Posts

Showing posts from January, 2023

மறைவு

Image
பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வயது மூப்பு  காரணமாக காலமானார் வேலுார், ஜன.  1,500 படங்களுக்கு சினிமா சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய ஜூடோ ரத்தினம்  தன் 95 வது வயதில்  காலமானார். வேலுார் மாவட்டம், குடியாத்தம், தர்ணம்பேட்டை பெரியப்ப முதலி தெருவை சேர்ந்தவர் கே.கே. ரத்தினம். இவர் சினிமா சண்டை பயிற்சி இயக்குனராகியதால் ஜூடோ ரத்தினம் என அழைக்கப்பட்டார். 1959 ம் ஆண்டு  தாமரைக்குளம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். பிறகு சில  படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார்.  1966 ம் ஆண்டு வல்லவன் ஒருவன் படத்திலிருந்து சண்டை பயிற்சி இயக்குனரானார். 1980 ம் ஆண்டு ஒத்தையடி பாதையிலே என்ற படத்தை தயாரித்தார். 1,500 படங்களுக்கு  சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். சங்கராதாஸ் சுவாமிகள் விருது , தமிழ்நாடு அர

மறைவு

Image
பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வயது மூப்பு  காரணமாக காலமானார் வேலுார், ஜன.  1,500 படங்களுக்கு சினிமா சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய ஜூடோ ரத்தினம்  தன் 95 வது வயதில்  காலமானார். வேலுார் மாவட்டம், குடியாத்தம், தர்ணம்பேட்டை பெரியப்ப முதலி தெருவை சேர்ந்தவர் கே.கே. ரத்தினம். இவர் சினிமா சண்டை பயிற்சி இயக்குனராகியதால் ஜூடோ ரத்தினம் என அழைக்கப்பட்டார். 1959 ம் ஆண்டு  தாமரைக்குளம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். பிறகு சில  படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார்.  1966 ம் ஆண்டு வல்லவன் ஒருவன் படத்திலிருந்து சண்டை பயிற்சி இயக்குனரானார். 1980 ம் ஆண்டு ஒத்தையடி பாதையிலே என்ற படத்தை தயாரித்தார். 1,500 படங்களுக்கு  சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். சங்கராதாஸ் சுவாமிகள் விருது , தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது  பெற்றுள்ளார். நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, கமல், பிரேம் நசீர், விஜய், அஜித் என அத்தனை நடிகர்களுக்கும் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,  கன்னடம், இந்தி ஆகி

1008 திருவிளக்கு பூஜை

Image
வேலூர்  26-1-23 வேலூர் அரியூர் தங்ககோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை சிறப்பு பிரார்த்தனைகளுடன் நடந்தது  _________________________________     வேலூர்மாவட்டம்,அரியூரில் உள்ள ஸ்ரீநாராயணி தங்க கோவில் 23 ஆம் ஆண்டை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும் மக்கள் நலமுடன் வாழவும் விவசாயம் செழிக்கவும் இயற்கை வளங்கள் பெருகிடவும் 1008 திரு விளக்கு பூஜையானது நடைபெற்றது இதில் தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா கலந்துகொண்டு திரு விளக்கு பூஜையை நடத்தினார் இந்த விளக்கு பூஜையின் போது பெண்கள் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது இதில் இயற்கை வளங்கள் பெருகவும் மக்கள் நலமுடன் அமைதியாக வாழவும் பிரார்த்தனை செய்து பெண்கள் திருவிளக்கு பூஜையை செய்தனர் இதில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜையை செய்தனர் சுவாமிகள் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று தீபாராதனைகளும் நடந்தது

பாராட்டு

Image
Received award from respected district collector for my social services. 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் நேதாஜி அரங்கில் நடந்த குடியரசு தின விழாவில் எனது சேவைகளை பாராட்டி மதிப்பிற்குரிய வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. குமாரவேல் பாண்டியன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.  உங்களால் தான் இது சாத்தியம்.. உங்களுக்காகவே நான். Jaihind🇮🇳 - Dinesh Saravanan

