ் என்பவர் கொடுத்த மனுவில், சத்துவாச்சாரி பேஸ் 3 பிஎப்., அலுவலகம் செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான ரூ 1 லட்சம்  மதிப்பிலான மரங்களை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மர்ம நபர்கள் வெட்டி  கடத்தியுள்ளனர். இது குறித்து  அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல், நெடுஞ்சாலை, வீட்டு வசதி வாரியம் என மாறி, மாறி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.   இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது போல பொது மக்கள் தரப்பில் 22 மனுக்கள் கொடுக்கப்பட்டது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., மணிவண்ணன் உத்தரவிட்டார். கூடுதல்  காவல்  துறை கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், கெளதமன் கலந்து கொண்டனர்.

அலங்காரம்

Image
வேர்க்கடலையில் அலங்காரம் வேலுார், ஆக 11– வேலுார் மாவட்டம்,  காட்பாடி வஞ்சியம்மன் கோவிலில் 4 வது ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு வேர்க்கலையில் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான  பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

பேரணி

Image
பேரணி வேலுார், ஆக 11– போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி வேலுார் நடந்தது. மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தொடங்கி வைத்தார். வேலுார் டவுன் ஆலில் இருந்து புறப்பட்ட பேரணி ஊரிசு  கல்லுாரி வரை சென்றது. இதில் கலந்து கொண்ட கல்லுாரி மாணவ, மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர். இதில் காட்பாடி டிஎஸ்பி பழனி, குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, வேலுார்  டிஎஸ்பி திருநாவுக்கரசு கலந்து கொண்டனர்.

உறுதி மொழி

Image
*போதைப் பொருளற்ற தமிழ்நாடு*  *பெருந்திரள் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல்* ***** தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களின் ஆணையின் படி பெருந்திரள் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிமொழி அவர்கள் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர் இடைநிலை கல்வி மு. அங்கு லட்சுமி, அவர்கள் முன்னிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் எல் ஜெய்சங்கர், கே. கோபாலகிருஷ்ணன் நேர்முக எழுத்தர் எஸ்.தமிழ்ச்செல்வி, தலைமை ஆசிரியர்கள் லதா, கோ. பழனி ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா. ஜனார்த்தனன் அலுவலக பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்றது போதைப் பொருள் பயன்பாடு அற்ற தமிழ்நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

உறுதி மொழி

Image
*போதைப் பொருளற்ற தமிழ்நாடு* முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிமொழி தலைமையில்  *பெருந்திரள் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல்* ***** தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களின் ஆணையின் படி பெருந்திரள் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிமொழி அவர்கள் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர் இடைநிலை கல்வி மு. அங்கு லட்சுமி, அவர்கள் முன்னிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் எல் ஜெய்சங்கர், கே. கோபாலகிருஷ்ணன் நேர்முக எழுத்தர் எஸ்.தமிழ்ச்செல்வி, தலைமை ஆசிரியர்கள் லதா, கோ. பழனி ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா. ஜனார்த்தனன் அலுவலக பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்றது போதைப் பொருள் பயன்பாடு அற்ற தமிழ்நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த உறுத

உறுதி மொழி

Image
நாள்.12.08.2023 *காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு-12 ஜெனிவா உடன்படிக்கை நாள் விழாவில்* *ரெட்கிராஸ் உறுதிமொழி ஏற்பு*  ------------------------------------------       ஜெனிவா உடன்படிக்கை 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவா உடன்படிக்கை நாள் ஆகஸ்டு 12 அன்று கொண்டாடப்படுகிறது. ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஜெனிவா உடபடிக்கை குறித்து விளக்கி பேசினார். வேலூர் மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பும் இணைந்து இன்று 12.082023 காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.       பள்ளித்தலைமையாசிரியர் கோ.சரளா தலைமை தாங்கினார்.  முன்னதாக அறிவியல் ஆசிரியர் எஸ்.கலைச்செல்வன் வரவேற்று பேசினார்.  உதவித்தலைமையாசிரயர் எம்.மாரிமுத்து, காட்பாடி ரெட்கிராஸ் அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.   ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஜெனிவா உடபடிக்கை குறித்து விளக்கி பேசினார். அப்போத

