Posts

Showing posts from June, 2023

சந்திப்பு

Image
நாள்.09.04.2023 *ஜேக்டோ ஜியோ பேரமைப்பு நிர்வாகிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் சந்திப்பு*  --------------------- பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் மாண்புமிகு நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவர்களையும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் எ.பி.நந்தகுமார், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் து.மு.கதிர்ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பா.கார்த்திகேயன் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர்.  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரினோம்.  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.   இந்த சந்திப்பின் போது  ஜாக்டோ ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் தொழிற்கல்வி ஆசிரியர கழகத்தின் தலைவருமான செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளருமான அ.சேகர் வேளாண்மை ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் அக்ரி.இ.ராமன் தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உர

கூட்டம்

Image
🌱🌱🌱✌️✌️✌️🌱🌱🌱 *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாண்புமிகு கழகத்தின் பொது செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மக்களின் முதல்வர், சேலத்து சிங்கம் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அருளாசியுடன்* ✌️✌️✌️🙏🙏🙏✌️✌️✌️ *இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர், மண்ணின் மைந்தர், சாதனை செம்மல், ஹாட்ரிக் நாயகர், நமது பாசமிகு அண்ணன் திருமிகு சு.ரவி.,B.A.B.L.,MLA., அவர்களின் ஆணைக்கிணங்க,* ✌️✌️✌️🙏🙏🙏✌️ *நேற்று ஏப்ரல் 12/04/2023 மாலை 5 மணி அளவில் ராஜேஸ்வரி தியேட்டரில் அருகே இராணிப்பேட்டை நகர கழக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக நகர கழக நிர்வாகிகள், பிற கழக அணியின் நிர்வாகிகள் , வட்ட கழக செயலாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள், ஆகியோர்களிடம் அஇஅதிமுக கழகத்தின் புதிய உறுப்பினர் படிவம், மற்றும் புதிய வாக்காளர் பட்டியல், 2024 நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி படிவம் ஆகியவை ராணிப்பேட்டை நகர கழக செயலாளர் திரு கே.பி.சந்தோஷம் MC வழங்கினார்கள்*  *இந்த நிகழ்வில் உடன் போது ராணிப்பேட்டை நகரக் கழக* *அவைத்தலைவ

அறிமுகம்

Image
வி.ஐ.டி., யில் தேசிய பங்குச்சந்தை அமைப்புடன் இணைந்து புதிய   பி. காம்., படிப்புக்கள் அறிமுகம் வேலுார், ஏப். 14– வி.ஐ.டி., பல்கலையில்,  தேசிய பங்குச்சந்தை அமைப்புடன் இணைந்து புதிய பி. காம்., படிப்புக்கள்  அறிமுகப்படுத்தி உள்ளது. வி.ஐ.டி., பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பங்குச்சந்தை அமைப்புடன் இணைந்து நிதிச்சந்தை மற்றும் எதிர்கால திறன் தேவைக்கேற்ற புதிய         பி. காம்., படிப்புக்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி வேலுார் வி.ஐ.டி., யில் இன்று நடந்தது. வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன், தேசிய பங்குச்சந்தை அமைப்பின்  தலைமை செயல் அலுவலர் அபிலாஷ் மிஸ்ரா  ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி  வி.ஐ.டி., பல்கலை, தேசிய பங்குச்சந்தை அமைப்புடன் இணைந்து வி.ஐ.டி., வணிகவியல் துறையின் சார்பில்,   மூலதனச்சந்தை, நிதி தொழில் நுட்பம் ஆகிய இரண்டு புதிய பி. காம்., படிப்புக்கள் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த படிப்பில் வங்கி மற்றும் நிதித்துறை சம்மந்தமான தொழில் துறைக்கு தேவையான திறன்களை மேம்படுத்தும் விதத்தில் வி.ஐ.டி.,  பேராசிரியர்கள், தேசிய பங்குச்சந்தை அமைப்பின் மு

கைது

Image
போலி டாக்டர் இருவர் கைது வேலுார், ஏப். 14– சத்துவாச்சாரியதில். ேஹாமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் இரண்டு பேரை போலீசார் கைது  செய்தனர். வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரியில் போலி டாக்டர்கள் பலர் கிளினிக் வைத்து சிகிச்சை அளிப்பதாக  சுகாதாரத்துறையினருக்கு புகார்கள்  வந்தன. இதையடுத்து வேலுார்  சுகாதாரத்துறையினர் இன்று சத்துவாச்சாரியில் உள்ள பல கிளினிக்குகளில் ஆய்வு செய்தனர். அதில், விஜயராகவபுரத்தில் வெங்கடேசன், 59, ரங்காபுரத்தில்  தயாளன், 73, ஆகியோர் ேஹாமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும், ஆங்கில மருந்து, மாத்திரைகளை நோயாளிகளுக்கு கொடுத்து  வந்ததும், அவர்கள் போலி டாக்டர்கள் என  தெரியவந்தது.  சுகாதாரத்துறையினர் இரண்டு கிளினிக்குகளை மூடி சீல் வைத்தனர்.  சத்துவாச்சாரி போலீசார் வெங்கடேசன், தயாளனை கைது   செய்தனர்.

பேட்டி

Image
வேலூர்   14-4-23 பாஜக அண்ணாமலை செய்தது அரசியல் ஸ்டண்ட் - காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்திகொண்டு தான் இருக்கிறோம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி  ______________________________________________________________      வேலூர்மாவட்டம்,வே.லூரில் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு அம்பேத்கரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்     பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் பேருக்கு தான் காவிரி குண்டாறு இணைப்பு என்பது ஆனால் நாங்கள் தான் அதை செய்கிறோம் காவிரி குண்டாற்றை இணைத்துள்ளோம் காவிரி தெற்கு வெள்ளாறு வகையின் வழியாக குண்டாற்றை இணைக்கிறோம் கிணற்றை வெட்டுகிறோம் ஆயிரம் கோடியில் இதனை செய்துள்ளோம் காவிரி குண்டாறும் விரைவில் வரும் நிச்சயமாக பாஜக தலைவர் அண்ணாமலை சொத்து பட்டியலை