குடியரசு தின விழா

Image
இந்தியா குடியரசு தின நிகழ்ச்சி இன்று (26/1/2023) திராவிட முஸ்லிம் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் G.S.இக்பால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் S.முகமது கான் மாநகர செயலாளர் A.இம்ரான் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளராக    வேலூர் சட்டமன்ற உறுப்பினரும் (தி.மு.க) வேலூர் மாநகர செயலாளர் ஆகிய P.கார்த்திகேயன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் பள்ளி சிறுவர்களுக்கு கல்வி உபகாரங்கள், வீல் சேர் வாகனம் வழங்கினார்...

ராணிப்பேட்டை குடியரசு தின விழா

Image
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடியரசு தினவிழா ராணிப்பேட்டை,  ராணிப்பேட்டை மாவட்டத்தில்,  நடந்த குடியரசு  தினவிழாவில் கலெக்டர் தேசியகொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர். ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட  கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் 18 அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், டாக்டர், போலீசார் என 826 பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் 21 போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கங்களை அவர் வழங்கினார். தொடர்ந்து 221 பேருக்கு ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் எஸ்.பி., தீபா சத்யன்,  மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருப்பத்தூர் குடியரசு தின விழா

Image
திருப்பத்துார் மாவட்டத்தில் குடியரசு தினவிழா திருப்பத்துார், ஜன.  திருப்பத்துார் மாவட்டத்தில்,  நடந்த குடியரசு  தினவிழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசியகொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர். திருப்பத்துார் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா,  திருப்பத்துார் பாச்சல் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடந்தது.  மாவட்ட  கலெக்டர் அமர் குஷ்வாஹா தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து 129 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 44 லட்சம் ரூபய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள்  வழங்கினார்.  சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் எஸ்.பி., பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்துார் கோட்டாச்சியர் லட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, வேளாண்மை இணை இயக்குனர் பாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

சீல் வைக்க உத்தரவு

வேலுார் மாநகராட்சி 1.386 கடைகளுக்கு சீல் வைக்க கமிஷனர் உத்தரவு வேலுார், ஜன.  வேலுார் மாநகராட்சியில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ள 1,386 கடைகளுக்கு சீல் வைக்க  கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். வேலுார் மாநகராட்சியில், சொத்துவரி, தொழில்  வரி, குப்பை வரி, குடிநீர் கட்டணம் மற்றும் மாநகராட்சி கடைகளுக்கு வாடகை பாக்கி என  மொத்தம் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாக வேண்டியதுள்ளது. இவற்றை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ள 1,386 கடைகளுக்கு சீல் வைக்க கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இன்று ஆறு  கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் தனசேகரன் சீல் வைத்தார். மற்ற கடைகளுக்கும் விரைவில் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.    

பலி

Image
ஆம்பூர் அருகே பைக்குகள் மோதி 2 பேர் பலி ஆம்பூர், ஜன.  ஆம்பூர் அருகே,  பைக்குகள் மோதி இரண்டு பேர் பலியாகினர். வேலுார் மாவட்டம், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முகமது  காசிம், 26.  சென்னை சோழிங்கநல்லுார் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 23. மிட்டாய் வியாபாரிகளான இவர்கள் நேற்று  இரவு 10:00 மணிக்கு பல்சர் பைக்கில், திருப்பத்துார் மாவட்டம், வணியம்பாடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூர் அருகே மின்னுார் தேசிய நெடுஞ்சாலையில்  சென்ற போது,  குடியாத்தம் அடுத்த காரம்பட்டி பகுதியிலிருந்து   பின்னால் வந்த யமகா பைக் இவர்கள் மீது மோதியது. இதில் இரு  பைக்குகளும்  கவிழ்ந்தது. விபத்தில் சைதாப்பேட்டை பைக்கில் சென்ற காசிம், அருண்குமார், காரம்பட்டி பைக்கில் சென்ற காரம்பட்டி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சசிகுமார், 45, அவரது மகன் சுசில்குமார், 15, உறவினர் மாதனுாரை சேர்ந்த பெருமாள், 35, ஆகியோர் படுகாயமடைந்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் இவர்களை மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சசிகுமார், பெருமாள் ஆகியோர் இன்று அதிகாலை 3:00 மணிக்கு இறந்தனர். அதிக வேகமா

