Posts

Showing posts from February, 2023

திருவிழா

Image
ஆம்பூர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியாங்wகுப்பம் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஏரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முதல் தேதியில் ஆரம்பித்து தொடர்ந்து ஏழு நாள் மாசி திருவிழா நடைபெறும் இந்த திருவிழாவை காண கர்நாடகா ஆந்திரா கேரளா தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை செலுத்தி தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வார்கள் கரகத்தின் மீது மீது உப்பு மெழுகு காசுகளை வீசி தங்களுக்கு திருமணம் தடை திருமணம் நடக்க குழந்தை பாக்கியம் கிடைக்க குழந்தை வேண்டி வேலை வாய்ப்பு கிடைக்க உயர் கல்வி படிக்க நோய் நொடி இல்லாமல் இருக்க பல்வேறு விதமான வேண்டுதல்களை முன்வைத்து கரகம் மீதும் உப்பு மெழுகு வீசி கரகத்தின் மீது கரகம் எடுத்து வரும் பாதையில் ஆண்களும் பெண்களும் ஈரத் துணியுடன்  படுத்து கொள்வார்கள் அதேபோன்று கடந்த ஆண்டு வேண்டுதல் நிறைவேற்றிய திருமணம் செய்து கொண்ட புதுமணமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த ஆண்டும் தங்களுடைய நேர்த்திக் கடனை திருப்பி நன்றி தெரிவித்து  சாமி கோயில் ஆடு கோழிகளை பலி கொடுத்து கோயில்

பாதிப்பு

Image
ராட்சத இறக்கை ஏற்றிச் சென்ற வாகனம் பழுது தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு திருப்பத்துார் வாணியம்பாடி அருகே,  ராட்சத இறக்கை ஏற்றிச் சென்ற வாகனம் பழுதடைந்ததால், தேசிய நெடுஞ்சாலையில், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கோவை, தேனி, துாத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில், காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கான ராட்சத இறக்கைகள்  சென்னையில் தயாரிக்கப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் சாலை வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது. இது போன்ற வாகனங்கள்  செல்லும் போது போக்குவரத்து பாதிப்பு, விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க கனரக வாகனங்கள் முன்னாலும், பின்னாலும் பாதுகாப்பிற்காக ஜீப்புக்களில் பொறியாளர்கள்  செல்வார்கள். இந்நிலையில், சென்னையிலிருந்து ராட்சத இறக்கை ஒன்றை ஏற்றிக்கொண்டு கனரக வாகனம் ஒன்று இன்று அதிகாலை 2:00 மணிக்கு வேலுார் வழியாக துாத்துக்குடிக்கு சென்றது. திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே சென்னை– பெங்களூரு தேசிய  நெடுஞ்சாலையில்  பெருமாள் பேட்டை ம

பயணம்

Image
பிளாஸ்டிக் மறுசுழற்சியை வலியுறுத்தி சைக்கிள் பயணம் வேலுார்,  பிளாஸ்டிக் மறுசுழற்சியை வலியுறுத்தி 50 ஆயிரம் கி.மீ., துாரம் சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் வேலுார் வந்தார். ஆந்திரா மாநிலம், நெல்லுாரை சேர்ந்தவர் குர்ரம் பெஞ்சாலா சைதன்யா, 22. பி.எஸ்.சி., படித்துள்ள இவர் பிளாஸ்டிக் மறுசுழற்சியை வலியுறுத்தி ஆந்திரா மாநிலம், நெல்லுாரில் இருந்து இந்தியா முழுவதும் 50 ஆயிரம் கி.மீ., துாரம்  சைக்கிள் சென்று பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது இவர் ஆந்திரா, கர்நாடாகா மாநிலங்கள் வழியாக 3 ஆயிரம் கி.மீ.,  துாரம் கடந்து இன்று தமிழ்நாட்டில் வேலுார் வந்தார். மக்கள் சார்பில் அவருக்கு வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது  குறித்து குர்ரம் பெஞ்சாலா சைதன்யா கூறியதாவது: 2022 ம் ஆண்டு மே முதல் ஜூன் வரை மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஆந்திரா  மாநிலம் நெல்லுாரிலிருந்து, தமிழ்நாட்டில்  கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் சென்றேன். அதே ஆண்டு உணவை வீணாக்கக்கூடாது என்பதை வலிறுயுத்தி நெல்லுாரிலிருந்து  குஜராத் வழியாக பாகிஸ்தான் எல்லை வரை சைக்கிள் ப

