Posts

Showing posts from December, 2022

கைது

Image
குண்டாசில் கஞ்சா வியாபாரி கைது ஆற்காடு, டிச. ஆற்காட்டில் தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறையிலிருக்கும் கஞ்சா வியாபாரி மீது குண்டர்  சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கரன், 33. இவர் கடந்த மாதம்  28 ம் தேதி  தாய், மகள் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து ராணிப்பேட்டை மகளிர் போலீசார் பாஸ்கரனை கைது  செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். இவர் மீது 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு எஸ்.பி., தீபா சந்தியன் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில்  கைது செய்ய மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். போலீசார் அதற்கான நகலை சிறையிலுள்ள அவரிடம்  வழங்கினர்.

ஒப்பந்தம்

Image
புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலுார், டிச. வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகம் மற்றும் விஸ்டியான்  கல்வி குறித்த தொழில் நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது. இதனால் இரு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பரிமாற்றம் நடத்தப்படும். நிகழ்சியில் விஸ்டியான் நிறுவன இயக்குனர் சிவக்குமார், அம்ரிஷ், வி.ஐ.டி., துணைத் தலைவர்கள் சங்கர், சேகர், துணை வேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்த சாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

பலி

Image
பாம்பு கடித்து விவசாயி பலி அணைக்கட்டு, டிச. அணைக்கட்டு அருகே, பாம்பு கடித்து விவசாயி இறந்தார். வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தோளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், வெங்கடேசன், 50. கடந்த 23 ம் தேதி இவரது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்தது. வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று இறந்தார். வேப்பங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.  

மெமோ

ஆக்கரமிப்புகளை அகற்றாத அணையர், டி.எஸ்.பி., க்கு மொமோ திருப்பத்துார், டிச. திருப்பத்துாரில், ஆக்கரமிப்புகளை அகற்றாத அணையர், டி.எஸ்.பி., க்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா மொமோ வழங்கினார். திருப்பத்துார் நகராட்சியில் பஸ் ஸ்டாண்டு, புதுப்பேட்டை சாலை, ஜின்னா சாலை ஆகிய பகுதிகளில் சாலையில் நடைபாதை கடைகள், தள்ளு வண்டிகள் அதிகம் உள்ளதால், பொது மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆந்த பகுதியில் ஆய்வு செய்த போது ஏராளமான கடைகள் சாலையை ஆக்கரமித்துள்ளது தெரியவந்தது. இவற்றை உடனடியாக அகற்றும்படி திருப்பத்துார் நகராட்சி ஆணையர் ஜெயராம் ராஜா, டி.எஸ்.பி., கணேசன் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வஹா உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் ஆக்கரமிப்புக்களை அகற்றவில்லை. இதனால் அவர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா இன்று மெமோ வழங்கினார்.

ரத்த தான முகாம்

Image
ரத்ததான முகாம் வேலுார், டிச. வேலுார் திருமலைக்கோடி நாராயணி பீடம் சக்தி அம்மாவின் 47 வயது ஜெயந்தி விழா ஜன 3 ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நாராயணி பக்த சபா மற்றும் நாராயணி மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் தங்கக் கோவில் வளாகத்தில் நடந்தது. வேலுார் தி.மு.க.,  எம்.எல்.ஏ., கார்திகேயன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். நாராயணி பீடம் அறங்காவலர் சவுந்தரராஜன், தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி பீடம் மேலாளர் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஞ்சலி

Image
அஞ்சலி வேலுார், டிச பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவையொட்டி வேலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் அவரது படத்திற்கு பா.ஜ., சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. விழுப்புரம் மாவட்ட பா.ஜ., கல்வியாளர் பிரிவு தலைவர் ராயர் தலைமை வகித்து ஹீரா பென் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணை தலைவர் ரவீந்திரன், வேலுார் மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் சரவணன்  மற்றும் நிர்வாகிகள் இளங்கோவன், பாபு, ஜெகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