பாராட்டு

Image
*30 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனனுக்கு*  *மிகை சிறப்பு நிலை ஆணை வழங்கி*  *மாவட்டக்கல்வி அலுவலர் மு.அங்குலட்சுமி பாராட்டு* &&&&&& வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியரக பணியாற்றி வரும் செ.நா.ஜனார்த்தனன் முப்பது ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றி வருவதால் மிகை சிறப்பு நிலை நன்னர் நிலை ஆணை வழங்கி மாவட்டக்கல்வி அலுவலர் இடைநிலைக்கல்வி மு.அங்குலட்சுமி பாராட்டினார். 16.10.1992ல் முறையான பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்பட்டு கடந்த 2002ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் பணி முடித்த அவருக்கு தேர்வுநிலை வழங்கப்பட்டது 2012ஆம் ஆண்டில் 20 ஆண்டுகள் பணி முடித்த நிலையில் சிறப்பு நிலை ஆணை வழங்கப்பட்டது.  தற்போது 16.10.2022ல் 30 ஆண்டுகள் பணி முடித்த நிலையில் அன்னருக்கு மிகை சிறப்பு நிலை என்னும் நன்னர் நிலை ஆணை வழங்கப்பட்டுள்ளது.  அரசாணை எண் : 562 நிதி நாள் ( ஊதியக்குழு ) நாள் : 28-07-1996 , அரசாணை 303 நிதித்துறை நாள் 11.10.2017 மற்றும் அரசாணை எண்.151 பள்ளிக்கல்வித்துறை நாள் 09.09.2022ன்படி . வேலூர

குத்து

Image
வேலூர்     13-8-23   இரண்டு போலீசாருக்கு கத்திக்குத்து   கஞ்சா போதை வாலிபர்கள் ஐந்து பேர் தப்பி ஓட்டம்      வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை பூங்கா அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஐந்து வாலிபர்கள் மது போதையில் கலாட்டா செய்து கொண்டிருந்தனர்  ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்கள்  பாலாஜி மற்றும் தமிழ் ஆகியோர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று கலாட்டா செய்து கொண்டிருந்த கஞ்சா போதை வாலிபர்களிடம் அங்கிருந்து போகக்கூறிய போது அவர்கள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர்களை குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர்இதில் காயம் அடைந்த காவலர்கள் இருவரும் வேலூர் பெண்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து  காவலர்களை கத்தியால் குத்திய  வாலிபர்களை தேடி வருகின்றனர்    

தரிசனம்

Image
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக வேலூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., 2 ஆண்டுகள் பதவி வகித்தார்.  அவரின் பதவி காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. பதவி கடைசி நாளில் வேலூர் அடுத்த வெட்டுவாணத்தில் உள்ள திருநங்கைகளை வேலூரில் இருந்து வேன் மூலம் திருமலைக்கு அழைத்து சென்றனர்.  அங்கு அவர்களை ஏழுமலையானை தரிசிக்க வைத்து மீண்டும் அழைத்து வந்து வேலூரில் இறக்கி விட்டனர். இதுகுறித்து ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., கூறியதாவது; *பக்தர்களுக்கு சேவை* திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்று கொண்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு சேவையாற்றி உள்ளேன். அறங்காவலர் குழு உறுப்பினராக என்னுடைய பதவி காலத்தில் வேலூர் மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் 12 பக்தர்களை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் என்னுடைய  சொந்தவேன் மூலம் திருமலைக்கு அழைத்து சென்றேன்.  *ஏழுமலையான் தரிசனம்* அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வைத்து மீண்டும் வேலூர் கொண்டு வந்து விடப்பட்டனர். அவர்

புகார்

Image
மரம் வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக பிரமுகர் புகார் வேலுார், ஆக  வேலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார். அப்போது வேலுார் சத்துவாச்சாரி பேஸ் 3 பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் வள்ளலார் ரமேஷ் என்பவர் கொடுத்த மனுவில், சத்துவாச்சாரி பேஸ் 3 பிஎப்., அலுவலகம் செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான ரூ 1 லட்சம்  மதிப்பிலான மரங்களை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மர்ம நபர்கள் வெட்டி  கடத்தியுள்ளனர். இது குறித்து  அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல், நெடுஞ்சாலை, வீட்டு வசதி வாரியம் என மாறி, மாறி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.   இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது போல பொது மக்கள் தரப்பில் 22 மனுக்கள் கொடுக்கப்பட்டது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., மணிவண்ணன் உத்தரவிட்டார். கூடுதல்  காவல்  துறை கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், கெளதமன் கலந்து கொண்டனர்.