சாலை மறியல்

Image
3 குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் கேட்டு சாலை மறியல் ராணிப்பேட்டை விபத்தில் தந்தை, தாய் இறந்ததால் அவர்களது மூன்று குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல் நடத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வேடல் காந்திநகரை சேர்ந்தவர் தீனதயாளன், 37. கட்டட தொழிலாளி. காவேரிப்பாக்கம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., பொருளாளராக பதவி வகித்தார்.  இவர் முதல் மனைவி  கல்யாணி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகள் உள்ளனர். இதனால் கல்யாணியின்  தங்கை ரூபாவதியை, 26, இரண்டாவது திருமணம்  செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்று  (15)  இரவு 8:00 மணிக்கு பல்சர் பைக்கில் தீனதயாளனும், ரூபாவதியும் காந்திநகரில் இருந்து அரக்கோணத்திற்கு  சென்றனர். அப்போது சோளிங்களில்  இருந்து வெல்லம் ஏற்றி வந்த லோடு ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் ஏற்கனவே  இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்திற்கு  காரணமான சே

பேட்டி

Image
ஏ.டி.எம்., கொள்ளைகளை தடுக்க தொடர் இபீட் டி.ஐ.ஜி., பேட்டி வேலுார் ஏ.டி.எம்., கொள்ளைகளை தடுக்க தொடர் இபீட் ரோந்துப்பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக வேலுார் சரக டி.ஐ.ஜி.,  முத்துசாமி கூறினார். வேலுார் மாவட்டம், குடியாத்தம் போலீஸ் டி.எஸ்.பி., அலுவலகத்தை வேலுார் சரக டி.ஐ.ஜி., முத்துசாமி ஆய்வு  செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குடியாத்தம் பகுதியில் ஏற்கனவே நடந்த அசோக் ஜிவல்லரி என்ற நகை கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  திருவண்ணாமயில் நடந்த ஏ.டி.எம் கொள்ளை போன்ற சம்பவங்களை  தடுக்க ஜி.பி.ஆர்.எஸ்., பொருத்தப்பட்ட இபீட் எனப்படும் பைக்குகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரவு நேரங்களில் நடக்கும் பெரிய கொள்ளை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது குடியாத்தம் டி.எஸ்.பி,  ராமமூர்த்தி உடனிருந்தார்.

பார்க்கலாம்

Image
*நகைச்சுவை நாயகர் மறைந்த கல்லாபெட்டி சிங்காரம் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை கீழ்கண்ட இணைப்பின் மூலம் காணலாம்!* *நன்றி!* https://youtu.be/t65VkQlVZ1k 🦚💐🦚💐🦚💐🦚💐

மருந்து

Image
*எல்லா மருந்துகளும் மருந்தகங்களில் இல்லை!*🧏🏼🧏🏼‍♀️  *1 - உடற்பயிற்சியே மருந்து.*  *2 - விரதமே மருந்து.*  *3 - இயற்கை உணவே மருந்து.*  *4 - சிரிப்பு மருந்து.*  *5 - காய்கறிகளும் பழங்களும் மருந்து.*  *6 - தூக்கமே மருந்து.*  *7 - சூரிய ஒளி மருந்து.*  *8 - பிறரை நேசிப்பதே மருந்து*  *9 - உங்களை நேசிப்பது மருந்து.*  *10 - நன்றியுணர்வு மருந்து.*  *11 - குற்றத்தை விடுவது மருந்து.*  *12 - தியானமே மருந்து.*  *13 - கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதும் படிப்பதும் மருந்து.*  *14 - சரியாகவும், நேரத்துக்கும், மிகையின்றியும் உண்பது மருந்தாகும்.*  *15 - சரியான சிந்தனையும், நல்ல எண்ணத்துடன் சரியான சிந்தனையும் மருந்து.*  *16 - கடவுள் நம்பிக்கையே மருந்து*  *17 - நல்ல நண்பர்கள் மருந்து.*  *18 -.  உங்களை மன்னிப்பதும் மற்றவர்களை மன்னிப்பதும் மருந்து.*  *19 - நிறைய தண்ணீர் குடிப்பது மருந்து.*  *20 - அமைதியான இதயமே மருந்து*                       *இந்த மருந்துகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள், மருந்தகங்களில் இருந்து உங்களுக்கு அரிதாகவே தேவைப்படும்.*  *உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் இந்த