ஆர்பாட்டம்

Image
கண்டன ஆர்ப்பாட்டம்!  காங்கிரஸ் பரம்பரையிலிருந்து வந்த முதுபெரும் காங்கிரஸ்காரர் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு.A.M.முனிரத்தினம் அவர்கள் தொகுதி மக்களின் குறைகளை சோளிங்கரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் வினா எழுப்பினார் குறிப்பாக சோளிங்கர் அருள்மிகு லஷ்மி நரசிம்ம திருக்கோவிலுக்கான ரோப் கார் வசதி திட்டம் நீண்ட நாட்களாக முழுமை அடையாமல் இருக்கின்றது எப்பொழுது அதை செயல்பாட்டுக்கு கொண்டு வரப் போகிறீர்கள் என்று கேட்டார் அதற்கு அதிகாரிகள் பதில் சொல்வதற்கு முன் மாவட்ட அமைச்சர் திடீரென்று எழுந்து சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து  அவமதித்துள்ளார் ஒரு மக்கள் பிரதிநிதியை அதிகாரிகளின் முன்னால் அவமானப்படுத்தியதை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கின்றது எனவே வருகின்ற ஜனவரி 3.ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர்  அலுவலகத்தின் முன் மாவட்ட அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது அனைத்து காங்கிரஸ் பேரியக்கத் தோழர்கள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்யும்படி

வஸ்தரதானம்

Image
வேலூர்    வேலூரில் தங்ககோவிலின் சார்பில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு துணிகள் தானமாக வழங்கப்பட்டது _____________________________      வேலூர்மாவட்டம்,வேலூர் அருகேயுள்ள அரியூரில் தங்ககோவில் ஸ்ரீநாராயணி ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கு துணிகள் வழங்கும் விழா டிசம்பர் 25 ஆம் தேதி நடைபெறுவது வழக்கம் இதன் படி இன்று தங்ககோவில் வளாகத்தில் ஏழை மக்களுக்கு துணிகள் வழங்கும் விழாவானது நடந்தது இதில் தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா தலைமையில் தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு வஸ்திரங்கள் வழங்கப்பட்டன இதே போல் வேலூரில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சக்தியம்மாவுக்கு வரவேற்பளித்து மலர் கிரீடங்கள் அணிவித்தனர் இதில் வெளிநாட்டு பக்தர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நேத்தலின் மற்றும் அமெரிக்காவை லைன் ஸ்னேடன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் ஜலகண்டீஸ்வரர் ஆலய விழாவில் கலவை சச்சிதானத சுவாமிகள் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் மாணவிகள் பரதநாட்டியமும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் மழையிலும் கலந்துகொண்டனர்

அஞ்சலி

Image
அஞ்சலி பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவையொட்டி வேலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் அவரது படத்திற்கு பா.ஜ., சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. விழுப்புரம் மாவட்ட பா.ஜ., கல்வியாளர் பிரிவு தலைவர் ராயர் தலைமை வகித்து ஹீரா பென் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணை தலைவர் ரவீந்திரன், வேலுார் மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் சரவணன்  மற்றும் நிர்வாகிகள் இளங்கோவன், பாபு, ஜெகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

கைது

Image
வேலூர்    30-12-22 வேலூரில் நள்ளிரவில் பரப்பரப்பு சந்தன மரத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்         வேலூர்மாவட்டம்,காட்பாடியிலிருந்து சுமார் 20 கிலோ எடை கொண்ட சந்தன மரத்தை  வெட்டி   ஆரணிக்கு கொண்டு செல்வதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணாவுக்கு  கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இரவு பணியிலிருந்த வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரஜினி காவலர்களுடன் சென்று   வேலூர்  ஊரிஸ்  கல்லூரி அருகில்    20கிலோ  எடைக்கொண்ட சந்தன மரமும் அதற்காக பயன்படுத்திய கத்தி மற்றும்  இரண்டு சக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்தார்கள்.  ஆரணியைச் சேர்ந்த ராஜசேகர் (28) கைது செய்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டனர்