கைது

Image
காட்பாடியில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ 17 லட்சம் மோசடி  செய்த தம்பதி கைது வேலுார், ஏப். 15– காட்பாடியில், போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது  செய்தனர். வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 51. இவர் மனைவி பேபி, 50. இவர்கள்  காய்டெக் என்ற நிறுவனம் நடத்தி  டிஜிடல் பேனர் கடை நடத்தி வந்தனர். தொழிலை  அபிவிருத்தி   செய்வதற்காக 2015 ம் ஆண்டு காட்பாடி மிஷன் சர்ச் பகுதியில் அவர்கள் பெயரில் இருந்த 900 ச. அடி கொண்ட கட்டடம் மற்றும் நிலத்தை காட்பாடியில் உள்ள கனரா வங்கியில் அடமானம் வைத்து 17 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். அவர்கள் வட்டி, அசலை செலுத்தவில்லை. இதனால் 2022 ம் ஆண்டு அசலும், வட்டியும் சேர்ந்து 37 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டுமென வங்கி சார்பில் தம்பதிக்கு  நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் பதில் அனுப்பாததால், இவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டது. அதனை காதர் அலி என்பவர் 19 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். அந்த இடத்தை அவர் தனது பெயரில் மாற்ற முயற்ச்சி செய்தார். அப்போது, அந்த இடம் 2009 ம் ஆண்டு வேற

பிடித்தனர்

Image
வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு  இல்லத்திலிருந்து சுவர் ஏறி  குதித்து ஓடிய 5 சிறுவர்களை போலீசார் பிடித்தனர் வேலுார், ஏப். 15– வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு  இல்லத்திலிருந்து சுவர் ஏறி  குதித்து ஓடிய 5 சிறுவர்களை போலீசார் பிடித்தனர். வேலுார் மாவட்டம், வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்திலிருந்து சிறுவர்கள் அடிக்கடி தப்பியோடுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.  நேற்று  (13) இரவு 9:00  மணிக்கு ஐந்து சிறுவர்கள் சுவர் ஏறி  குதித்து  தப்பியோடினர். பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் கொடுத்த புகார்படி வேலுார் கலெக்டர் அலுவலகம் வழியாக தப்பிச்செல்ல முயன்ற அவர்களை வேலுார் போலீசார்  மடக்கி பிடித்து இல்லத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது இல்லத்திலிருந்த 10 சிறுவர்கள் கட்டடத்தின் மேலே ஏறி தங்களை ஜாமினில் வெளியேவிடும்படி ரகளையில் ஈடுபட்டனர். வேலுார் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அவர்கள் ரகளையை  கை விட்டு கட்டடத்திலிருந்து கீழே இறங்கி வந்தனர். மாவட்ட கலெக்டர் குமாரவேல்  பாண்டியன் கூறியதாவது: வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு

பேட்டி

Image
வேலூர்   14-4-23 பாஜக அண்ணாமலை செய்தது அரசியல் ஸ்டண்ட் - காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்திகொண்டு தான் இருக்கிறோம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி  ______________________________________________________________      வேலூர்மாவட்டம்,வே.லூரில் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு அம்பேத்கரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்     பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் பேருக்கு தான் காவிரி குண்டாறு இணைப்பு என்பது ஆனால் நாங்கள் தான் அதை செய்கிறோம் காவிரி குண்டாற்றை இணைத்துள்ளோம் காவிரி தெற்கு வெள்ளாறு வகையின் வழியாக குண்டாற்றை இணைக்கிறோம் கிணற்றை வெட்டுகிறோம் ஆயிரம் கோடியில் இதனை செய்துள்ளோம் காவிரி குண்டாறும் விரைவில் வரும் நிச்சயமாக பாஜக தலைவர் அண்ணாமலை சொத்து பட்டியலை

விழா

Image
வேலுார் பிராமணர் சங்கம் சார்பில் பஞ்சாங்கம் படனம் வேலுார், ஏப். 15– வேலுார் பிராமணர் சங்கம் சார்பில் பஞ்சாங்கம் படனம் நிகழ்ச்சி பேரிப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலை  நடந்தது. வேலுார்  கிளை பிராமணர் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். துணை செயலாளர்  உமாபதி சிவம் வரவேற்றார். பஞ்சாங்கம் படன நிகழ்ச்சி குறித்து வேலுார் சரவண சாஸ்திரிகள் பேசுகையில், சோபகிருது வருட வாக்கிய பஞ்சாங்கத்தின் வெண்பா, பலன்,  கிரக நிலைகள், மகா சங்கராந்தி பலன்கள்,  ஆதார விரைய பலன்கள், நட்சத்திர கந்தாய பலன்கள், புண்ய தினங்கள், நவநாயகர்கள், கோசார பலன், நட்சத்திரம் மற்றும் அதன் அதிபதிகள், சூரியன், சந்திர கிரணங்கள் குறித்து விளக்கினார். வரும் 1 ம் தேதி வேலுார் சைதாப்பேட்டை சங்கர மடத்தில் கணேச சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற உள்ள  நித்ய ருத்ர பாராயணத்தில் வேலுார் பிராமணர் சங்க நிர்வாகிகள் பங்கேற்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க ஆலோசகர்கள் சத்தியமூர்த்தி, பாலசுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் சேகர், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் வெங்கட், செய்தி தொடர

விழா

Image
நாள்.14.04.2023 *ரெட்கிராஸ் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா*  மாமன்ற உறுப்பினர் ட்டீடா சரவணன் பொங்கல் வழங்கினார் --------------------------------------- காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா 14.04.2023 காலை 10 மணி அளவில் காட்பாடி அருப்புமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறது.  இவ்விழாவிற்கு வேலூர் மாநகராட்சியின் வேலூர் மாநகராட்சியின் 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீடா.சரவணன் பங்கேற்று சர்க்கரை பொங்கல் 1000 பேருக்கு வழங்கி துவக்கி வைத்தார்.  அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்றுப் பேசினார். அவை துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன், ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்  டி.வேணுகோபால் தலைமை ஆசிரியர் பழனி, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் வேதக்கண் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாண்மை குழு உறுப்பினர்கள் கண் மருத்துவர் டாக்டர் தீனபந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆறுமுகம் எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், வி.காந்திலால் பட்டேல், ஆர்.லட்சுமிநாராயணன், மோகன், ராஜி, பாஸ்கர், சேட்டு உள்ளிட்ட பலர் பங்க