துணிவு

Image
🍒🍒🍒மனோதிடம் தான் எதையும் 🍒🍒🍒 *♻️தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம்.மனோதிடம் என்பது துணிச்சலின் அடையாளம்.* *♻️துணிவு உள்ளவனையே அறிவுள்ளவன் என்று நமது முன்னோர்கள் மதித்தார்கள்.* *♻️உதவி கிடைத்தாலென்ன ? கிடைக்காவிட்டாலென்ன? எந்தச் சூழ்நிலையையும் மேற்கொள்ள முடியும் என்று உறுதிபடச் சொல்லக் கூடிய மனோதிடம் வேண்டும்.* *♻️வெற்றி, முன்னேற்றம், மகிழ்ச்சி அனைத்தும் நம் கைகளில் தான் இருக்கின்றன.* *♻️நாம் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டு இருந்தால் நமக்கு வர வேண்டியவை தாமாக வந்து கொண்டு இருக்கும். எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.* *♻️சிறு வயதில் நெப்போலியன் ராணுவ விடுதியில் படித்துக் கொண்டு இருந்தார்.* *♻️அந்த சமயத்தில் ஒரு நாள் நெப்போலியன் அறைக்குப் பக்கத்து அறையில் உள்ள மற்றொரு மாணவனின் அழகான பை காணாமல் போய் விட்டது.* *♻️உடனே அந்த மாணவன் தன் மேலதிகாரியிடம் புகார் கொடுத்தான்.* *♻️"உனக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கானு" அந்த மேலதிகாரி கேட்டார். அதற்கு அந்த மாணவன் நெப்போலியன் மீது தான் சந்தேகம் என்று கூறினான்.* *♻️உடனே அந்த அதிகாரி நெப்போலியனை தன் அ

திருநாமம்

Image
♦️விஷ்ணு சகஸ்ரநாமம்♦️ ******************************* 🌲இன்று 253 ஆம்  திருநாமம் 🌲 ************************************* 🌹ஸித்தார்த்தாய நமஹ :🌹 *********************************** (Siddhaarthaaya namaha) சேதுக்கரையில் முகாமிட்டிருந்த ராமபிரா னிடம் சரணாகதி செய்ய விபீஷணன் வந்த போது, சுக்ரீவனும் மற்ற வானரர்க ளும் விபீஷணனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ராமனிடம் சொன்னார்கள்.  “உடன்பிறந்த சகோதரனான ராவணனுக் கே துரோகம் செய்யத் துணிந்த விபீஷண ன் நாளை நமக்கும் துரோகம் இழைத்திடு வான்!” என்பது சுக்ரீவனின் வாதம். ஆனால் அனுமனோ, “நான் இலங்கைக்கு சென்றபோது கவனித்தேன். இந்த விபீஷ ணன் தர்மாத்மா. இவனை ஏற்றுக் கொள் ளுங்கள். என்னுயிரைக் காத்தவனே இவன் தான்!” என்று ராமனிடம் கூறினார். “இவன் தீயவன், ஏற்கக் கூடாது!” என்று சுக்ரீவனும், “இவன் நல்லவன், ஏற்கலாம்!” என்று அனுமனும் சொல்ல, ராமனோ, “இவன் நல்லவனோ தீயவனோ, சரணம் என்று என்னைத் தேடி வந்து விட் டான். அவனை ஏற்றுக் கொண்டே தீருவேன்!” என்றான். “ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும் உனக்கடிமை ஆகின்றேன் என்கின்றார்க்கும் அருக்காதே அனைவர்க்கும் அனைவராலும் அஞ

