Posts

Showing posts from June, 2022

காலை தரிசனம்

Image
🚩  *காலை தரிசனம் !* *அம்பாள் தரிசனம் !!* சுபகிருது வருடம் :  ஆனி மாதம் 17 ஆம் நாள்....! ஜூலை மாதம் : முதல் தேதி :  (01-07-2022) இன்று வெள்ளிக்கிழமை ! சூரிய உதயம் :  காலை : 06-06 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-34  மணி அளவில் ! இன்றைய திதி : வளர்பிறை : திரிதியை ! துவிதியை.. காலை 12-30 மணி வரை ! அதன்பிறகு   திரிதியை !! இன்றைய நட்சத்திரம் :  பூசம் ! பூசம்... பின் இரவு 03-30 மணி வரை ! அதன் பிறகு ஆயில்யம் !! இன்று  மேல் நோக்கு நாள் ! யோகம் :   நன்றாக இல்லை ! சந்திராஷ்டமம் : இன்று தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் :  காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! எமகண்டம் : மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! குளிகை :  காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! சூலம் :  மேற்கு : பரிகாரம் : வெல்லம் ! கரணம் :  மாலை : 01-30 மணி முதல் 03-00 மணி வரை ! நல்ல நேரம் :  காலை : 06-00 மணி முதல் 09-00 மணி வரை !! 10-00 மணி முதல் 10-30 மணி வரை !! மதியம் : 01-00 மணி முதல் 03-00 மணி வரை !! இரவு : 08-00 மணி முதல் 11-00 மணி வரை !! இன்றைய சுப ஓரைகள் : சுக்கிர ஓரை : காலை : 06-0

வணக்கம்

Image
நிம்மதியாக வாழ மனதை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும், இல்லையேல் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.... 😊இனிய வணக்கம்🙏

தலைவர் வழி தொடர்வேன்

Image
முப்பது ஆண்டு கால அரசியல் வாழ்வில், என்ன சாதித்தோம் என்பதை விட நான் உயிராய் நேசிக்கும், உலக தமிழர்களின் ஒப்பற்றத்தலைவர், இந்திய ஒன்றியத்தின் முதன்மையான முதல்வர், நம் இனத்தின் ஒப்பற்ற தானை தலைவர், சின்ன கலைஞர் என் தலைவர் தங்கதளபதியார் அவர்களின் பாராட்டு ஒன்றே நான் அடைந்த வாழ்நாள் பாக்கியம், புண்ணியம்.  ஒரு தொண்டனுக்கு இதைவிட பெருமை வேறொன்றும் இருக்கமுடியாது.  தலைவர் கலைஞரை வணங்கி, நம் இனத்தின் தலைவர் தங்கதளபதியார் கரத்தை வலுப்படுத்த என் உயிர்மூச்சு உள்ளவரை பாடுபடுவேன்.  மக்களுக்கான தேவையை, தலைவர் வழித்தொட்டு என்றும் தொடர்வேன். நம் அன்பு அண்ணன்.. MLA நந்தகுமார் அவர்கள்..   நமக்காக வேலூர் கோட்டை மைதானத்தில் *அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும்* விழாவில் *கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தங்கதளபதி* அவர்கள் கலந்து கொண்ட அவர்களுக்கு *வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்* அவர்கள் கருப்பு சிவப்பு பாதாம் பருப்பு மாலை அணிவித்து செங்கோல் வழங்கி சிறப்புரையாற்றினார்.  நம் அன்பு அண்ணனை .. MLA நந்தகுமார் அவர்களளை முதலமைச்சர் தளபதி.... ஸ்டாலின் அவர்கள்

என் சக்தியை மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன் முதல்வர் ஸ்டாலின்

Image
55ஆண்டு காலம் அரசியலில் உள்ள எனக்கு இனிமேல் எதற்கு விளம்பரம் முதல்வர் ஸ்டாலின் 55ஆண்டு காலம் அரசியலில் உள்ள எனக்கு இனிமேல் எதற்கு விளம்பரம் என ராணிப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 118.40 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து ராணிப்பேட்டையில் தீரர் சத்தியமூர்த்தி அரசு நடுநிலைப்பள்ளிக்கு திடிர் என சென்ற முதல்வர் ஆய்வு செய்தார். மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளிக்கு தேவை குறித்த விவரங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அப்போது நாங்கள் அனாதைகள் என மாணவர்கள் கூறியதை கேட்ட முதல்வர், இனிமேல் நான் இருக்கிறேன், நீங்கள் அனாதைகள் இல்லை என்று  கூறியதை கேட்ட மாணவர்கள் கண்ணீர்        விட்டனர். பின்னர் ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 250 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 60, 577 பேருக்கு வழங்கிய முதல்வர், 32. 18 கோடி ரூபாய் மதிப்பட