காலை தரிசனம்

Image
🚩  *காலை தரிசனம் !* *தேசியக்கொடி தரிசனம் !!* "கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்.. சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்.. சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்...!!" (பாரதியார்) இன்று செவ்வாய்க்கிழமை ! இன்று மாதாந்திர சிவராத்திரி ! ஸோபகிருது வருடம் :  ஆடி மாதம் 30 ஆம் நாள் ! ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி ! (15-08-2023) இன்றைய திதி :  தேய்பிறை :  சதுர்த்தசி மதியம் 01-50 மணிவரை, அதன்பிறகு அமாவாசை ! இன்றைய நட்சத்திரம் : பூசம்.. மாலை 03-45 மணி வரை,பிறகு ஆயில்யம் !! யோகம் : சித்தயோகம் !! இன்று மேல் நோக்கு நாள் ! சந்திராஷ்டமம் : இன்று தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் :  மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! எமகண்டம் :  காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை !! குளிகை :   மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !! சூலம் :  வடக்கு ! பரிகாரம் : பால் !! கரணம் :  காலை: 07-30 மணி முதல் 09-00 மணி வரை ! நல்ல நேரம் :  காலை :  08-00 மணி முதல் 09-00 மணி வரை ! மதியம் :  12-00 மணி முதல் 01-00 மணி

கைது

Image
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியில் தண்ணிப் பாம்பை வாயால் கடித்து துப்பிய சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் சின்ன கைனுர் சேர்ந்த மோகன் (33) சூர்யா (21) சந்தோஷ் (21) ஆகிய மூன்று பேர் கைது ராணிப்பேட்டை ஆற்காடு வனச்சரக அலுவலர் சரவண பாபு நடவடிக்கை பாம்பை வாயால் கடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவத்தில் அரக்கோணம் பகுதியை சேர்ந்த மூவர் கைது

கைது

Image
தண்ணிப்பாம்பை வாயால் கடித்து கொன்று துப்பிய 3 பேர் கைது அரக்கோணம், ஏப். 6– அரக்கோணம் அருகே, தண்ணிப்பாம்பை வாயால் கடித்து கொன்று துப்பிய மூன்று பேரை வனத்துறையினர் கைது  செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே சின்ன கைனுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன், 33, சூர்யா, 21, சந்தோஷ், 21. விவசாய கூலி தொழிலாளர்கள்.  இவர்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் (4)ல் காலை 8:00 மணிக்கு சின்ன கைனுார் ஏரிக்கரையோரம் சுற்றிக்கொண்டிந்த தண்ணிப்பாம்பை பிடித்தனர். பின் அதை மூவரும் கைகளால் ஒன்றாக பிடித்து வாயால்  கடித்து கொன்று துப்பினர். இந்த காட்சி வீடியோவாக சமூக வளைதலங்களில் வைரலாக பரவியது.  ஆற்காடு வனச்சரக அலவலர் சரவவணபாபு விசாரணை நடத்தி மூவரையும் நேற்று ( 5) கைது  செய்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது

Image
தண்ணிப்பாம்பை வாயால் கடித்து கொன்று துப்பிய 3 பேர் கைது அரக்கோணம், ஏப். 6– அரக்கோணம் அருகே, தண்ணிப்பாம்பை வாயால் கடித்து கொன்று துப்பிய மூன்று பேரை வனத்துறையினர் கைது  செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே சின்ன கைனுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன், 30, சூர்யா, 21, சந்தோஷ், 20. விவசாய கூலி தொழிலாளர்கள்.  இவர்கள் மூன்று பேரும் நேற்று  (4)ல் காலை 8:00 மணிக்கு சின்ன கைனுார் ஏரிக்கரையோரம் சுற்றிக்கொண்டிந்த தண்ணிப்பாம்பை பிடித்தனர். பின் அதை மூவரும் கைகளால் ஒன்றாக பிடித்து வாயால்  கடித்து கொன்று துப்பினர். இந்த காட்சி வீடியோவாக சமூக வளைதலங்களில் வைரலாக பரவியது.  ஆற்காடு வனச்சரக அலவலர் சரவவணபாபு விசாரணை நடத்தி மூவரையும் இன்று ( 5) கைது  செய்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான மூவரும் பல விதமான பாம்புகளை கொன்று அதன் தோலை விற்பனை செய்து வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கைது

Image
காரில் வந்து மொபைல் போன் திருடிய 4 பேர் கைது வேலுார், ஏப். 6– காரில் வந்து மொபைல் போன் திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். வேலுார், காட்பாடி, சத்துவாச்சாரி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்டு, காய்கறி மார்க்கட் பகுதியில் மொபைல் போன்கள்  திருட்டு அதிகம் நடந்து வந்தது. குற்றவாளிகளை பிடிக்க காட்பாடி போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று  (4) மாலை 4:00 மணிக்கு காட்பாடி சித்துார் பஸ் ஸ்டாண்டில் கார் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் காரை மடக்கி அதிலிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள்,  ஆந்திரா மாநிலம், கோதாவரி மாவட்டம், அக்கிவேடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், 22, மோகன், 25, பாலாஜி, 20, டேவிட், 35, என்பதும், இவர்கள் தினமும் காலை 8:00 மணிக்கு காரில் வேலுாருக்கு வந்து கூட்ட நெரிசல் உள்ள பகுதிக்கு சென்று மக்களிடமிருந்து  மொபைல் போன்களை திருடிக்கொண்டு இரவு 9:00 மணிக்கு ஆந்திரா மாநிலம், சித்துாருக்கு சென்று ஓட்டலில் தங்கி  உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை  கைது  செய்து, காருடன் சேர்த்து 1