நல்லது

Image
🌷🌷 இன்றைய சிந்தனை 🌹🌹 எந்த ஒரு பிரச்சனைக்கும்  3 வகையான தீர்வுகள் இருக்கின்றன   1 . ஏற்றுக் கொள்வது  2 . மாற்றிக் கொள்வது  3 விட்டு விடுவது  ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மாற்றவே முடியாத விஷயங்களை விட்டுத் தள்ளுங்கள்  இனிதாகட்டும் 🌹  🍒நலமாகட்டும் 🍒

திருநாமம்

Image
♦️விஷ்ணு சகஸ்ரநாமம்♦️ ******************************* 🌲இன்று 254 ஆம்  திருநாமம் 🌲 ************************************* 🌹ஸித்த ஸங்கல்பாய நமஹ :🌹 ************************************** (Siddhasankalpaaya namaha) ஆதி சங்கரர் சிருங்கேரியில் முகாமிட்டிரு ந்த போது, கிரி என்ற இளைஞன் அவருக் குச் சீடராக வந்து இணைந்தான். குரு பக்தியில் தலை சிறந்தவனாகத் திகழ்ந்த கிரியின் மேல் சங்கரருக்குப் பிரீதி உண்டானது. அவனைத் தன்னோடு காசிக்கு அழைத்து சென்றார் சங்கரர்.காசியில் தினமும் சங்க ரர் தமது சீடர்களுக்கு வேதாந்த பாடங்கள் நடத்தி வந்தார். அந்த வகுப்புகளில் எல் லாம் தவறாமல் பங்கு கொண்ட போதும், கிரிக்கு வேதாந்த ஞானம் துளி கூட வரவில்லை.  இந்நிலையில் ஒருநாள் சங்கரரின் பூஜை க்காகப் பூப்பறிக்கச் சென்றிருந்தான் கிரி. மற்ற சீடர்கள் எல்லோரும் வேதாந்த பாடத் துக்குத் தயாராக வந்து அமர்ந்து கொண்  டார்கள். கிரி மட்டும் வரவில்லை. அப்போது ஹஸ்தாமலகர் என்னும் சீடர், “சுவாமி! பாடத்தை ஆரம்பிக்கலாமா?” என்று சங்கரரிடம் பணிவோடு கேட்டார். ஆனால் சங்கரரோ, “கிரி இன்னும் வரவி ல்லை. அவன் வந்தபின் பாடத்தைத் தொ டங்கலாம்

கருடன் கிழங்கு

Image
ஆகாச கருடன் கிழங்கு ஆகாச கருடன் கிழங்கு.! கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.  இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும். இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம். அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.  அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும். அவ்வளவு சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு. கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது. அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும்.  அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும். (மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்). அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை கரையாத கட்டியிவை கானார்- வரையிற் றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு கருடன் கிழங்கதனைக் கண்டு. – சித்தர் பாடல். கருடன் கிழங்குக்கு அரையாப்புக் கட்டி, வெள்ளை, கொரு

நிரந்தரம் இல்லை

Image
🍒🍒🍒எதுவும் நிரந்தரமில்லை............. இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழும் வரை நமக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.பதவி,பட்டம், அதிகாரம், பொருள், பணம், புகழ், மனைவி, மக்கள், வீடு, வாசல், தோட்டம், துரவு ஏனைய அனைத்துமே நிரந்தரம் இல்லை. ஏன் நமது பெயரும் கூட அப்படித் தான். இவை சில நாள் மட்டும் நம்மோடு.பின் வேறொருவரோடு. நம்மை விட்டுச் சொல்லாமல் சென்று விடும். *நாட்கள் செல்லச் செல்ல நம்மை இவ்வுலகம் மறந்து விடும். காற்று உள்ளே இருக்கும் வரை தான் உடல். காற்று வெளியே போய் விட்டால் நாம் பிணம்.* சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளிகள் தான் நாம்..இந்த சொற்ப வாழ்வு நிரந்தரம் என்று மயங்காதீர்கள்..  *சொத்து, சுதந்திரம், அதிகாரம், பேர், புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான்.* சாவி கொடுத்தால்  குரங்கு பொம்மை. ஆடும்.. டமாரம் தட்டும்.. தலையை ஆட்டும்,விசை இருக்கும் வரை தான் வேலையே செய்யும்.. ஒரு காவல்காரன். வழக்கம் போல் தப்பட்டை அடித்துக் கொண்டு நடுநிசியில் ”ஜாக்கிரதை” ‘’ஜாக்கிரதை’’என்று கத்திக் கொண்டே போவான்… ஒருநாள் அவசரமாக வர வேறு ஒரு ஊருக்கு போக வேண்டி இருந்ததால