தானம்

Image
ரத்தம் கேட்டு வந்த நோயாளிக்கு ரத்த  தானம் செய்த ஆயுதப்படை போலீசார் வேலுார், ஏப். 16– ரத்தம் கேட்டு வந்த நோயாளிக்கு ரத்த  தானம் செய்த ஆயுதப்படை போலீசாரை மக்கள் பாராட்டினர். மேற்கு  வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுமிதா மோண்டல், 67.  இவர் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் பித்தநாள நோய்க்கு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். அடுத்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. அதற்கு இரண்டு யூனிட் ரத்தம் தேவைப்படுவதால் ஏற்பாடுகள் செய்யும்படி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பலரிடம் கேட்டும் ரத்தம் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 13 ம் தேதி வேலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து தங்கள் நிலை குறித்து தெரிவித்தனர். விருப்பப்பட்டவர்கள் ரத்ததானம் செய்யலாம் என எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் அறிவித்தார். இதையடுத்து ஆயுதப்படையில் பணியாற்றி வரும் போலீசார் நரேந்திரன், பத்மநாபன் ஆகியோர் சம்மதம் தெரிவித்து இன்று ரத்ததானம் செய்தனர். இவர்களுக்கு போலீசார், மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வழக்கு

Image
வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு  இல்லத்தில் 12  சிறுவர்கள் மீது வழக்கு வேலுார், ஏப். 16– வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு  இல்லத்திலிருந்த 12 சிறுவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வேலுார் மாவட்டம், வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்திலிருந்து கடந்த 13 ல் இரவு 9:00  மணிக்கு ஐந்து சிறுவர்கள் சுவர் ஏறி  குதித்து  தப்பியோடினர். இரண்டு மணி நேரத்தில் போலீசார்   பிடித்து இல்லத்தில் அடைத்தனர். அப்போது இல்லத்திலிருந்த ஏழு சிறுவர்கள் கட்டடத்தின் மேலே ஏறி ரகளையில் ஈடுபட்டனர்.  பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் விஜயகுமார் கொடுத்த புகார்படி வேலுார் வடக்கு போலீசார் அவர்கள் மீது இன்று வழக்கு பதிவு செய்தனர்.

கைது

Image
12 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வட மாநில வாலிபர் கைது வேலுார், ஏப். 16– காட்பாடி ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் இன்று காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹத்தியாவிலிருந்து யஸ்வந்த்பூர் செல்லும் ரயிலில் சந்தேகத்திற்கிடமாக இருந்த வாலிபரை பிடித்து  விசாரித்தனர். அதில் அவர், ஜார்க்கண்ட் மாநிலம், பத்ரா பகுதியை சேர்ந்த அஜித்குமார், 22, என்பதும், ஜார்க்கண்டிலிருந்து கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு 12 கிலோ கஞ்சா கடத்த முயன்றதும் தெரியந்தது. அவரை கைது  செய்த போலீசார் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

செய்தி

Image
వెల్లూరు 17-4-23  వెల్లూరు నరువీ ఆసుపత్రిలో ఒక వారంలో 2 మందికి కాలేయ మార్పిడి చేయవచ్చు మరియు వైద్యుల రికార్డు సిఎం బీమా పథకం కింద అవయవ మార్పిడి కూడా పొందవచ్చు - ఆసుపత్రి అధ్యక్షుడు సంపత్ పేటి  _______________________________________           వేలూరు జిల్లా, నార్వీ ఆసుపత్రిలో బెంగళూరుకు చెందిన స్మిత (24) లివర్ పూర్తిగా ఫెయిల్ అయిందని, ఆ తర్వాత నార్వీ ఆసుపత్రిలో చేరిన స్మిత సిద్ధంగా ఉన్న రాజాతి కాలేయంలో కొంత భాగాన్ని దానం చేసింది.. వైద్య బృందం సుమారు 9 గంటల పాటు ఆపరేషన్ చేసి స్మిత మరియు కాలేయ దానం చేసిన ఆమె తల్లి రాజాతి ఆరోగ్యం బాగానే ఉంది.అదే విధంగా వేలూరు సతువాచారికి చెందిన రవీంద్రన్(63)కి కాలేయం పూర్తిగా విఫలమై కాలేయం ఇవ్వడానికి భార్య శాంతి ముందుకు రావడంతో కాలేయ మార్పిడి చేయగా, స్మిత, రవీంద్‌లకు కాలేయం జరిగింది. వారంలో మార్పిడి మరియు రెండూ బాగానే ఉన్నాయి     ఈ విషయమై నరువి ఆస్పత్రి అధినేత సంపత్ విలేకరులతో మాట్లాడుతూ.. స్మిత, రవీంద్రన్ అనే యువతికి ఒకే వారంలో కాలేయ మార్పిడి జరిగిందని, ఇద్దరికీ ఆరోగ్యం బాగానే ఉందని, మినిమల్ సర్జరీ చేస్తున్నామని, విదేశీ పేషెంట్లు, రోగులు ఎక్కు

சஸ்பெண்ட்

Image
ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி சஸ்பெண்ட் வேலுார், ஏப். 21– வேலுாரில், தனியார் நர்சிங் கல்லுாரி முதல்வரிடம் ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலுார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலுார் மாவட்டம், தொரப்பாடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 58. இவர் அணைக்கட்டு வட்டார மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் வேலுார் மாவட்டத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற சுகாதார சான்று வழங்கும் பணியை கூடுதலாக  கவனித்து வந்தார். வேலுார் பில்டெர் பெட் சாலையில் உள்ள பி.பி.ஆர்., என்ற தனியார் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லுாரியில் படிக்கும் மாணவிகள் இரண்டு மாதம், அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற வேண்டும். இதற்கு அனுமதி சான்றிதழ் பெற அவரை கல்லுாரி முதல்வ்ர சகுந்தலா அணுகினார்.  அதற்கு அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சகுந்தலா வேலுார் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஏற்பாட்டின்படி, கல்லுாரிக்கு நேரில் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்