வேலூர் குடியரசு தின விழா

Image
வேலுார் மாவட்டத்தில் குடியரசு தினவிழா வேலுார், ஜன. வேலுார் மாவட்டத்தில்,  நடந்த குடியரசு  தினவிழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசியகொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர். வேலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா,  வேலுார் நேதாஜி மைதானத்தில் நடந்தது.  மாவட்ட  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் 34 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய 46 போலீசாருக்கு பதக்கம், 271 அரசு ஊழியர்களுக்கு சான்றிதழ், சிறந்த சமூக சேவருக்கான சத்துவாச்சாரி  தினேஷ் சரவணனுக்கு சான்றிதழ்  அவர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.பி., ராஜேஸ் கண்ணன், தி.மு.க.,  எம்.எல்.ஏ., க்கள் கார்த்திகேயன், நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வேலுார் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, வேலுார் மாநராட்சியில் நடந்த விழாவில் மேயர் சுஜாதா ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர்.

வாழ்த்து

Image
🙏🤝 Happy Pongal. தமிழ்நாடு போற்றும் பொங்கல் புத்தாண்டே வருக புத்துணர்வு தருக! தை மாத முதல் நாள் தமிழர்தம்  திருநாளில்  அனைவரின் இல்லங்களிலும் அன்பும் இன்பமும் பொங்க அமைதியும்  ஆனந்தமும் தங்க சமூக நீதி,சமத்துவம், சகோதரத்துவம் மலர்ந்து வசந்தம் வீசி  வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஓங்கி  மனிதநேயம் மலரட்டும். புத்தாடையுடுத்தி புத்தரிசி பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என பூரிப்புடன் முழக்கமிட்டு உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்து மகிழ்ச்சி பொங்க ஆனந்த கூத்தாடி கொண்டாடும் இந்நன்னாளில் என் நெஞ்சம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன், டாக்டர்.மு. ராஜமாணிக்கம் நிறுவனர் தலைவர் நமது மக்கள் கட்சி மாநிலத்தலைவர் அகில பாரதிய கோலி சமாஜ் தமிழ்நாடு முத்தரையர் சங்கம். வடக்கு மண்டல தலைவர் SFRBC.

பேட்டி

திருப்பத்தூர்மாவட்டம்     ஜல்லிக்கட்டு விதிகளுக்கு உட்பட்டு தமிழகத்தின் வட மாவட்டங்களில் எருது விடும் திருவிழா நடைபெறுகிறது. திருப்பத்தூர்  பகுதி மக்கள் விரும்பினால் ஜல்லிக்கட்டு விழாவை இங்கேயும் நடத்த நாங்கள் தயார். ஆலோசனை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் பேட்டி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்ட எருது விடுவோர் பாதுகாப்பு நல சங்கம் சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில துணை தலைவர் வாசு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு காளையும் இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் விட வேண்டும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும் மத்திய மாநில அரசு நெறிமுறைகளை இணைந்து கிராமங்களும் பின்பற்ற வேண்டும் ஒவ்வொரு கிராமங்களிலும் 200 டோக்கன்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு  ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் கூறுகையில்.ஜல்லிக்கட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வி