ஹரி

Image
🛑ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா* *ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா* நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய்  ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய்  ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே  ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா உற்றவர் எனைப் பெற்றவர் மற்றவர் என் சுற்றமும்  உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றம் ஓ

திருநாமம்

Image
♦️விஷ்ணு சகஸ்ரநாமம்♦️ ******************************* 🌲இன்று 255 ஆம்  திருநாமம் 🌲 ************************************* 🌹ஸித்திதாய நமஹ :🌹 ***************************** (Siddhidhaaya namaha) சீதா ராம பட்டாபிஷேகம் இனிதே நிறைவ டைந்தபின், ஒருநாள் அரண்மனையிலுள் ள தனது அறைக்கு அனுமனை அழைத்த ராமன், “அனுமனே! நீ இலங்கைக்கு சென் றுவந்த பின், ‘கண்டேன் சீதையை!’ என்று மட்டும் என்னிடம் சொன்ன நீ, அங்கு நீ செய்த அற்புதச் சாகசங்களை எல்லாம் என்னிடம் சொல்லவே இல்லையே, இலங் கையில் நீ செய்த வீர தீரச் செயல்களை இப்போதாவது எனக்குச் சொல்வாயாக!” என்று கூறினான். அப்போது குறுக்கிட்ட சீதை, “சுவாமி! தற் பெருமை பேசுவதை விரும்பாத அனுமன், தனது புகழையும் சாகசங்களையும் தன் வாயாலேயே சொல்வானா? உணவு பதா ர்த்தங்களில் உள்ள உப்பு, அந்தப் பதார்த் தத்தின் சுவைக்கும் பதத்துக்கும் தானே ஆதாரமாக இருந்தபோதும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், உணவுப் பொருளினுள்ளே மறைந்திருக்கிறதல்ல வா? அதுபோலத் தான் அனுமனும் தனது பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொ ண்டு விளங்குபவன். பின்னாளில் உங்க ளது சரிதம் ராமாயணம் என்னும் மஹா காவியமாக வால

திருநாமம் போற்றி

Image
🌹🌺"🌺 *உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த மகான் - விளக்கும் எளிய கதை* 🌹🌺 -------------------------------------------------------- 🌹🌺மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர்.  இவர்  பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். 🌺அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரமராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார். 🌺உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த மகான் திருவாதவூரார்(மாணிக்கவாசகர்) சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார். 🌺ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான். 🌺மாணிக்கவாசகர், பொன்ன

திருநாமம்

Image
♦️விஷ்ணு சகஸ்ரநாமம்♦️ ******************************* 🌲இன்று 249 ஆம்  திருநாமம்🌲 ************************************* 🌹அப்ரமேயாத்மனே நமஹ :🌹 ********************************** (Aprameyaathmane namaha) சாந்தோக்யோபநிஷத் 4-ம் அத்யாயம் 10-ம் கண்டத்தில் ஒருகதை வருகிறது. ஜாபாலர் என்று குருவிடம் பல சீடர்கள் வேதம் பயின்று வந்தார்கள்.  அவர்களுள் உபகோசலன் என்பவன் இறை வனைப் பற்றி அறிவதில் மிகவும் ஆர்வத்துடன் இருந்தான். மற்ற சீடர்களுக் கு அனைத்துப் பாடங்களையும் பயிற்றுவி த்த ஜாபாலர், இறைவனை அறிய விழைந் த உபகோசலனுக்கு மட்டும் எந்தப் பாடமும் சொல்லித் தரவில்லை. தான் தினமும் வணங்கும் மூன்று அக்னி ஹோத்திர அக்னிகளைப் பராமரிக்கும் பொறுப்பை மட்டும்.உபகோசலனிடம் ஒப்படைத்திருந்தார் ஜாபாலர். சில வருடங்களில் மற்ற சீடர்கள் அனைவ ரும் வேதப் படிப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பி விட்டார்கள். ஆனால் உபகோ சலன் மட்டும் இன்னும் மூன்று அக்னிக ளையே பராமரித்து வந்தானே ஒழிய குரு அவனுக்கு எந்த பாடமும் எடுக்கவில்லை.  இந்நிலையில், ஜாபாலர் வெளியூர் செல் ல நேரிட்டது. மூன்று அக்னிகளையும் உபகோசலனின் பொறுப்பில் வ