கண்டனம்

Image
முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் இந்து ஆதிதிராவிட மக்களுக்கு எதிரானது விஜய பாரத மக்கள் கட்சி எதிர்ப்பு வேலுார், ஏப். 21– முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த இடஒதுக்கீடு தீர்மானம் இந்து ஆதிதிராவிட மக்களுக்கு எதிரானது என விஜய பாரத மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஆம்பூர் ஜெய்சங்கர் விடுத்த அறிக்கை:  கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு  வழங்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் சட்டசபையில்  நிறைவேற்றப்பட்டது. ஒரு கண் புடைப்பு ஏமாற்று வேலை. இந்து சனாதன  தர்மத்தில் ஜாதி பாகுபாடுகள் உள்ளன. ஆகையால் சிலர் கிறிஸ்துவர்களாக மதம் மாறிவிட்டனர்.  அப்படி மதம் மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டோர்  பி.சி., பட்டியலில் சேர்க்கப்பட்டு சலுகையை அனுபவித்து வருகிறார்கள். ஒரு சிலர் அரசை ஏமாற்றி கிறிஸ்துவத்திற்கு துரோகம் செய்து எஸ்.சி.,  எஸ்.டி., பட்டியலில் தொடர்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதி

கொலை

Image
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை வேலுார், ஏப். 21– வேலுார் அருகே, ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொலை செய்தவரை போலீசார் கைது  செய்தனர். வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே வாழப்பந்தல் கிராமத்தில் உள்ள நிலத்தில் கடந்த 17 ல் காலை 6:00 மணிக்கு தலை நசுங்கிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. அணைக்கட்டு போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், இறந்து கிடந்தது அல்லேரிமலையை சேர்ந்த மலர், 25, என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:  மலரின் கணவர் குமார் கடந்தாண்டு இறந்து விட்டார். இதனால் மலர் தனியாக வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் கூலித்தொழிலாளி சண்முகம், 30, என்பவருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது சண்முகத்தின் மனைவி அம்சாவுக்கு, 25, தெரிந்து விட்டதால் அவர் கள்ள தொடர்பை துண்டித்தார். ஆனால் தன்னிடம் உல்லாசமாக இருக்கும்படி சண்முகம் அடிக்கடி மலருக்கு மிரட்டல்  விடுத்து வந்துள்ளார். மலர் வர மறுத்தார். ஆத்திரமடைந்த சண்முகம் கடந்த 16 ல் இரவு வாழப்பந்தல் கரும்பு தோட்டத்திற்கு சென்று அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த மலரை உல்லாசத்திற்கு அழைத்துள்ள

மோசடி

Image
மொபைல் போனுக்கு பதில் ஸ்பிக்கர் அனுப்பி வைத்து மோசடி ஜோலார்பேட்டை, ஏப். 21– ஜோலார்பேட்டையில், மொபைல் போனுக்கு பதில் ஸ்பிக்கர் அனுப்பி வைத்து மோசடி நடந்து வருகிறது. திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் அருணா, 30. இவருக்கு கடந்த வாரம் தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தங்களது மொபைல் எண்ணிற்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் பரிசாக விழுந்துள்ளதாகவும், இதற்கு 1,500 ரூபாய் ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும், பணத்தை கொடுத்து  விட்டு மொபைலை வாங்கிக்கொள்ளும்படி தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று  தபால் அலுவலகம் மூலம் அவருக்கு  ஒரு பார்சல் வந்துள்ளது. தபால்காரர் 1,500 ரூபாய் கொடுத்து விட்டு பார்சலை பெற்றுக்கொள்ளும்படி கூறியதால் அருணா பணம் கொடுத்து பார்சலை பெற்றுக்கொண்டார். பார்சலை பிரித்து பார்த்ததில், அதில் சின்ன ஸ்பிக்கர் ஒன்று இருந்தது. இதனால் தனக்கு வந்த மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது பதில் வரவில்லை. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசில் அருணா புகார்  செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். இவரை போல தினமும்

தற்கொலை

Image
மகளை கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு ஊராட்சி  செயலாளர் தற்கொலை வேலுார், ஏப். 21– காட்பாடி அருகே, மகளை கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு ஊராட்சி செயலாளர் தற்கொலை  செய்து கொண்டார். வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பாபு, 48. இவர் காங்குப்பம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் மனைவி வேண்டாலட்சுமி, 40, என்பவர் மாச்சனுார் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் சமயைலராக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் லோசினி, 18, வேலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வருகிறார். இளைய மகள் தனுஜா,  16, மனநலம் குன்றியதால் படிக்காமல் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று (19) பாபு, வேண்டாலட்சுமி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். லோசினி கல்லுாரிக்கு சென்று விட்டார். தனுஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அன்று  இரவு 9:00 மணிக்கு வேண்டாலட்சுமி வீட்டுக்கு வந்த போது படுக்கை அறையில் தனுஜா இறந்து கிடந்தார். கணவர் பாபு கழிவறையில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். கே.வி. குப்பம் போலீசார் உடல்களை  கைப்பற

அவதி

Image
ஏலகிரிமலையில் அரசு பஸ் டயர் பஞ்சராகி நின்றதால் பயணிகள் அவதி ஏலகிரிமலை, ஏப். 21– ஏலகிரிமலைக்கு செல்லும் வழியில் அரசு பஸ் டயர் பஞ்சராகி நின்றதால் பயணிகள்  நடந்தே மலைக்கு சென்றனர். ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரிமலை திருப்பத்துார் அருகே உள்ளது.  சுற்றுலாதலமான இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்காக திருப்பத்துாரிலிருந்து அரசு. தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று காலை 9:00 மணிக்கு திருப்பத்துாரிலிருந்து ஏலகிரிமலை நிலாவூருக்கு அரசு  டவுன் பஸ் சென்றது. இதில் 32 பயணிகள் இருந்தனர். ஏலகிரிமலைக்கு செல்லும் வழியில் 10 வது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது, டயர் பஞ்சராகி பஸ் நின்றது. அந்த பஸ்சில் மாற்று டயர் இல்லை.  டிரைவர் பாபு, 50, மொபைலின் தகவல் தெரிவித்ததன் பேரில், ஒரு மணி நேரம் கழித்து  வந்த அரசு டவுன் பஸ்சில் மாற்று டயர் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்குள் பஸ்சில் வந்த பயணிகள் ஐந்து கி.மீ., துாரமுள்ள ஏலகிரிமலைக்கு நடந்தே சென்றனர். மலையில் பஸ் நின்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஏலகிரிமலைக்கு பழைய பஸ்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி பழுதடைகிறது.  தற்போது