தெரியுமா

Image
அனைவருக்கும் தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் தை திங்கள் பொங்கல் திருவிழா வடநாட்டில் மகரசங்கராந்தி மகாராஷ்டிராவில் தில்கூடு விழா இது போல் உலகின் அனைத்து பகுதிகளிலும் சூரிய பகவானுக்காக வழிபாடு செய்கின்ற வகையில் தான் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது அது மட்டுமல்ல சூரியபகவான் வடதிசை நோக்கி நகர்ந்து உதிக்கின்ற உத்தராயண புண்ய காலம் தை முதல் ஆனி வரை ஆறுமாதகாலம்  பகல் பொழுது ஆடி முதல் மார்கழி வரை இரவு பொழுது இது தேவர்களுக்கு ஒரு நாளாக கருதப்படுகிறது நாம் பகல் பொழுதை தான் அதிகம் விரும்புகின்றோம் இரவில் நற்காரியங்கள் செய்வதை தவிர்க்கிறோம் பீஷ்மர் கூட உத்தராயண காலம் வரும் வரை இறப்பதற்கு காத்திருந்த வரலாறும் உண்டு இது சனாதன தர்மம்  சார்ந்த விழா ஆனால் இதை பொழுது போக்கு விழாவாக சமயம் சாராத விழாவாக மாற்ற போலி பகுத்தறிவு வாதம் பேசும் திராவிடத்தின் பெயரால் இயக்கம் நடத்தும்  கூட்டங்கள்  முடிந்தவரை முயற்சித்து தோல்வியடைந்து தற்போது வேறு வழியில்லாமல் பொங்கலோ பொங்கல் என கூவ ஆரம்பித்து விட்டனர் . என்றும் எப்போதும் வென்று காட்டும் சனாதன தர்மம் இந்து தர்மம்  அனைவருக்கும் தை திர

விழா

Image
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் கஸ்பா ஏ பகுதியில் ஸ்ரீஆண்டாள் பஜன் மண்டலி சார்பாக வருடா வருடம் இந்தப் பகுதியில் மார்கழி மாத நகர சங்கீர்த்தனம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது திருமதி சபிதா கோவிந்தராஜ் அம்மையார் அவர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தினம்தோறும் திரு வீதி உலா வந்து திருப்பாவை சாதிக்கிறார்கள் அவர்களுக்கு  ஸ்ரீமகாவிஷ்ணு சேவா சங்கம் சார்பாக சிறப்பு செய்து ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பெருவிழா அருட் பிரசாதம் வழங்கப்பட்டது

விழா

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் பேச்சு வேலூர், ஜன. தமிழியக்கம் சார்பில் சுரும்பியனின் இசைத்தமிழ், குறள்நெறி ஆகிய நூல்கள் வெளியிட்டு விழாவும், தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற புலவர் ம.நாராயணன், கவிஞர்கள் ம.சோதி,  மானூர் புகழேந்தி ஆகியோருக்கு பாராட்டு விழாவும் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடந்தது. விழாவிற்கு தமிழியக்க நிறுவனர், தலைவர், வி.ஐ.டி.வேந்தருமான கோ. விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது; உலகில் உள்ள மக்கள் 7,100 மொழிகள் பேசுகின்றனர்.இதில் இந்தியாவில் உள்ள தமிழ், சமஸ்கிருதம் ஆகியவை உள்பட 7 மொழிகள் மட்டுமே பழமையானது ஆகும். இதில் சில மொழிகள் வழக்கிலும், சில மொழிகள் எழுத்து, பேச்சு வடிவிலும் உள்ளன. இன்று வரை இளமை மாறாமல் உள்ள மொழி நமது தமிழ் மொழி தான். நமது தமிழ் மொழிக்கு இருக்கிற பெருமை வேறு எந்த மொழிக்கும் கிடையாது. தமிழ் மொழிக்காகவும், தமிழர்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பாடுபடுவது தான் தமிழ் இயக்கம். உயர்கல்வியில் இந்தியா 27 சதவீதம் உள்ளது. தமிழ்நாடு 50 சதவீதம் உள்ளது. உயர் கல்விக்கு  முக்கியத்துவம் கொடுக்க

கூட்டம்

Image
*ஆலோசனை கூட்டம்* : *தமிழ்நாடு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம்*    சென்னை தி.நகரில் நடைபெற்றது கூட்டத்தில்  *தமிழ்நாடு திருமலை திருப்பதி தேவஸ்தான துணைத்தலைவர், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்*  *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* அவர்கள் மற்றும் உறுப்பினர்கள்  கலந்துக்கொண்டனர்.