உயர்ந்தவர்

Image
❤️ *இன்றைய சிந்தனை* ............................................................ *"உயர்ந்தவர்- தாழ்ந்தவர்"* ................................................. யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ!, தாழ்ந்தவர் என்றோ!, மதிப்பு மிக்கவர் என்றோ!, அறிவானவர் என்றோ!, அழகானவர் என்றோ! உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம்... இந்த பூமியில் ஒவ்வொரு மனிதர்களுமே சிறப்புக்குரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே...! வெட்டவெளியில், உச்சி வெயிலில் வியர்வை சிந்த நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண் - பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி, பசி, உறக்கம், இழி சொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு... உண்மையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் யாருமில்லை. சில வாய்ப்புகள் தான் யார் இந்தப் பொழுதில் அவசியமானவர் என்பதைப் புரிய வைக்கிறது... அந்தப் புரிதலை உணர்ந்து கொள்பவர்கள் மனிதநேயத்துடன் நடந்து கொள்வர். மனிதநேயம் கொண்டவர்களாலேயே மக்களை திருப்படுத்தும் சேவையை வழங்க முடியும். அவர்களே ம

விஷ்ணு போற்றி

Image
♦️விஷ்ணு சகஸ்ரநாமம்♦️ ********************************* 🌲இன்று 250 ஆம்  திருநாமம்🌲 ************************************* 🌹விசிஷ்டாய நமஹ :🌹 ***************************** (Visishtaaya namaha) வனவாசம் சென்ற ராமன், சுதீட்சணர் என்ற முனிவரின் ஆசிரமத்தில் சிலகாலம் சீதையோடும் லட்சுமணனோடும் தங்கியிருந்தான். அப்போது ராமனைச் சந்திப்பதற்காக சில முனிவர்கள் அங்கே வந்தார்கள். அருகிலு ள்ள தண்டகாரண்யம் என்னும் வனப்பகு தியில் அரக்கர்களின் நடமாட்டம் அதிகரி த்து வந்தது. முனிவர்களின் வேள்விகளை த் தடுப்பதும், முனிவர்களைக் கொன்று குவிப்பதுமே அவ்வரக்கர்களின் வழக்க மாக இருந்தது.  எனவே அந்த அரக்கர் கூட்டத்தை எல்லாம் அழித்தொழித்து முனிவர்களுக்கு அபயம் அளிக்க வேண்டும் என்று ராமனிடம் பிரா ர்த்தனை செய்வதற்காக ராமனிடம் அம்மு னிவர்கள் வந்தார்கள். அவர்களை மதிப்போடும் மரியாதையோ டும் வரவேற்ற ராமனிடம், அம்முனிவர் கூட்டத்தின் தலைவர்,“ராமா உன் எழிலில் மயங்கிய நாங்கள், உன்னை ஆலிங்கனம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்பி வந்துள்ளோம்!” என்று கூறினார்.  மற்ற முனிவர்களும், “ஆம் ராமா! உன்னை ஆரத் தழுவிக் கொள்ள வேண்ட