காலணி உற்பத்தி பூங்கா முதல்வர் ஸ்டாலின் தகவல்

Image
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் 400 கோடி ரூபாய் மதிப்பில், காலணிஉற்பத்தி பூங்கா மையம் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு. ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து , சுமார் 70,000 பயனாளிகளுக்கு சுமார் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர்  விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் 36 ஆயிரம் பேர் பங்களிப்புடன், 187 டன் நெகிழி கழிவுகளை 3 மணி  நேரத்தில் சேகரித்து உலக சாதனை படைத்துள்ளது.இது போன்ற ஒரு சாதனை மாவட்ட நிர்வாகம் செய்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களும் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பொதுமக்களுக்கு மஞ்சப் பை வாழங்கும் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என கூறினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன , அதன் கா

எனக்கு எதற்கு விளம்பரம் தமிழக முதல்வர்

Image
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் 400 கோடி ரூபாய் மதிப்பில், காலனி உற்பத்தி பூங்கா மையம் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு. ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து , சுமார் 70,000 பயனாளிகளுக்கு சுமார் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர்  விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் 36 ஆயிரம் பேர் பங்களிப்புடன், 187 டன் நெகிழி கழிவுகளை 3 மணி  நேரத்தில் சேகரித்து உலக சாதனை படைத்துள்ளது.இது போன்ற ஒரு சாதனை மாவட்ட நிர்வாகம் செய்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களும் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பொதுமக்களுக்கு மஞ்சப் பை வாழங்கும் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என கூறினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிக அளவில் உள

காலை தரிசனம்

Image
🚩  *காலை தரிசனம் !* *குருவார தரிசனம் !!* சுபகிருது வருடம் :  ஆனி மாதம் 16 ஆம் நாள்....! ஜூன் மாதம் : 30 ஆம் தேதி :  (30-06-2022) இன்று வியாழக்கிழமை ! சூரிய உதயம் :  காலை : 06-06 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-34  மணி அளவில் ! இன்றைய திதி : வளர்பிறை : துவிதியை ! பிரதமை.. காலை 10-40 மணி வரை ! அதன்பிறகு  துவிதியை !! இன்றைய நட்சத்திரம் :  புனர்பூசம்.. புனர்பூசம்... பின் இரவு 01-10மணி வரை ! அதன் பிறகு பூசம்  !! இன்று  சம நோக்கு நாள் ! யோகம் :   அமிர்தயோகம் ! சந்திராஷ்டமம் : இன்று மாலை 06-30 மணி வரை விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் ! அதன்பிறகு.. தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம் !! ராகுகாலம் :  மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !! எமகண்டம் :  காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !! குளிகை :   காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !! சூலம் : தெற்கு ! பரிகாரம் : தைலம் !! கரணம் :  மாலை: 03-00 மணி முதல் 04-30 மணி வரை ! நல்ல நேரம் :  காலை :  09-00 மணி முதல் 12-00 மணி வரை ! மாலை :  04-00 மணி முதல் 07-00 மணி வரை ! இரவு : 08-00 மணி முதல் 09-00 மணி வரை ! இன்றைய சுப ஓரைகள்

பாலாறு மலர் தூவி மரியாதை செலுத்திய கவர்னர்

Image
பாலாற்றில் மலர் துாவி மரியாதை செய்த கவர்னர் ராணிப்பேட்டை, ஜூன் 29 ராணிப்பேடடை பாலாற்றில் கவர்னர் ரவி மலர் துாவி மரியாதை செய்தார். வேலுாரில் பாலாறு பெருவிழா ஐந்து நாள் மாநாடு நடந்து வருகிறது. இதில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்றார். விழா முடிந்ததும் வேலுார் தங்கக்கோவிலை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார். தங்கக் கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி பீடம் மேலாளர் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து சென்னை செல்லும் வழியில், ராணிப்பேட்டை   மேம்பலத்தின் மீது நின்று பாலாற்றுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். 