அஞ்சலி

Image
வேலூர்   30-12-22 வேலூரில் பாஜகவினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பிரதமர் மோடியின் தாயாரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலியை செலுத்தினார்கள்  மோட்ச தீபமும் ஏற்றப்பட்டது  ________________________________________________       வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார்  ஹீரா பென் மோடி மறைவை ஒட்டி அவரது திரு உருவ படத்திற்கு பாஜக மாவட்டத்தலைவர்  மனோகரன் தலைமையில் ஹீரா பென் மோடியின் திரு உருவ படத்திற்கு பாஜகவினர் மதிமுக ,உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் ஹீரா பென் மோடி ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்சதீபமும் ஏற்றப்பட்டது

கைது

Image
வேலூர்    30-12-22 கோவில்களில் தொடர்ந்து நகைகள் பொருட்களை திருடி வந்த திருடன் கைது நகைகள் பொருட்கள் சிசிடிவி கேமராக்கள் பறிமுதல் சத்துவாச்சாரி காவல்துறையினர் நடவடிக்கை  வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் பள்ளிகொண்டா நாக நாகேஸ்வரி கோவில் சாத்து மதுரை முருகன் கோயில் சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து திருட்டு  நடந்து வந்த நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து இந்தத் திருட்டில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து கோயில்களில் திருடப்பட்ட நகைகளான தங்கதாலிகள் சிசிடிவி கேமராக்கள் ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவைகளை பறிமுதல் செய்து காவல்துறையினர் கைது செய்யப்பட்டவரிடம் விசாரித்ததில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கன்னியாகுமரியை சார்ந்தவரான உமேஷ் (44) என்பதும் இவர் வேலூர் மாவட்ட அடுக்கம்பாறை அருகே கட்டுபடியில் தங்கி தொடர்ந்து கோவில்களில் திருடியதும் தெரியவந்ததை அடுத்து சத்துவாச்சாரி காவல்துறையினர் உமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்        தொடர்ந்து கோவில்கள் பல இடங்களில் திருடிய திருடன் பிடிபட்டான் என்பது குறிப்பிடத்

கைது

Image
ராணிப்பேட்டைமாவட்டம்       ஆற்காடு அருகே நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த விஏஓ பால சுப்பிரமணியனை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்             ராணிப்பேட்டைமாவட்டம்,ஆற்காடு அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் விவசாயிகளின் நலனுக்காக கிராமப்புறங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்கப்பட்டது இதன் மூலம் விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து அதற்கான தொகையை வங்கி மூலம் பெற்று வந்துள்ளனர்.மேலும் விவசாயிகள் அல்லாத வியாபாரிகள் சிலர் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் துணையோடு பல்வேறு முறைகேடில் ஈடுபட்டு  வந்ததாகவும்   ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பலகோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், மாவட்ட குற்றப்பிரிவு புலனாய்வு போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன.அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இது தொடர்பாக சுமார் ஆறு முதல் ஏழு கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்தது இந்த தீவிர விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம

விழா

Image
திருப்பத்தூர்மாவட்டம்         திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கும் விழா‌ மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில்  நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கலை பண்பாட்டு துறையின் சார்பில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருது வழங்கும் விழா இளம் கலைஞர்களுக்கான மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா மற்றும் மாவட்ட கலை விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.வளர்மதி பங்கு பெற்று விருதுகளும் சான்றிதழ்கள் மற்றும்  காசோலைகளை வழங்கினார்.  66 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கான கலை முதுமணி விருது 51 வயது முதல் 65 வயது குட்பட்டவருக்கான கலை நன்மணி விருது 35 வயது முதல் 50 வயது உட்பட்டவர்க்கான கலைச்சுடர் மணி விருது 19 வயது முதல் 35 வயது உட்பட்ட அதற்கான கலை வளர்மணி விருது 18 வயதுக்குட்பட்டோருக்கான கலை இளமணி விருது என மொத்தமாக 15 பேருக்கு விருதுகள்  வழங்கப்பட்டது. இளம் கலைஞர்களின் கலை திறமைகளை வெளிக் கொணரும் வகையில் 17 வயது முதல் 35 வயதுக்குட