முற்றுகை

Image
 மாத்திரையில் கம்பி ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை திருப்பத்துார், ஏப். 6– வெலக்கல்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்ததை கண்டித்து உறவினர்கள் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். திருப்பத்துார் மாவட்டம், வேப்பல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 45. விவசாயி. அவர் மகள் மோனிகா, 7. அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். மோனிகாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.  நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்று பிற்பகல் 12:00 மணிக்கு அழைத்து வந்தனர். மோனிகாவை பரிசோதித்த டாக்டர்கள், பாராசிட்மால் மாத்திரையை கொடுத்து காலை, இரவு அரை மாத்திரை சாப்பிடும்படி கொடுத்தனர்.  வீட்டிற்கு சென்ற சக்திவேல், மாத்திரையை இரண்டாக உடைத்த போது அதில் கம்பி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வெலக்கல்நத்தம்  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மாத்திரையில் கம்பி இருப்பதை காட்டிய போது அங்கிருந்த செவிலியர்கள் பதில் சொல்ல மறுத்துவிட்டர். ஆத்திரமடைந்த சக்திவேல் உறவினர்களோடு மதியம் 2:30 மணிக்கு ஆரம்ப ச

பலி

Image
2 குழந்தைகளை கொன்ற தாயும் சாவு ஆம்பூர், ஏப். 6– ஆம்பூரில், இரண்டு குழந்தைகளை கொன்ற தாயும் இறந்தார். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜமுனா, 35. இவரது கணவர் மகேஷ்குமார், 40. இவர்களுக்கு யாசிகா, 6,  யாதிகா, 2, ஆகிய மகள்கள் இருந்தனர். குடும்ப பிரச்சனையால் மகேஷ்குமார்  மனைவியை விட்டு பிரிந்து  கர்நாடகா மாநிலம், மைசூருக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ஜமுனா கடந்த 3 ம் தேதி  மாலை  இரண்டு பெண் குழந்தைகளுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்து அவர்கள்  மயங்கி விழுந்த போது கழுத்தை நெறித்து கொலை  செய்து விட்டு, அவரும் விஷம் குடித்தார். வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜமுனா இன்று மதியம் 2:00 மணிக்கு இறந்தார். ஆம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கைது

Image
அமைச்சர் துரைமுருகனை சமூக வலைதளத்தில் தவறாக சித்தரித்த அ.தி.மு.க., பிரமுகர் கைது வேலுார், ஏப். 6– அமைச்சர் துரைமுருகனை சமூக வலைதளத்தில் தவறாக சித்தரித்த அ.தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது  செய்தனர். நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  கடந்த மாதம் 29 ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசும் போது,  தன்னுடைய மரணத்திற்கு பிறகு புதை குழியில் இங்கே கோபாலபுரத்து விசுவாசி உறங்குகிறான் என எழுதினால் போதும் என உருக்கமாக பேசினார். இதை சிலர் அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை ஒரு கல்லறையில் உள்ளது போன சித்தரித்து சில வாசகங்களையும் குறிப்பிட்டு, அதனுடன் ஆடியோவை இணைத்து வீடியோவாக சமூக வலைதளத்தில்  பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இவ்வாறு வதந்தி பரப்பி பிரச்சனையை ஏற்படுத்தும் முகநுால் பதிவை சமூக வலைதலங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலுார் மாவட்டம், காட்பாடி  வடக்கு பகுதி தி.மு.க., செயலாளர் வன்னியராஜா காட்பாடி போலீசில் கடந்த 1ம் தேதி புகார் செய்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு பொள்ளாச்சி 20 வத

சஸ்பெண்ட்

Image
பட்டாவில் முறைகேடு  செய்த வி.ஏ.ஓ., சஸ்பெண்ட் வேலுார், ஏப். 7– பட்டாவில் முறைகேடு  செய்த பி.கே. புரம் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்  செய்யப்பட்டார். வேலுார் மாவட்டம், கே.வி. குப்பம் அருகே செண்ணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 48. இவர் பி.கே. புரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் அரசுக்கு சொந்தமான கிராமப்புறங்களில் உள்ள நிலங்கள், பாதைகள் மற்றும் தனியார் நிலங்களை உரிய ஆவணங்கள் இன்றி விரும்பும் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொடுப்பதும், அதற்கு மதிப்பிற்கு தக்கபடி லஞ்சம் வாங்கிக் கொள்வதாக புகார்கள் வந்தன. மாவட்ட  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நடத்திய விசாரணையில், சங்கர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து சப் கலெக்டர் வெங்கட்ராமன் இன்று உத்தரவிட்டார்.