ஆலோசனை கூட்டம்

Image
அன்புடையீர் !  வணக்கம்.  தமிழ்நாடு ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர்கள் நலன் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை கூட்டம் வரும் 30- 6 -2022, வியாழக்கிழமை காலை 10.மணிக்கு காட்பாடி (சித்தூர் பஸ் நிலையம்) லட்சுமி ஹோட்டல் மேல்மாடியில் நடைபெற உள்ளது . அவ்வமயம் தாங்கள் மேற்படி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி செழுமைபடுத்திட  அன்புடன் அழைக்கின்றேன்  தங்களின் அன்பில் அசையும்  பி.ஆர்.சுப்பிரமணி.

10 ஆண்டுகளில் செய்ய தவறியதை ஓராண்டில் செய்து முடித்துள்ளோம் முதல்வர் ஸ்டாலின்

Image
10 ஆண்டுகளில்  செய்ய தவறிய அனைத்து பணிகளையும் கடந்த   ஓராண்டில் செய்துள்ளோம் முதல்வர் ஸ்டாலின் வேலுார், ஜூன் 29 – 10 ஆண்டுகளில் செய்ய தவறிய அனைத்து பணிகளையும் கடந்த ஓராண்டில் செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் வேலுாரில் பேசினார். வேலுார் கோட்டை மைதானத்தில், தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை 5:45 மணிக்கு நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல்  பாண்டியன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் 62.10 கோடி ரூபாய் மதிப்புள்ள முடிவடைந்த திட்டப் பணிகள், 32.89 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளை தொடங்கி வைத்து, 30,423 பேருக்கு 360.53 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:  இளைஞரான என்னை பார்த்த அமைச்சர் துரைமுருகன் இப்போது தலைவராக பார்க்கிறார். எனக்கு சோதனை வந்த போது என்னை தாங்கி நின்ற துாண் துரைமுருகன். வேலுார் மாவட்டத்தில், 58 கோடி ரூபாய் மதிப்பில் பாலாறு, பொன்னையாற்றில்  தடுப்பணைகள் கட்டும் திட்டம், காட்பாடி தொகுதி மகிமண்டலத்தில் 300 ஏக்கர் பரப்பில் சிப்காட், 120 கோடி ரூபாயில் காங்க

நலத்திட்டம் வழங்கும் விழா

Image
*கனிமொழி கருணாநிதி தலைமையில் மீண்டும் கலை விழா 'நெய்தல்' திருவிழா* திமுக மாநில மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுக் கலை ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஜூலை மாதம் 7 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் மாபெரும் கலை விழா 'நெய்தல் - தூத்துக்குடி கலை விழா' நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.  திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையில் கனிமொழி அவர்கள் 2007 முதல் 2011 வரை சென்னை சங்கமம் என்ற விழாவினை பொங்கல் பண்டிகையினை ஒட்டி நடத்தினார். கடந்த 10 ஆண்டுகள் சென்னை சங்கமம் நடைபெறாத நிலையில், தற்போது திமுக ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு தூத்துக்குடியில் 'நெய்தல்' விழாவை நடத்துவதாகக் கனிமொழி கருணாநிதி அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதில் உணவு திருவிழாவும் நடைபெறவுள்ளது. உங்களது வரு

பாராட்டு

Image
🔸  *வேலூர் மாவட்டம்* *மாண்புமிகு தமிழக முதல்வர்  வேலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றிய முடித்து பின்பு ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு சென்றுவிட்டார் சென்னையில் இருந்து  வந்த CORCELL SECORTY பணியில் இருந்த WGR1 54570 PAVITHRA  விழா முடிந்த பின்பு மேடைக்கு கீழே இருந்த ரூபாய் 3020/- எடுத்து வந்து வேலூர் உட்கோட்டை துணைக் கண்காணிப்பாளர் மற்றும் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வடக்கு குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அவர்களிடம் பணத்தை ஒப்படைத்தார் பாராட்டுக்கள்

புது பஸ் நிலையம் முதல்வர் திறப்பு

Image

மருத்துவமனை முதல்வர் பார்வையிட்டார்

Image
இராணிப்பேட்டை மாவட்டம் கன்னிகாபுரத்தில் 25.6.2022 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்த வேலூர் சிஎம்சி இராணிப்பேட்டை மருத்துவமனையினை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் பார்வையிட்டார்.