அவலம்

Image
திருப்பத்தூர்மாவட்டம்       சந்தன மாநகரம் என்று அழைக்கப்படும் திருப்பத்தூர் குப்பை கிடங்காக மாறும் அவலம்! பன்றிகள் காண்டாமிருகம் சைஸ் உள்ளது. நாய்கள் சாலை மறியல் பண்ணுது. கவுன்சிலர் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டம்  திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளின் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு    நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில்  கவுன்சிலர் கூட்டம்  நடைபெற்றது.அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் திருப்பத்தூர் மாவட்டம் சந்தன மாநகரம் என்று அழைக்கப்பட்டது ஆனால் தற்போது மிகவும் சீர்கெட்டு குப்பை கூடாரமாக மாறி வருகிறது. மேலும் திருப்பத்தூர் நகர பகுதிகளில் நாய் மற்றும் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் சாலை மறியல் பண்ணுது பன்றிகள் காண்டாமிருகம் சைஸ் உள்ளது எனவும் கூறியதால் நகர மன்ற கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. திருப்பத்தூருக்கென தனி வரலாறு உண்டு ஆனால் தற்போது மிகவும் சீர்கேட்டு ஆங்காங்கே குப்பைகளை கொட்டி மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

கைது

Image
ராணிப்பேட்டைமாவட்டம்       சோளிங்கர்  கஞ்சாவிற்பனை செய்த இளைஞர் கைது 250கிராம் கஞ்சா பறிமுதல்   ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கீழாண்ட  மோட்டூர் குளக்கரை பகுதியில்  கஞ்சா விற்பனை செய்வதாக சோளிங்கர் போலீசருக்கு கிடைத்தது. தகவல் பேரில் காவல் ஆய்வாளர் முருகானந்தம், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குளக்கரை பகுதியில் இருந்த முட்புதர் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர் அப்போது கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த 250  கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் கீழாண்டமோட்டூர் பகுதியை சேர்ந்த ஆனந்த்பாபு(19)  என்பது விசாரணை மில் தெரியவந்தது.அவர் மீது  வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கூட்டம்

Image
ராணிப்பேட்டைமாவட்டம்     சோளிங்கர் புலிவளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது     ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவளம்  கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் திருமால் தலைமையில் நடைபெற்றது. இதில் சமூக தணிக்கை அலுவலர் சித்தீக்கான் கலந்து கொண்டு இரண்டு ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் கணக்குகள், பணியாளர்கள் பதிவேடு, என்னென்ன பணிகள் எவ்வளவு தொகையில் பணிகள் செய்யப்பட்டன என தணிக்கை செய்தார். மேலும் 100 நாள் பணியில் பணியாளர்கள் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன கேட்டு அறிந்தார். அப்போது ஒன்றிய கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள் வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள் இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாகக்உ வாதம் 20 நிமிடங்கள் நிடித்தது. இதனால் கூட்டம் பாதிலேயே முடிவு பெற்றது அனைவரும் கலைந்து சென்றனர்.

அனுமதி

Image
ராணிப்பேட்டைமாவட்டம்      சோளிங்கரில் அருந்ததிய குடியிருப்பு பகுதியில் 4 குடும்பங்களை சேர்ந்த 19 பேருக்கு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதி  ___________________________________         ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த குன்னத்தூர் ஊராட்சி உட்பட்ட அருந்ததி குடியிருப்பு பகுதியில் நான்கு குடும்பத்தை சேர்ந்த 19 பேர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில்  ஆறு பெரியவர்கள் நான்கு சிறுவர்கள் மொத்தம் 10 பேர் திடீர் காய்ச்சல் ஏற்படட்து இவர்களை சோளிங்கர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத் மற்றும் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து இவர்களுக்கு திடீர் காய்ச்சல் குறித்து கேட்டறிந்தார். மருத்துவ  குடிநீர்,இரத்தம் மாதிரிகள் எடுத்துக்கொண்டனர் .பனிகாலம் என்பதால் அனைவரும் தண்ணீர் சுடுபத்தி அருந்த வேண்டும் லேசான காய்ச்சல் ஏற்படும் போதே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.அப்போது மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.