பேட்டி

Image
அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிங்   வேலுாரில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் பேட்டி வேலுார், ஏப். 22– அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு உளவியல் ரீதியாக  கவுன்சிலிங் தரப்படும் என வேலுாரில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார். வேலுார் மாவட்டம், வேலுார் காகிதப்பட்டறையில் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு  இல்லம் உள்ளது. இங்கு 42 சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் 27 ல் இரவு இங்குள்ள  ஆறு சிறுவர்கள் காவலர்களை தாக்கி  விட்டு தப்பிச்சென்றனர். அடிக்கடி சிறுவர்கள் இல்லத்தில் உள்ள பொருட்களை உடைக்கின்றனர்.  இதையடுத்து டெல்லியில் உள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் இன்று மாலை வேலுார் இல்லத்திற்கு வந்து ஆய்வு  செய்து  சிறுவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஆணைய உறுப்பினர் ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது: வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பிச்சென்றது குறித்து ஆணையம் தாமாக முன்வ

பேட்டி

Image
வேலூர்   21-4-23  தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் சிறார்கள் அடிக்கடி தப்பி செல்வது குறித்து காரணங்களை ஆய்வு செய்ய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் வேலூரில் சிறார்கள் இல்லத்தில் ஆய்வு 30 சிறுவர்களுக்கு ஒரு ஆலோசகர்களை நியமிக்க ஆணையம் டெல்லியில் பரிந்துரை செய்வோம் பேட்டி ___________________________________________        வேலூர்மாவட்டம்,வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள இளம் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள சிறார் பாதுகாப்பு இல்லத்தை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் அதிகாரிகளுடன் இல்லத்தில் ஆய்வு செய்து இளம் சிறார்களிடமும் அங்குள்ள குறைகள் குறித்து கேட்டறிந்தார்       பின்னர் டாக்டர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் காஞ்சிபுரம் வேலூர் உள்ளிட்ட அரசினர் பாதுகாப்பு இல்லங்களில் சிறார்கள் தப்பி செல்கின்றனர் இதுகுறித்து குழந்தைகள் உ

பேட்டி

Image
வேலூர்   19-4-23 வேலூரில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆட்சியர் துவங்கி வைத்தார் பள்ளிகளில் மாணவர்களின் இடை நிற்றலை தடுக்க முழு நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் பேட்டி  _________________________________    வேலூர்மாவட்டம்,வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள மாநகராட்சிப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார் இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் பள்ளியில் மாணவர்கள் அதிக அளவு சேர வேண்டுமென பள்ளி பைகள் புத்தகங்கள் எழுதுகோல் போன்றவைகளும் வழங்கப்பட்டது  இதில் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் அதிக அளவு பள்ளிகளில் சேர்கிறார்கள் தற்போது விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் 85 பள்ளிகளில் செயல்படுத்தபடுகிறது     பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதல்வரின் முயற்சியால் மாணவர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பள்ளிகளில் சேர்த்து வருகிறோம் காலை உணவு திட்டத்தால் ஏழை எளிய

கைது

Image
திருப்பத்தூர்மாவட்டம்   வேலூர்   19-4-23  திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழு போலி மருத்துவர்கள் கைது!  போலீசார் அதிரடி நடவடிக்கை திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலி மருத்துவர்கள் பிடிக்க அனைத்து காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன் காரணமாக காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய தனி படையினர் இணைந்து மாவட்டம் முழுவதிலும் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கந்திலி காவல் நிலையத்தில் வேலு,ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில்  மனோரஞ்சிதம், குருசிலாப்பட்டு காவல் நிலையத்தில் பழனி, நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் அருண், ஆலங்காயம் காவல் நிலையத்தில் தனபால், உமராபாத் காவல் நிலையத்தில் இம்மானுவேல் மற்றும் ஜெயபால் ஆகிய 7 போலி மருத்துவர்கள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்  மேலும் மருத்துவம் பார்க்க வைத்திருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்

உடைப்பு

Image
வாலாஜாப்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டு இருந்த தங்கமுலாம்  பூசிய எம்ஜிஆர் சிலையை மர்மநபர்கள் நள்ளிரவில் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கழகத்தின் நிறுவனரும் தமிழகத்தின் முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் அவர்களின் தங்கமுலாம் பூசப்பட்ட வெங்கல சிலை வாலாஜாபேட்டை நகரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு  அதிமுக கட்சி நிர்வாகிகள் மூலமாக வைக்கப்பட்டு  ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் நினைவுநாள் மற்றும் கட்சி சார்ந்த நிகழ்வின்  போது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் யாரோ, சிலையின் இரும்பு பூட்டை உடைத்து எம்ஜிஆரின் இடது கை, மற்றும் அவருடைய கால், பகுதி பெயர் பலகை, ஆகியவை முழுவதும்  உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த அக்கட்சியை சார்ந்த  நிர்வாகிகள் உடைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையை பார்த்து அதிர்ச்சியடைந்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர் அத

ஆர்பாட்டம்

Image
வேலூர்   19-4-23 தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில்  41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக அறிவிக்க  வேண்டும் இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் 7500 சாலை பணியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள்  ஆர்ப்பாட்டம்       வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் குமரவேல் தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது இதில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் இறந்த சாலை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும் தர ஊதியம் 1900 ஆக உயர்த்தி அன்ஸ் கில்டு பணியாளராக அறிவித்திட வேண்டும் 7500 க்கு மேற்பட்ட சாலை பணியாளர்கள் காலிஇடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும்  அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்திட வேண்டும் அகவிலைப்படி நிலுவை சரண் விடுப்பு சம்பளங்கள்

கைது

Image
வேலூர்   19-4-23 செவிலியர் கல்லூரியில் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற சான்றிற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வட்டார சுகாதாரமேற்பார்வையாளர் கைது ____________________     வேலூர்மாவட்டம்,பில்டர் பெட் சாலையில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது இதில் பயிலும் செவிலியர் மாணவிகள் 2மாதகாலம் அரசு மருத்துவமனைகளில் நேரடி பயிற்சியை எடுக்க வேண்டும் இந்த பயிற்சிக்காக சான்றுகள் தேவை என கல்லூரியின் முதல்வர் சகுந்தலா வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் சான்றுக்கு அனுகியுள்ளார் இதில் கிருஷ்ணமூர்த்தி தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் அளித்தால் முடித்து தருவதாக கேட்டுள்ளார் இதில் ஒப்புகொண்ட முதல்வர் கல்லூரிக்கு நேரடியாக வந்து பணத்தை பெற்றுகொள்ளுமாறு கூறி அழைத்துள்ளார் இதனால் சகுந்தலா  வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் முன்னதாக புகார் அளித்திருந்தார் கல்லூரிக்கு சென்று கிருஷ்ணமூர்த்தி ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கையும் களவுமாக கைது செய்தனர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குபதிவு செய