விஷ்ணு

Image
♦️விஷ்ணு சகஸ்ரநாமம்♦️ ********************************* 🌲இன்று 251,  252 திருநாமங்கள் 🌲 ************************************* 🌹251. சிஷ்டக்ருதே நமஹ :🌹 *********************************** (Shishtakruthe namaha) 🌹252. சுசயே நமஹ :🌹 **************************** (Shuchaye namaha) (விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு உரை எழு திய ஸ்ரீபராசர பட்டர், 251 மற்றும் 252- வது திருநாமங்களாக வரும் சிஷ்டக்ருத், சுசி: ஆகிய இரு திருநாமங்களையும் இணைத் துப் பொருளுரைத்துள்ளார். இன்?என வே அவர் காட்டிய வழியைப் பின்பற்றி இரு திருநாமங்களுக்கும் சேர்த்து ஒரே கதையை வழங்கியுள்ளோம்.) ஒரு முறை வேத வியாசர், தமது சீடர்களை ப் பார்த்து, “அஹல்யா த்ரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா பஞ்சகன்யா ஸ்மரேத் நித்யம் மஹாபாதக நாசினீ” என்ற சுலோகத்தை சொன்னார்.  பஞ்ச கன்னிகைகள் எனப்படும் அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களையும் தினமும் காலையில் தியானித்தால், நமது அனைத்து பாபங்களும் தொலையும் என்பது இதன் பொருளாகும். “சீடர்களே! அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய இந்த ஐவருமே தாயின் கருவில் வசிக்காமல் பிறந்தவர் க

இரவு வணக்கம்

Image
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎 இனிய இரவு வணக்கம்.  🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴 மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது சோதனை நேரம்தான்! வெற்றி நேரமல்ல! -தாமஸ் ஹூட்  ------- வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும். ----------- நீங்கள் இனி நடக்க போவதில்லை என்று முழுமையாக தெரிந்த பின்னரே இந்த உலகம் நீங்கள் போகும் பாதையில் பூக்களை தூவ ஆரம்பிக்கும்.  🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அன்புடன் 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

தெரியுமா

Image
🌹🌹இன்றைய சிந்தனை... நிரந்தரம் இல்லாத ஒன்றிற்காக நிம்மதி இல்லாமல் அலைவது தான் வாழ்க்கை..! வாழ்க்கையில் நிம்மதி தேவை என்றால்.. நிச்சயம் ஞாபகமறதி அவசியம்..! நிம்மதியை தேடுவதை நிறுத்திய பிறகு தான் தெரிந்தது.. எதையும் தேடி அலையாமல் சும்மா இருப்பதே நிம்மதி என்று..! அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வாழ ஆரம்பித்தால்.. நம் நிம்மதி அப்போதே நம்மை விட்டு சென்று விடும்..! சந்தோசம்.. நம்பிக்கை.. நிம்மதி இவற்றைத் தொலைப்பது எளிது.. மீண்டும் அவற்றைப் போலே மீளக்கிடைப்பது மிகக் கடினம்..! இவர்கள் ஏன் இப்படி என்பதை விட.. இவர்கள் இப்படி தான் என்று நினைத்து விலகி விடுவது நிம்மதி..! எனக்கென யாருமில்லை என்று நிம்மதி இழக்கும் போது உனக்காக எப்போதும் உன்னோடு நான் இருப்பேன் என்று சொல்லும் ஒரு உறவு அமைதல் வரம்..! மகிழ்ச்சி கூட சிறு சிறு நிகழ்வுகளை அழகாய் உருவாக்கி விடுகிறது.. ஆனால் “நிம்மதி” கிடைப்பதற்கு தான் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டியிருக்கிறது..! நன்றி மறந்தவர்களை எண்ணி நீ நிம்மதி இழக்காதே.. உன் உதவியை மனிதர்கள் மறந்து போகலாம் தெய்வம் மறப்பதில்லை..! பணம் நிம்மதி தராது என்று எந்த

குட்டிக் கதை

Image
*தினம் ஒரு குட்டிக்கதை* .  *செய்த உதவி..*      ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை', ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்துவிடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்