விபத்து

Image
திருப்பத்தூர்மாவட்டம்   சாலைநகர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து இருவர் படுகாயம். ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 55 மற்றும் இவரது மகன்  சுரேஷ் வயது 30 ஆகிய இவர்கள் இன்று திருப்பத்தூர் பகுதியில் ஆடு ஒன்றை வாங்கி கொண்டு தங்களது இருசக்கர வாகனத்தில்  திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை நகர் பகுதியில் செல்லும் போது வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த கார் இருச்சக்கர வாகனம் மீது விபத்துக்குள்ளானது.இதில் முருகேசன் மற்றும் சுரேஷ் இருவரும் பலத்த படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவிழா

Image
திருப்பத்தூர்மாவட்டம்    வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையொட்டி செயற்கையாக  புற்று எழுப்பி  ஆம்பூரில் நடைப்பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோவில் திருவிழா.. 47 ஆண்டுகளாக தொடர்ந்து  ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கிய விழாக்குழுவினர்.. திருப்பத்தூர் மாவட்டம்..ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில் 2022 ஆம் ஆண்டு கடைசி வெள்ளிக்கிழமையொட்டி 47 ஆம் ஆண்டு பவானி அம்மன் பெருவிழா நடைப்பெற்றது..      இத்திருவிழாவையொட்டி  காலை பொழுதில் கோவில் வளாகத்தில் செயற்கையான புற்று எழுப்பி அம்மனுக்கு  சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் ஆராதனைகள் நடைப்பெற்றது..   அதனை தொடர்ந்து மதியம் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோருக்கு கோவில் விழாக்குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.. மேலும்  இந்த ஆலயத்தில் தான் ஆம்பூர் பகுதியில் முதன் முதலாக அன்னதானம் துவக்கி வைக்கப்பட்டு தொடர்ந்து 47ஆண்டுகளாக தொடர்ந்து ஆன்மீக இளைஞர்களால் ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விழா

Image
திருப்பத்தூர்மாவட்டம்    வாணியம்பாடி நகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 2 இடங்களில் நகர்புற துணை சுகாதார நிலையங்கள் அடிக்கல் நாட்டு விழா.   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணமேடு பகுதி நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு நகர மன்ற துணைத் தலைவர் கையாஸ் அஹமத் தலைமை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் பானுப்பிரியா வெங்கடேசன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் சங்கர் அனைவரையும் வரவேற்றார்.இதில் சிறப்பு அழைப்பாளராக நகர திமுக செயலாளரும் 10வது வார்டு மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார் கலந்து கொண்டு நகர்புற துணை சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.இதே போல் பஷீராபாத் கே.கே முதல் தெருவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற துணை சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நகர திமுக செயலாளரும் 10வது வார்டு நகரமன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார் கலந்துகொண்டு பூமி பூஜை போட்

தெரியுமா

Image
அமெரிக்காவில்  பிச்சைக் கூடம் ___________ கடந்த 2017 ஆம் ஆண்டு நான் அமெரிக்காவிற்கு என் இல்லத் தலைவியோடு சென்றிருந்தேன். கலிபோர்னியாவில் சான் ஜோஸ் எனும் நகரில் பே பால் நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் என் மகன் அமானுல்லா உடன் தங்கியிருந்தேன். அவன் படித்த யூடா பல்கலைக்கழகத்திற்கு  எங்களை அழைத்துச் சென்றான்.  அந்த யூட்டா மாநிலத்தின் தலைநகர் சால்ட் லேக் சிட்டி. அதனை உப்பேரி மாநகர் என தமிழாக்கிச் சொல்ல முடியும்.  அந்த நகரில் நாங்கள் தங்கி இருந்தபோது, அங்கு பிச்சைக்காரர்களுக்கென தனி கூடம் இருப்பதைச் சிலர் சுட்டிக் காட்டினர். ஆர்வ மிகுதியால்  நாங்கள் சென்று பார்த்தோம்.  அங்கே ஒரு சிறிய கூடம்...நிறைய பிச்சைக்காரர்கள். தலைவிரி கோலமாகவும், பஞ்சைப் பராரிகளாகவும், கிழிந்த துணிகளோடும்  நொடிந்த தேகத்தோடும், நொந்து நசிந்த  உடலமைப்போடும், சிதறிக் கிடந்த காகிதக் குப்பைகள் போல் விழுந்து கிடந்தார்கள்.  சிலர் அந்த சாலையிலேயே அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள்.  அப்போது சிலர் அடிக்கடி அந்த பகுதிக்கு வந்து பிச்சைக்காரர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும், துணிமணிகளையும், வீட்டு உபயோகப் பொருட