சோகம்

Image
நெமிலிசுற்றுவட்டாரத்தில்  புதியபூஞ்சை தாக்கம்  நெற்பயிர்கள் நாசம். விவசாயிகள் விரக்தி.  இராணிப்பேட்டை, ஜன, ராணிப்பேட்டை மாவட்டம்  நெமிலி, பனப்பாக்கம் மற்றும் காவேரிப்பாக்கம் அது சுற்றுவட்டாரமக்களின்  முக்கிய வாழ்வாதாரம்   விவசாயமாகும் . அப்பகுதிகளில்  குறுவைசாகுபடியாக  விவசாயிகள்  நெல் நடவுசெய்துள்ளனர் . இந்நிலையில் தற்போது  அதிகமான மூடுபணி காரணமாக  ஒருசில ரக நெற்பயிர்களில்  புதுவிதமான  சிவப்பு பூஞ்சை  தாக்கம் அதிகமாகி பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்பட்டுள்ளது  மேலும் பயிரின் இலைகள்  பசுமையின்றி   சிவப்பாகவே உள்ளது  இவ்விதமான   நோய் தாக்கத்தை கண்டுஅப்பகுதி  விவசாயிகள்  பயிர்களை மீட்க வழியின்றி உள்ளதாகவும் ஏற்கனவே மருந்து உரம் மற்றும் இடுபொருள்   செலவுகள் அதிகமாக செலவழித்து நெல் விலை குறைவாக உள்ளநிலையில்  இவ்விதமான புதியநோய் தாக்கம்  மேலும்  பாதிப்படையவைத்துள்ளதாக விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர் .

சைக்கிள் பயணம்

Image
7,500  கி.மீ., சைக்கிள் பயணம் செய்த மாணவி வேலுார் வந்தார் வேலுார், ஜன. பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தி, 7,500 கி.மீ., துாரம் சைக்கிளில் பயணம் செய்த மாணவி வேலுார் வந்தார். ம.பி., மாநிலம், பெஷாவரை சேர்ந்தவர் ஆஷாமால்வியா, 24. எம்.ஏ.,  படித்துள்ள இவர் கடந்தாண்டு நவ., மாதம் 1 ம் தேதி பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றத்தை  வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை பெஷாவரில் தொடங்கினார். இதற்காக நாடு முழுவதும் 28 மாநிலங்களில் 25 ஆயிரம் கி.மீ., துாரம் சைக்கிளில் செல்ல திட்டமிட்டுள்ளார். இதுவரை குஜராத், கோவா,  கர்நாடகா, கேரளா மாநிலத்திற்கு சென்ற அவர் தமிழகத்தில்  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கரூர் வழியாக வேலுாருக்கு   வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த அவரை வெற்றிகராமாக பயணத்தை முடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வாழ்த்தினார். இது குறித்து ஆஷாமால்வியா கூறியதாவது: இதுவரை 7,500 கி.மீ., பயணம் மேற்கொண்டுள்ளேன்.  வரும் ஆக., மாதம் 15 ம் தேதி டெல்லியில் பயணத்தை முடிக்க உள்ளேன். இவ்வாறு அவர்  கூறினார்.

பாதிப்பு

Image
பூஞ்சை நோயால் நெற்பயிர்கள் பாதிப்பு ராணிப்பேட்டை, ஜன. அரக்கோணம் அருகே, பூஞ்சை நோயால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே, நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நெற்பயிர்கள்  வளர்ச்சி குன்றி சிவப்பு கலரில் உள்ளது. சிறிது நாளில் நெற்பயிர்கள் காய்ந்து விடுவதால் 50 ஏக்கரில் நெற்பயிர்களை சாகுபடி  செய்த  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இது  குறித்து நெமிலி வேளாண்மை விரிவாக்க அலுவலர் ராமன் கூறியதாவது: இந்த பகுதியில் பூஞ்சை நோயால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவால் இந்த நோய் வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொண்டு மருந்து பெற்று நெற்பயிரில் தெளித்து நோயின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரவு

பெண் பஞ்சாயத்து தலைவரின் கணவர் தேசியக்கொடி ஏற்றக்கூடாது கலெக்டர் உத்தரவு வேலுார், ஜன.  பெண் பஞ்சாயத்து தலைவரின் கணவரோ, உறவினர்களோ தேசியக்கொடி ஏற்றக்கூடாது என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாளை (26) ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினத்தையொட்டி கிராம சபைக்கூட்டம் நடக்கும் இடம் குறித்து அந்தந்த பஞ்சாயத்தில் வசிக்கும் மக்களுக்கு அறிவிப்பு செய்திட வேண்டும். பஞ்சாயத்து தலைவர் தலைமையில்தான் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். பெண் பஞ்சாயத்து தலைவரின் கணவரோ, உறவினர்களோ தேசியக்கொடி ஏற்றக்கூடாது, கிராம சபை கூட்டத்திற்கு தலைமை வகிக்கக்கூடாது. ஜாதி, மத பாகுபாடின்றி கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கு

Image
 அஞ்சலக அரசு முத்திரையை   தவறாக பயன்படுத்திய   அ.தி.மு.க., நகர செயலாளர்   உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு தபால் ஊழியர்கள் 2 பேர் பணிநீக்கம் ராணிப்பேட்டை, ஜன. ஆற்காட்டில், அஞ்சலக அரசு முத்திரையை   தவறாக பயன்படுத்திய  அ.தி.மு.க., நகர செயலாளர்   உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  தபால் ஊழியர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி பொறியாளர் கணேசனிடம், டெண்டர் தொடர்பான அஞ்சலக முத்திரையுடன் கூடிய கடிதத்தை, ஆற்காடு நகர அ.தி.மு.க., செயலாளர் சங்கர், 56, கடந்த 20 ம் தேதி கொடுத்தார். போஸ்ட்மேன் கொடுக்க வேண்டிய கடிதத்தை அ.தி.மு.க., செயலாளர் சங்கர்  கொடுத்ததால் சந்தேகமடைந்த பொறியாளர் கணேசன் ஆற்காடு தபால் அதிகாரிகளிடம் புகார் செய்தார். அரக்கோணம் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் சிவசங்கரன் விசாரணை நடத்தினார். அதில், ஆற்காடு தற்காலிக தபால் ஊழியர்கள் ஜெய்சிங், 50, பிச்சை, 51,  ஆகியோர் அ.தி.மு.க., செயலாளர் சங்கரிடம் 2 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு, அவர் கொடுத்த தபாலுக்கு பழைய தேதியிட்டு அஞ்சல் முத்திரையிட்டு அவரிடமே கொடுத்தது

கூட்டம்

Image
தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு  -------------------------------------------------------------------------- தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் மாநில மத்தியக்குழுவின் கூட்டம் தமிழக அரசின் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் பூஜாரி அவர்கள் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.  முன்னதாக சிறைத்துறை துணைத்தலைவர் மற்றும் சங்க செயலாளர் எ.முருகேசன் வரவேற்று பேசினார். சங்கத்தின் இயக்குநரும் சிறைத்துறை துணைத்தலைவருமான ஆர்.கனகராஜ் செயல்பாடுகள் குறித்து பேசினார்.   பொருளாளார் வழக்கறிஞர் எஸ்.ஞானேஸ்வரன் நிதிநிலை அறிக்கையினை சமர்பித்து பேசினார்.   சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் மத்திய குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் சரக சிறைத்துறை துணைத்தலைவர் ஜி.பி.செந்தாமரைக்கண்ணன், மகளிர் சிறை கண்காணிப்பாளர் நீலமணி உள்ளிட்டோர் பேசினர்.   சரக சிறைத்துறை துணைத்தலைவர்கள் கே.ஜெயபாரதி,(திருச்சி),  சண்முகசுந்தரம்,(கோவை),