இலவசம்

Image
வேலூர்   21-4-23 வேலூரில் கோடை காலத்தில் வித்தியாசமான முறையில் சித்த மருத்துவ பானங்கள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்குதல் துவக்கம்  _________________________________      வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் நீதிமன்ற வளாகம் அருகில் புற்று மகரிஷி சமூக மருத்துவ மையத்தின் மூலம் வேலூரில் கடும் வெய்யிலின் தாக்கம் உள்ளது இதனை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கோடை கால சித்த மருத்துவ பானங்கள் ஊறல் நீர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் மூலிகை குடில் அமைத்து இம்காப்ஸ் இயக்குநர் டாக்டர் பாஸ்கரன் தலைமையில் இன்று முதல் 15 நாட்களுக்கு பொதுமக்களுக்கு நன்னாரி ஊறல் நீர் வெட்டிவேர் ஊறல் நீர் சோற்று கற்றாழை சாறு,சீரக தண்ணீர் மோர் ஆகிய ஐந்து வகையான மூலிகை பானங்கள் பானைகளில் வைக்கப்பட்டு இலவசமாக 15 நாட்களுக்கு பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடபிரகாசம் துவங்கி வைத்தார் இதில் பாண்டிசேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குநர் சிவக்குமார் மருத்துவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் பொதுமக்கள் வித்தியாசமாக உள்ள சித்த மருத

பேட்டி

Image
வேலூர்   21-4-23  தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் சிறார்கள் அடிக்கடி தப்பி செல்வது குறித்து காரணங்களை ஆய்வு செய்ய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் வேலூரில் சிறார்கள் இல்லத்தில் ஆய்வு 30 சிறுவர்களுக்கு ஒரு ஆலோசகர்களை நியமிக்க ஆணையம் டெல்லியில் பரிந்துரை செய்வோம் பேட்டி ___________________________________________        வேலூர்மாவட்டம்,வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள இளம் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள சிறார் பாதுகாப்பு இல்லத்தை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் அதிகாரிகளுடன் இல்லத்தில் ஆய்வு செய்து இளம் சிறார்களிடமும் அங்குள்ள குறைகள் குறித்து கேட்டறிந்தார்       பின்னர் டாக்டர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் காஞ்சிபுரம் வேலூர் உள்ளிட்ட அரசினர் பாதுகாப்பு இல்லங்களில் சிறார்கள் தப்பி செல்கின்றனர் இதுகுறித்து குழந்தைகள் உ

கைது

Image
8 வயது சிறுமியை சில்மிஷம் செய்த முதியவர்  கைது ஜோலார்பேட்டை, ஏப். 22– ஜோலார்பேட்டை வழியாக சென்ற ரயிலில் பயணம்  செய்த எட்டு வயது சிறுமியை சில்மிஷம் செய்த 64 வயது முதியவரை போலீசார் கைது  செய்தனர். மும்பையை சேர்ந்த ஒருவர் தனது எட்டு வயது மகளுடன் கேரளா மாநிலம்,  திருவனந்தபுரம் செல்ல மும்பையிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணம்  செய்தார். இந்த ரயில்  திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே இன்று அதிகாலை சென்றது. அப்போது அதே பெட்டியில் பயணம்  செய்த வேலுார் மாவட்டம்,  காட்பாடி காந்திநகரை சேர்ந்த பாபு, 64, என்பவர் சிறுமியை பாலியல் சில்மிஷம்  செய்தார். புகார்படி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பாபுவை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.

விபத்து

Image
கோதுமை ஏற்றிச்சென்ற ரயில் தடம்புரண்டது சோளிங்கர், ஏப். 22– சோளிங்கர் அருகே, கோதுமை ஏற்றிச் சென்ற ரயிலின் கார்டு பெட்டி தடம் புரண்டது. சென்னையிலிருந்து கோவைக்கு 58 பெட்டிகளில் கோதுமை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே  மகேந்திரவாடி ரயில்வே ஸ்டேஷன் அருகே இன்று காலை 11:00 மணிக்கு சென்ற போது லுாப் லைனில் கார்டு பெட்டியின் நான்கு சக்கரங்களும் கீழே இறங்கி தடம் புரண்டது. ஜோலார்பேட்டையிலிருந்து வந்த மீட்பு குழுவினர் நான்கு மணி நேரம் போராடி சரி செய்தனர். இது குறித்து அரக்கோணம் ரயில்வே அதிகாரிகளை கேட்டதற்கு, லுாப் லைனில் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று கூறினர்.

பறிமுதல்

Image
பெங்களூருக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் குடியாத்தம், ஏப். 22– குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பெங்களூருக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் வருவாய்த்துறையினர் இன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அதில், குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷன் முதலாவது பிளாட்பாரத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல்  செய்தனர். விசாரணையில், குடியாத்தத்திலிருந்து, கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் குறித்து வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.

கைது

Image
கிளினிக் நடத்தி கருக்கலைப்பு செய்து வந்த போலி டாக்டர் கைது ஆம்பூர், ஏப். 23– ஆம்பூர் அருகே கிளினிக் நடத்தி கருக்கலைப்பு செய்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது  செய்தனர். திருப்பத்துார் மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான போலி டாக்டர்கள் கிளினிக் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். கடந்த வாரம் திருப்பத்துார், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி பகுதியில் கிளினிக் நடத்தி வந்த ஏழு போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில், 2ம் வகுப்பு மட்டும் படித்து விட்டு கிளினிக் நடத்தி பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்த போலி டாக்டர் இமானுவேல், 60, என்பவரை உம்மராபாத் போலீசார் இன்று கைது  செய்தனர்.