யூரியா வந்தது

Image
1,450 டன் யூரியா காட்பாடி ரயில் நிலையத்திற்கு வருகை விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 5 மாவட்டங்களுக்கு படம் உள்ளது வேலூர், டிச வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 5 மாவட்டங்களுக்கு விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் 1,450 டன் யூரியா காட்பாடி ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ததன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளது. தொடர் மழையால் அனைத்து பகுதிகளிலும் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் அந்தந்த மாவட்டங்களில் அதிகளவு இருப்பு வைத்து விநியோகம் செய்யும்படி வேளாண்மைத்துறை உத்தரவிட்டது. மேலும் மழை, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் சேதமானால் அதற்கு இழப்பீடு வழங்கும் வகையில் பயிர் காப்பீடு செய்யும்படி விவசாயிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் விவசாய பயிர்களுக்கு தேவையான 1,450 டன் யூரியா மூட்டைகள் சென்னை மணலியில் இருந்து காட்பாடிக்கு நேற்று சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டது. பி

அஞ்சலி

Image
வேலூர்     குடியாத்தத்தில்  மோடியின் தாயார் திரு உருவ படத்திற்கு  மலர் அஞ்சலி செலுத்திய பல்வேறு  கட்சியினர். வேலூர் மாவட்டம் , குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் குடியாத்தம் பாஜக நகர அமைப்பாளர் லோகேஷ்குமார் தலைமையில் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் பிரம்மாண்ட படம் அமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் பாஜக, இந்து முன்னணி, திமுக, அதிமுக, தாமாக,கம்யூனிஸ்ட், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் நகரமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு மறைந்த ஹீராபென் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

பேட்டி

Image
ராணிப்பேட்டைமாவட்டம்     பொங்கலுக்கு திட்டமிட்டபடி வேட்டை சேலைகள் வழங்கபடும் அதில் எந்த மாறுபாடும் கிடையாது - தனியாரிடம் வேட்டி சேலைகள் கொள்முதல் செய்யும் திட்டமே கிடையாது ராணிப்பேட்டையில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி பேட்டி    ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பாக பதிவு பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 3577 பயனாளிகளுக்கு ரூபாய் 81 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து

பொங்கலுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்படும் அமைச்சர் காந்தி பேட்டி

Image
பொங்கலுக்கு திட்டமிட்டபடி வேஷ்டி, சேலைகள் வழங்கப்படும் அமைச்சர் காந்தி ராணிப்பேட்டை பொங்கலுக்கு திட்டமிட்டபடி வேஷ்டி, சேலைகள் வழங்கப்படும் என ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி கூறினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடந்தது. கைத்தறி துறை அமைச்சர் காந்தி 3577 பேருக்கு 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இப்போது வேஷ்டி, சேலைகள் எப்படி  இருக்கிறது, கடந்த ஆட்சியில் எப்படி இருந்தது என பாருங்கள் என பா.ஜ., அண்ணாமலை  சொல்கிறார். நாங்கள் சவால் விட்டு சொல்கிறோம்,  சேலைகள், வேஷ்டிகளை ஆய்வு செய்யுங்கள், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மேம்பாடு செய்துள்ளோம். இதை நாங்களும் ஆய்வு  செய்து விட்டோம், தமிழக முதல்வரும் ஆய்வு செய்து பாராட்டு தெரிவித்துள்ளார். தனியாரிடம் வேஷ்டி, சேலைகள் கொள்முதல் செய்யும் திட்டமே கிடையாது.  பொங்கலுக்கு திட்டமிட்டபடி வேஷ்டி, சேலைகள் வ

அஞ்சலி

Image
அஞ்சலி பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவையொட்டி வேலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் அவரது படத்திற்கு பா.ஜ., சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. விழுப்புரம் மாவட்ட பா.ஜ., கல்வியாளர் பிரிவு தலைவர் ராயர் தலைமை வகித்து ஹீரா பென் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணை தலைவர் ரவீந்திரன், வேலுார் மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் சரவணன்  மற்றும் நிர்வாகிகள் இளங்கோவன், பாபு, ஜெகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

வாழ்த்துகள்

Image

இடமாற்றம்

Image
135 போலீசார் இட மாற்றம் திருப்பத்துார் திருப்பத்துார் மாவட்டத்தில் 135 போலீசார் இட மாற்றம் செய்யப்பட்டனர். திருப்பத்துார் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த போலீசார் இட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து 38 எஸ்.எஸ்.ஐ., க்கள் உள்ளிட்ட 135 போலீசார் நேற்று மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர். 