ஊர்வலம்

Image
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு ******** தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜி சரளா தலைமை தாங்கினார் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார் உதவி தலைமை ஆசிரியர் எம் மாரிமுத்து வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் கௌசல்யா புவனா துளசி ஜே செலின் கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்த நிகழ்வில் வாக்களிப்பது சிறந்தது நிச்சயம் வாக்களிப்பேன் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகள் ஊர்வலம் சென்றனர் பின்னர் பள்ளி வளாகத்தில் வாக்காளர் தின உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர் முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்

சபாஷ்

Image
*வேலூர் மாவட்டத்தில் ஆன்லைனில் ரூ.1,35,087 பணத்தை இழந்த பெண் மருத்துவ நிபுணரின் பணம் முழுவதும் மீட்கப்பட்டு சைபர் கிரைம் போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைப்பு* வேலூர் மாவட்டத்தில் வேலூர் CMC மருத்துவ வளாகத்தில்  பணிபுரியும் *பெண் மருத்துவ நிபுணர்* ஒருவருக்கு  செல்போனில் SBI Net banking முடக்கபட்டுள்ளதாகவும் அதனால் உடனே  PAN card update செய்ய வேண்டுமென வந்த SMS-ல் இருந்த லிங்க் கிளிக் செய்து வங்கி தொடர்பான விவரங்களை அதில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சைபர் திருடர்கள் அவரது வங்கி விவரங்களை தெரிந்து கொண்டு அவரது வங்கி கணக்கிலிருந்து 3 தவணைகளில் *ரூபாய் 1,35,087* பணத்தை அபகரித்து விட்டதாக கொடுத்த புகாரின்  அடிப்படையில் நடவடிக்கை எடுத்த வேலூர் சைபர் கிரைம் போலீசார்  இவர்கள் இழந்த *ரூ.1,35,087/-* பணத்தை மீட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.ராஜேஸ் கண்ணன் IPS* அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டம் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் *திரு.D.குணசேகரன்* அவர்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்கா

ரத்து

Image
வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் கடைகள் 5 வது முறையாக ஏலம் தள்ளி  வைப்பு வேலுார், ஜன.  வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட கடைகளுக்கு ஐந்தாவது முறையாக நடக்க இருந்த ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் 85 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் வணிக நோக்கத்திற்காக 74 கடைகள் ஏலம் விட்டு வாடகை கட்டணம் நிர்ணயிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஏற்கனவே நான்கு முறை ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ( 25) ம் தேதி காலை 10:00 மணிக்கு ஏலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏலம் ஐந்தாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளை கேட்டதற்கு, நிர்வாக காரணங்களுக்காக கடைகள் ஏலம் ரத்தாகி உள்ளது. வரும் 27 ம் தேதி ஏலம் நடைபெறும் என்று கூறினர்.

விழா

சட்டத்தை ஒரு பாடமாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வேலுார், ஜன.  சட்டத்தை ஒரு பாடமாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என   உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரமணா பேசினார். வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில்,  மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலாச்சாரியார் நினைவு தின கருத்தரங்கம் இன்று நடந்தது.  வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்தார். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பங்கேற்று ராஜகோபாலாச்சாரியர் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது: நமது சட்டம் அன்றாட தேவையாக உள்ளதால் அடிப்படை சட்டத்தை ஒரு பாடமாக பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்க வேண்டும். 75 ஆண்டுகள் சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்தியாவில் பெரும்பாலான நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. நீதிமன்றத்திற் வரும் மக்களுக்கு காத்திருப்பு அறைகள் இல்லை.  நீதிமன்ற அலுவலர்கள் இல்லை. நீதிமன்றங்களுக்காக மத்திய அரசு 60 சதவீத நிதியை  தருகிறது.  மாநில அரசுகள் 40 சதவீத நிதியை தர வேண்டும். ஆனால் பல மாநிலங்களில் போதிய நிதியை நீதித்துறைக்கு ஒதுக்குவதில்லை. நீதித்துறையில் அதிகளவ