மக்கள் நலனுக்காக அரசு செயல்படுகிறது முதல்வர் ஸ்டாலின்

Image
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என வேலூரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை வேலூர் கோட்டை மைதானத்தில்  ரூபாய் 62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளையும், 32 கோடி மதிப்பீட்டில் புதிதாக துவக்கப்பட உள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்  பின்னர் விழாவில் 30,423 பயனாளிகளுக்கு 313 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை  முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். விழாவில் பேசிய முதலமைச்சர், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது அதை தடுக்கக்கூடிய முழு உரிமை தமிழகத்திற்கு உள்ளது எனவும், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி  உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது . அந்த தீர்ப்பில் மேகதாது அணை கட்டக்கூடாது என்றும் கீழ் உள்ள மாநிலங்களில் ஒப்புதலை பெறாமலும், மத்திய அரசின் அனுமதி பெறாமல் அணை கட்டக் கூடாது என தெரிவித்தது. இதனை பின்பற்றாமல் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாகும் . எனவே கர்ந

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது தமிழக முதல்வர் ஸ்டாலின்

Image
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என வேலூரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை வேலூர் கோட்டை மைதானத்தில்  ரூபாய் 62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளையும், 32 கோடி மதிப்பீட்டில் புதிதாக துவக்கப்பட உள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்  பின்னர் விழாவில் 30,423 பயனாளிகளுக்கு 313 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை  முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். விழாவில் பேசிய முதலமைச்சர், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது அதை தடுக்கக்கூடிய முழு உரிமை தமிழகத்திற்கு உள்ளது எனவும், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி  உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது . அந்த தீர்ப்பில் மேகதாது அணை கட்டக்கூடாது என்றும் கீழ் உள்ள மாநிலங்களில் ஒப்புதலை பெறாமலும், மத்திய அரசின் அனுமதி பெறாமல் அணை கட்டக் கூடாது என தெரிவித்தது. இதனை பின்பற்றாமல் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாகும் . எனவே கர்ந

முதல்வரின் நாளைய நிகழ்சிகள்

Image
ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அலுவலகம் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.  நாள்.30.06.2022 வியாழக்கிழமை. 1.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூபாய் 118.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தினை தனது திருக்கரங்களால் திறந்து வைக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் குத்து விளக்கு ஏற்றுகின்றார்கள் தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றை நடுகிறார்கள். இடம் பாரதி நகர் காலை.9.30 மணி. 2. இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்பிக்க உள்ளார்கள். நேரம் காலை 09.45 மணி. 3. விழா முடிவுற்றவுடன் பிஞ்சு ஏறியினை சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற்றி அமைக்கும் திட்டப்பணிகள் குறித்து மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அவர்கள் பிஞ்சு ஏரியினை நேரடியாக அழைத்துச் சென்று மா

புதிய பஸ் நிலையம் பஸ்கள் நிற்கும் விவரம்

Image
ஜூன் இருபத்தி ஒன்பது இன்று இனிதே தொடங்கியது பாலாறு பெரு விழா நிகழ்ச்சிகள் காலையில் தமிழக ஆளுநர் மேதகு திரு ஆர் என் ரவி அவர்கள் வேலூர் ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி பீடம் அருள்மிகு சக்தி அம்மா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பாலாறு பெருவிழா மாநாட்டை தொடங்கி வைத்தார்கள் மாலையில் வேலூரில் பாலாறு அன்னைக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் மற்றும் சன்னியாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

பாலாறு பெருவிழா மாநாடு தொடங்கியது

Image
ஜூன் இருபத்தி ஒன்பது இன்று இனிதே தொடங்கியது பாலாறு பெரு விழா நிகழ்ச்சிகள் காலையில் தமிழக ஆளுநர் மேதகு திரு ஆர் என் ரவி அவர்கள் வேலூர் ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி பீடம் அருள்மிகு சக்தி அம்மா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பாலாறு பெருவிழா மாநாட்டை தொடங்கி வைத்தார்கள் மாலையில் வேலூரில் பாலாறு அன்னைக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் மற்றும் சன்னியாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்