பலி

Image
தண்ணீரில் கழிவுநீர்  கலந்ததால் 14 ஆடுகள் பலி வேலுார், ஏப். 23– கே.வி. குப்பம் அருகே, தண்ணீரில்  கழிவுநீர் கலந்ததால் 14 ஆடுகள் இறந்தன. வேலுார் மாவட்டம், கே.வி. குப்பம் அருகே துருவம் பகுதியை சேர்ந்தவர் ரவி, 50. விவசாயி. இவர் 14 ஆடுகளை வளர்ந்து வந்தார். கடந்த 20 ம் தேதி அருகே உள்ள துருவம் வனப்பகுதியில் மேச்சலுக்கு ஆடுகளை அனுப்பினார். அன்று மாலை திரும்பி வந்த ஆடுகள் அங்கிருந்த கால்வாயில் தண்ணீர் குடித்தது. சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி 14 ஆடுகள் இறந்தன. இது குறித்து கே.வி. குப்பம் போலீசில் ரவி புகார் செய்தார். போலீசார் நடத்திய  விசாரணையில், கால்வாயில் கழிவுநீர் கலந்ததால் தண்ணீர் விஷமாகி அதை குடித்த ஆடுகள் இறந்தது தெரியவந்தது. கால்வாயில் கழிவுநீர் கலந்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

முகாம்

Image
பழைய தங்கத்தை மாற்றிக் கொள்ள  எக்சேஞ்ச் பாலிசி திட்டம் அறிமுகம் வேலுார், ஜூன்  வேலுார் மாவட்டம், வேலுார் அண்ணாசாலையில் டாடா நிறுவனத்தின் தனிஷ்க் நகைக்கடை உள்ளது.  டைட்டான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜாய் சாவ்லா இங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், தனிஷ்க் நகைக்கடையில் கோல்ட் எக்சேஞ்ச் பாலிசி  திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து  வருவதால் வாடிக்கையாளர்கள் தங்களிடமுள்ள பழைய நகைகளை மாற்றிக்கொண்டு புதிய டிசைனில் நகைகள் வாங்குவதன் மூலம் அதன் மதிப்பு அதிகரிக்கும். இதற்காக 20 காரட் பழைய நகைளை மாற்றினால் தங்கத்தின் மீது 100 சதவிதம் பரிமாற்ற மதிப்பு வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் 100 டன் பழைய தங்கத்தை இதுவரை மாற்றிக்கொண்டுள்ளனர். எந்த நகைககடையில் வாங்கப்பட்ட பழைய நகைகளும் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பட்டமளிப்பு விழா

Image
வேலூர்  19-6-23 மாணவர்கள் அரசு வேலை மட்டும் நம்பாமல்ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டங்களிலும் தொழில்களை துவங்கி தொழில் முனைவோர்களாக வேண்டும் - நாட்டில் சுயதொழில்கள் பெருக்கத்தால் பொருளாதாரம் 6 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது மத்திய இணை அமைச்சர் வி கே சிங் பேச்சு  வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேர்க்காட்டில்   திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் 17ஆவது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான  .ரவி தலைமையில் நடைபெற்றது.இதில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர்,வி.கே சிங்,மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் . பொன்முடி,பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.விழாவில்,417 முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள்  உள்பட 564 மாணவ மாணவியர்களுக்கு நோடியாக பட்டங்களை ஆளுநர் ரவி வழங்கினார்.  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வி கே சிங்,பட்டங்களை பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.கல்லூரி படிப்பை முடித்துள்ள நீங்கள் உலகில் பல சவால்களை எதிர்த்து போராட வேண்ட

பேட்டி

Image
வேலூர்   20-6-23 தென் மண்டல பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் சுற்றுலா சேவை வரும் 1 ஆம் தேதி முதல் துவங்குகிறது இதில் சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகள் கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்து 12 நாட்கள் பல மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லலாம் சுற்றுலா பிரிவு ரயில்வே பொது மேலாளர் ரவிகுமார் காட்பாடியில் பேட்டி  வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வேயின் சுற்றுலா பிரிவின் மேலாளர் ரவிகுமார் மற்றும் துணை மேலாளர் மாலதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்  ஐ.ஆர்.சி.டிசியானது சுற்றுலாபயணிகளுக்கான பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது  இந்த ரயிலில் 3 குளிர்சாதன வசதிகொண்ட பெட்டியும் 8 ஸ்லீப்பர் கோச்சுகளும் 1 பேண்ட் ரி மற்றும் 2பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் அடங்கும் இந்த ரயில் தென் மண்டலம் சார்பில் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இதன் சுற்றுலா சேவையானது வரும் 1 ஆம் தேதி  துவங்கி 12 நாட்கள் சுற்றுலா செல்கிறது இதில் ஒரே நேரத்தில் 750 பயணிகள் சுற்றுலா செல்ல மட்டும் பயணிக்கலாம் பொது பயணிக

பேட்டி

Image
வேலூர்   20-6-23 வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயம் வரும் 25 ஆம் தேதி 4 ஆவது மகா கும்பாபிஷேகம் ரூ.5 கோடி செலவில் தங்க கொடிமரம் தகடுகள் பொருத்தப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது 1120 சிறிய கலசங்களுடன் 150 பெரிய கலசங்களுடன் பிரம்மாண்ட யாக சாலை அமைத்து கும்பாபிஷேகம் நடக்கும் லட்சகணக்கான மக்கள் திரள்வார்கள் - ஆலய நிர்வாகிகள் பேட்டி  _______________________________     வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது வரலாற்றுசிறப்பு மிக்க ஆலயம் 400 ஆண்டுகள் வழிபாடில்லாமல் மூடப்பட்டிருந்தது 1981 ஆம் ஆண்டு தான் மக்களின் உதவியுடன் பொதுமக்களே வழிபாட்டிற்காக திறந்து இன்றுவரையில் நிர்வகித்து வருகின்றனர் மக்களால் நிர்வாகிக்கபடும் ஆலயம் கும்பாபிஷேகம் குறித்தும் நிர்வாகிகள் சண்முகம்,சுரேஷ்,சச்சிதானந்த சுவாமிகள் வெங்கடசுப்பு ,ரமேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் இந்த ஆலயம் 4 ஆவது கும்பாபிஷேகம் முன்னிட்டு மக்கள் உதவியுடன் இரண்டு கொடிமரங்கள் கோபுர கலசங்கள் போன்றவைகள் தங்க தகடுகள் பொருத்தப்பட்டு மூலஸ்தான ஜலகண்டீஸ்வரருக்கு ஸ்வர்னபந்தனமும