VITவிழா

Image
சட்டத்தை ஒரு பாடமாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வேலுார், ஜன.  சட்டத்தை ஒரு பாடமாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என   உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரமணா பேசினார். வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில்,  மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலாச்சாரியார் நினைவு தின கருத்தரங்கம் இன்று நடந்தது.  வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்தார். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பங்கேற்று ராஜகோபாலாச்சாரியர் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது: நமது சட்டம் அன்றாட தேவையாக உள்ளதால் அடிப்படை சட்டத்தை ஒரு பாடமாக பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்க வேண்டும். 75 ஆண்டுகள் சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்தியாவில் பெரும்பாலான நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. நீதிமன்றத்திற் வரும் மக்களுக்கு காத்திருப்பு அறைகள் இல்லை.  நீதிமன்ற அலுவலர்கள் இல்லை. நீதிமன்றங்களுக்காக மத்திய அரசு 60 சதவீத நிதியை  தருகிறது.  மாநில அரசுகள் 40 சதவீத நிதியை தர வேண்டும். ஆனால் பல மாநிலங்களில் போதிய நிதியை நீதித்துறைக்கு ஒதுக்குவதில்லை. நீதித்துற

மீட்பு

Image
ஆன்லைனில் இழந்த மருத்துவ உதவியாளர் பணம் மீட்பு வேலுார், ஜன.  ஆன்லைனில் பணத்தை இழந்த மருத்துவ உதவியாளரின் பணம் மீட்டு ஒப்படைக்கப்பட்டது. வேலுார் பாரதி நகரை சேர்ந்தவர் ஹீமா, 36. இவர் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில், மருத்துவ உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மொபைல் போனுக்கு, பேன் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என வந்த குருஞ்செய்தியில் வந்த லிங்க்கை கிளிக் செய்து வங்கி குறித்த விவரங்களை அதில் படிவிட்டுள்ளார். இதனால் சைபர் திருடர்கள் அவரது  வங்கி  விவரங்களை தெரிந்து கொண்டு, அவரது வங்கி கணக்கிலிருந்து 2 லட்சம் ரூபாய் திருடிக்கொண்டனர். இது  குறித்து ஹீமா கொடுத்த புகார்படி வேலுார் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி, ஒரு லட்சத்தி 99 ஆயிரத்து 999 ரூபாயை மீட்டனர். மீட்கப்பட்ட பணம் வேலுார் மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., குணசேகரன் முன்னிலையில் ஹீமாவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஏ.டி.எஸ்.பி., குணசேகரன் பேசியதாவது: மொபைல் போன், குறுஞ்செய்தி, லிங்க் வாயிலாக வங்கி விவரங்களை பகிர கூடாது, ஆன்லைனில் உலவும் போலியான வேலை வாய்ப்பு விவரங்களை நம்ப

கைது

Image
அமைச்சரை போனில் மிரட்டிய 2 பேர் கைது ராணிப்பேட்டை, ஜன. அமைச்சர் காந்தியை போனில் மிரட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கைத்தறி துறை அமைச்சர் காந்தி கடந்த 21 ம் தேதி சென்னை சென்று விட்டு காரில் ராணிப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காலை 10:57 மணிக்கு அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர், தான் வக்கீல் என்றும், ராணிப்பேட்டையை சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணம் வாங்கியுள்ளார், அதை நீங்கள் தான் வாங்கித்தர  வேண்டும் என்று கூறியுள்ளார். சிறிது நேரம்  கழித்து அவரிடம் போனில் பேசிய மற்றொரு நபர், அமைச்சரை தொந்தரவு செய்து மிரட்டும் வைகையில் பேசியுள்ளார். இது குறித்து அமைச்சரின் உதவியாளர் ராஜசேகரன், 62, என்பவர் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கோகுல், 25, கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த பாலாஜி, 31, ஆகியோர் அமைச்சர் காந்தியை மிரட்டும் தொனியில் பேசியது தெரியவந்தது. போலீசார் அவர்களை இன்று  கைது  செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.