கதை

Image
தாம்பத்யம் ( சிறுகதை ) """"""""""""""""""""" இன்றுடன் லட்சுமி போய் 16 நாள் ஆகிறது.   நேற்றுடன் எல்லாம் முடிந்து உறவுகள்  எல்லாம் ஊருக்கு போயாச்சு. முருகேசனுக்கு காலை 5 மணிக்கு முழிப்பு வந்து வி‌ட்டது.  இது அவருடைய 78 வருஷ பழக்கம். மெதுவாய் எழு‌ந்திருந்து வாசல் கதவைத் திறந்து வெளி வாசல் வந்தார் .  பக்கத்து வீடுக‌ளி‌ல் எல்லாம் பெருக்கி தெளிச்சு கொண்டு இருந்தார்கள்.   லட்சுமி பக்கத்தில் நின்று ஏனுங்க ஒரு பக்கெட் தண்ணீர் கொண்டு வந்து தருவீர்களா.. என்று கேட்கிற மாதிரியே இருந்தது . அவள் போடும் புள்ளி வைத்த கலர் கோலம்... அவர் மனத்தில் வந்து மறைந்தது.  துக்கம் குடலை புரட்டியது.... ஆண்கள் அழக் கூடாது எ‌ன்று எல்லோரும் சொல்வார்கள்...  ஆணும் அழத்தான் செய்கிறான் வாழ்வில் இரண்டு முறை.  ஒன்று தாயை  இழக்கும் போது....  இரண்டு தாரத்தை இழக்கும் போது. மணி 6 ஆயிடுது.  மகனும் மருமகளும் தூங்குகிறார்கள் போல.   பெட் ரூம் கதவு இன்னும் திறந்த பாடில்லை  ஓரு நிமிடம் அவர் மனக்குதிரை பின் நோக்கியது  ல

வணக்கம்

Image
*தோல்விக்கான பரிசு அனுபவங்களே தவிர...* *அவமானங்கள் அல்ல..!* *இனிய வணக்கம்.*

மாரத்தான் ஓட்டம்

Image
மாராத்தான் ஓட்டம் வேலுார் வி.ஐ.டி., பல்கலை சார்பில் நடந்த  மாராத்தான் ஓட்டத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர். வேலுார் மாவட்டம், வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகம் சார்பில், சர்வதேச கலை மற்றும் கலாச்சார விளையாட்டுப் போட்டிகள் ரிவேரா என்ற பெயரில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இதையொட்டி மன நலம், மன உறுதி என்ற நோக்கத்திற்காக மாராத்தான் ஓட்டம் நேற்று காலை நடந்தது.   காட்பாடியில் தொடங்கிய மாராத்தான் ஓட்டத்தை வி.ஐ.டி.,  துணைத்தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார். சித்துார் பஸ் ஸ்டாண்டு, ஆக்ஸீலியம் கல்லுாரி, திருவலம் வழியாக சென்று மீண்டும் வி.ஐ.டி., பல்கலைக்கு வந்தடைந்தது. 9 கி.மீ.,  துாரம் நடந்த மாராத்தான் ஓட்டத்தில்  5 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

விழா

Image
கல்வியை போல விளையாட்டிற்கும் மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்கியே ரஹானே பேச்சு வேலுார் கல்வியை போல விளையாட்டிற்கும்  மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்க  வேண்டும் என வேலுார் வி.ஐ.டி., யில் நடந்த ரிவேரா தொடக்க விழாவில், இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  அஜிங்கியே ரஹானே பேசினார். வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் மூன்று நாட்கள் நடக்கும் (23, 24, 25) சர்வதேச கலை மற்றும் கலாச்சார விளையாட்டுப் போட்டிகள் ரிவேரா  தொடக்க விழா நடந்தது.  இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்கியே ரஹானோ விழாவை தொடங்கி  வைத்து மாராத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வங்கினார். அப்போது அவர் பேசியதாவது: சென்னை சூப்பர் கிங்க் அணிக்காக இந்தாண்டு விளையாடுகிறேன். மாணவர்கள் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கலைக்கும், விளையாட்டிற்கும் அளிக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் அதிகளவு பங்கேற்க வேண்டும்.  இந்தியாவில் அதிகம் இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்கள் தைரியமானவர்கள். அவர்களுக்கு புதிய கருத்துக்க

ெகாண்டாட்டம்

Image
அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வேலூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம வேலூர் அ.தி.மு.க.,வின் பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்  வேலூர் ஆர்.டி.ஓ., சாலையில் பொதுக்குழு உறுப்பினர் குட்டிலட்சுமி சிவாஜி தலைமையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டாசு எடுத்து கொண்டாடினர் நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் ஏ.பி.எல்.சுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் பகுதி அவைத்தலைவர் ஜானகிராமன், நிர்வாகிகள் ராஜேந்திரன், சம்பத், வர்த்தக அணி பகுதி செயலாளர் ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வேலூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம் வேலூர், பிப்.24- அ.தி.மு.க.,வின் பொதுக்