இது தேவையா?

Image
 கூகுள் மேப் பார்த்தபடி கார் ஓட்டியதால் மின் கம்பத்தில் மோதி விபத்து திருப்பத்துார் ஏலகிரிமலையில் இருந்து சென்னைக்கு காரில் சென்றவர்கள் கூகுள் மேப் பார்த்து ஓட்டிச் சென்றதால் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை மணலியை சேர்ந்தவர்கள் கிரீஸ், 24, மதியழகன், 22, முருகேசன், 26. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி  வந்த இவர்கள் நேற்று  (25) சென்னையிலிருந்து, திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரிமலைக்கு இனோவா காரில் சுற்றுலா சென்றனர். ஏலகிரிமலையில் அனைத்து பகுதிகளையும் பார்த்து விட்டு அன்று மாலை சென்னைக்கு செல்ல, ஏலகிரிமலையிலிருந்து கீழே இறங்கினர். காரை கிரீஸ் ஓட்டி வந்தார். கீழே இறங்கியதும் எப்படி சென்னைக்கு செல்வது என தெரியாததால் மலையில் இருந்து இறங்கும் போதே காரில் கூகுள் மேப் போட்டு பார்த்துக்கொண்டே ஓட்டி வந்தனர். ஏலகிரிமலை அடிவாரமான பொன்னேரி கூட்டு சாலைக்கு வந்த வலது பக்கம்  திரும்பி  புதுார் வழியாக சென்றால் சென்னை செல்லும் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை வந்து விடும் என்று கூகுள் மேப் காட்டியது.   எதிரே உள்ள சாலையை பார்த்துக் கொண்டு காரை ஓட்டாமல் கூகுள் மேப்பை பா

தூக்கு சாலை மறியல் புகார்

Image
வேலுார் அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் பா.ம.க., பிரமுகர் துாக்கிட்டு தற்கொலை தி.மு.க., வினர் மிரட்டியதால் தற்கொலை என புகார் செய்து உடலை வாங்க மறுத்து மறியல் வேலுார் போலீசார் விசாரணைக்கு அழைத்ததால், பா.ம.க., பிரமுகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தி.மு.க., வினர் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளத்து உடலை வாங்க மறுத்து பா.ம.க., வினர் மறியலில் ஈடுபட்டனர். வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே பெரியபோடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ், 55.  பா.ம.க., முன்னாள் ஒன்றிய செயலாளர். இவரது வீட்டுக்கு அருகிலிருந்த காலியிடத்தில் வாழை, முருங்கை மரம், பூச்செடிகள் வளர்ந்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன், 50,  என்பவர் அரசு புறம்போக்கு இடத்தை நாகேஷ் அபகரித்துக் கொண்டதாகவும், இதனால் 6 தெருக்களை சேர்ந்தவர்கள் செல்ல முடியவில்லை என்று மேல்பாடி போலீசில் புகார் செய்தார். இது குறித்து வருவாய்த்துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி  வந்தனர். இந்நிலையில் பெருமாள்குப்பம் தி.மு.க., தலைவர் கோட்டீஸ்வரன், பெரியமோடிநத்தம் தி.மு.க., துணை தலைவர்