பேட்டி

Image
வேலூர்   20-6-23 வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயம் வரும் 25 ஆம் தேதி 4 ஆவது மகா கும்பாபிஷேகம் ரூ.5 கோடி செலவில் தங்க கொடிமரம் தகடுகள் பொருத்தப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது 1120 சிறிய கலசங்களுடன் 150 பெரிய கலசங்களுடன் பிரம்மாண்ட யாக சாலை அமைத்து கும்பாபிஷேகம் நடக்கும் லட்சகணக்கான மக்கள் திரள்வார்கள் - ஆலய நிர்வாகிகள் பேட்டி  _______________________________     வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது வரலாற்றுசிறப்பு மிக்க ஆலயம் 400 ஆண்டுகள் வழிபாடில்லாமல் மூடப்பட்டிருந்தது 1981 ஆம் ஆண்டு தான் மக்களின் உதவியுடன் பொதுமக்களே வழிபாட்டிற்காக திறந்து இன்றுவரையில் நிர்வகித்து வருகின்றனர் மக்களால் நிர்வாகிக்கபடும் ஆலயம் கும்பாபிஷேகம் குறித்தும் நிர்வாகிகள் சண்முகம்,சுரேஷ்,சச்சிதானந்த சுவாமிகள் வெங்கடசுப்பு ,ரமேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் இந்த ஆலயம் 4 ஆவது கும்பாபிஷேகம் முன்னிட்டு மக்கள் உதவியுடன் இரண்டு கொடிமரங்கள் கோபுர கலசங்கள் போன்றவைகள் தங்க தகடுகள் பொருத்தப்பட்டு மூலஸ்தான ஜலகண்டீஸ்வரருக்கு ஸ்வர்னபந்தனமும

பட்டமளிப்பு விழா

Image
வேலூர்மாவட்டம்.      19.6.2023 திருவள்ளூர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா அரங்குக்கு அருகே திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு இந்த  விழாவில் இந்த தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான துரைமுருகன் பெயர் பங்கேற்கவில்லை என குற்றச்சாட்டு வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள  திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் 17வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான R.N .ரவி தலைமையில் நடைபெற்றது.  இதில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர், வி.கே சிங், மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில், 417 முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள்  உள்பட 564 மாணவ மாணவியர்களுக்கு நோடியாக பட்டங்களை ஆளுநர் R.N. ரவி வழங்கினார். மொத்தமாக 1, 13,275 மாணவ மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வி கே சிங், பட்டங்களை பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கல்லூரி படிப்பை முடித்துள்ள நீங்கள் உலகி

விரைவில் விமானத்தில் பறக்கலாம்

Image
வேலுார் விமான நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் மத்திய அமைச்சர் சிங் பேட்டி வேலுார், ஜூன் 19– மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை, சிவில் விமான துறை இணை அமைச்சர் விகே சிங் வேலுாரில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவில் தனிநபர் வருமானம் 6 சதவிதம் உயர்ந்துள்ளது. இதை பார்த்து உலக நாடுககள் பாராட்டுகின்றனர். உலக மக்கள் மத்தியில் இந்தியா தலைநிமர்ந்துள்ளது. இந்தியாவில் 61 வகையான தொழில்களுக்கு 132 நாடுகள் முதலிடு செய்துள்ளன. இதனால்  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளன. நாடு முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஜல்ஜீ திட்டத்தில் ஒவ்வொரு  கிராமத்திலும், ஊரிலும்  பைப்புக்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. கிராமப்பகுதியில் ஒவ்வொரு நாளும் 38 கிமி துாரம் புதியதாக சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலை வசதியில்  இந்தியா 2வது இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டிற்குள் சாலை அமைப்பதில் இந்தியா முதல் இடத்திற்கு வரும். 2014 ம் ஆண்டில் 74 விமான நிலையங்கள் இந்தியாவில் இருந்தன. தற்போது 148 வ

விரைவில் வேலூர் விமான நிலையம் மத்திய அமைச்சர் பேட்டி

Image
நவோதயா பள்ளிகள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பிரதமர் மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் இந்தியாவில் அனைத்து  துறைகளும் முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக கிராமப்பகுதிகளில் கழிப்பறை,  குடிநீர், சாலை மேம்பாடு, வீடுகளுக்கு  குடிநீர் இணைப்பு போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பாஜ அகில பாரத துணை தலைவர் அருணா, மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயலாளர் வெங்கடேசன், ஓபிசி மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார்,  மாவடட தலைவர் மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாபு, ஜெகன்நாதன்,  சிந்தனையாளர் பிரிவு தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் சரவணன் உடனிருந்தனர்  திருத்தப்பட்ட செய்தி வேலுார் விமான நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் மத்திய அமைச்சர் சிங் பேட்டி படம் உள்ளது வேலுார், ஜூன் 20– மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை, சிவில் விமான துறை இணை அமைச்சர் விகே சிங் வேலுாரில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவில் தனிநபர் வருமானம் 6 சதவிதம் உயர்ந்துள்ளது. இதை பார்த்து உலக நாட

திருட்டு

Image
டாஸ்மாக் கடையை உடைத்து ரூ 2 லட்சம் மது பாட்டில்கள் திருட்டு திருவண்ணாமலை, ஜூன் 20– திருவண்ணாமலை மாவட்டம், கருத்துவாம்பாடி கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு 10:00 மணிக்கு விற்பனையை முடித்து விட்டு கடையை மூடிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். இன்று கடையை திறக்க வந்த போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு போனது தெரியவந்தது. டாஸ்மாக் மேலாளர் புஷ்பலதா கொடுத்த புகார்படி  திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கைது

Image
போஸ்கோ 3 பேர் கைது வேலுார், ஜூன் 20– வேலுார் மாவட்டம், கேவிகுப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 52, விவசாயி. இவர் வீட்டிற்கு எதிரே உள்ள 30 வயது மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சில நாட்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்தார். புகார்படி காட்பாடி மகளிர் போலீசார் போக்சோவில் கோவிந்தசாமியை இன்று கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர். * திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பெண்டை கிராமத்தை சேர்ந்தவர் துரைமுருகன், 20. இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். புகார்படி செய்யாறு மகளிர் போலீசார் போக்சோவில் துரைமுருகனை இன்று கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர். * திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வில்வாரணி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன், 24.  இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததால் அந்த பெண் 5 மாதம் கர்ப்பமானார். பிறகு பெண்ணை கட்டாயப்படுத்தி  கருக்கலைப்பு செய்த வைத்தார். புகார்படி போளுர் மகளிர் போலீசார் கிரிதரனை போக்சோவில்  இன்று கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.