போராட்டம்

Image
அனைத்து பாட்டாளி சொநதங்களும் நாளை காலை 8.00 மணியளவில்  *வேலூர் அடுகம்பாறை மருத்துவமனை* அருகில் வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....  நமது பாட்டாளி சொந்தம் *திரு.நாகேஷ் அவர்கள்* நில தகராறு பிரச்னையில் திமுக பிரமுகர் மிரட்டால் தற்கொலை  செய்து கொண்டுஉள்ளார்....  இந்த  தற்கொலைக்கு நீதி கேட்டு நாளை போராட்டம்....  அனைவரும் அடுகம்பாறை மறுத்தவமனை அருகே வருமாறு கேட்டு கொள்கிறோம்.... இது போல் ஒவ்வொரு பாட்டாளி யின் பிரச்சனைக்கு ஒன்று படவேண்டும்....  *வாழ்க!...மருத்துவர் அய்யா!....* 🌹🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🌹 *வாழ்க!....மருத்துவர் சின்ன அய்யா....* 🌹🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🌹 *வளர்க பாட்டாளி மக்கள் கட்சி* 🌹🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🌹 இங்ஙனம்....  *கேஎல்_இளவழகன்* 💙💙💙💛💛💛❤️❤️❤️ (மாவட்ட செயலாளர்) முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்...  *என்டி_சண்முகம்* 💙💙💙💛💛💛❤️❤️❤️ (மாநில துணை தலைவர்) (முன்னாள் மத்திய அமைச்சர்) *பிகே_வெங்கடேசன்* 💙💙💙💛💛💛❤️❤️❤️ (மாவட்ட தலைவர்) *பாட்டாளி சமூக ஊடக பேரவை வேலூர் கிழக்கு மாவட்டம்.....* 💙💛♥️🇷🇴🇷🇴🇷🇴💙💛♥️

ராமஜெயம்

Image
ஸ்ரீராமஜெயம்🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 *ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமி ஜெயந்தி  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *ஸ்ரீராம நாம ஜபம்*   🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *அனுமனுக்குப் பிடித்ததே ஸ்ரீராம நாமம் மட்டும் தான்* *எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் பாடப்படுகறதோ* *அங்கெல்லாம் ஆஞ்சனேயர் கண்டிப்பாக இருப்பார்*. *ராம நாமத்தை விட உயர்ந்தது வேறு இல்லை*. *இந்த ஜென்மத்திலும் , முன் ஜென்மத்திலும் செய்த பாவங்கள் விலக ஸ்ரீராம நாமம்*,  *ஸ்ரீராமஜெயம் *எழுதுவோம், சொல்லுவோம்*. *பாடுவோம்*.*ஆனந்தமாக* *ராம் ராம் ராம்* இந்தியாவில் பொதுவாக ராம நாம ஜபத்தை இதுபோன்று எழுதி ஜபிக்கும் வழக்கம் உண்டு. அதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.  *ராம நாமத்தை எழுதும் போது நாம் அந்த நாமத்தில் முழுமையாக சரணடையும் மனநிலைக்கு வந்துவிடுவோம்* மந்திர ஜபம் என்பது வாயால் உச்சரிப்பதாக இருக்கும். லிகித ஜபம் என்பது மந்திரங்களை உச்சரித்தபடியே எழுதுவது.  *உண்மையில் வாயால் உச்சரிக்கும் ஜபத்தை* *விட லிகித*  *ஜபத்திற்கு சக்தி* *அதிகம்*. இந்தியாவில் பொதுவாக ராம நாம ஜபத்தை இதுபோன்று எழுதி ஜபிக்கும் வழக்கம் உண்டு. அதில் ஏராளமான நன்மைகள் இரு

திருப்பாவை

Image
#திருப்பாவை_8 கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். பொருள்: மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்டவளே! அழகுச்சிலையே! கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன. எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். ஆனாலும் உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமான கிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் ‘ஆஆ’ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்பு.

சனி பேசுகிறார்

Image
நான்.........சனீஸ்வரன் பேசுகின்றேன்..............................                         ஏழரைச்சனி அர்த்தாஷ்டமசனி கண்டகசனி அஷ்டமசனி என்றால் கவலை வேண்டாம் ஆஞ்சநேயர் வழிப்பாடு நன்மை தரும் என்று அனைவரும் ஆலோசனை கூறுகிறார்கள்  ஆஞ்சநேயர் பக்தர்களை நான் துன்புறுத்த மாட்டேன்  என்று வாக்கு கொடுத்திருக்கிறேன்  ஆஞ்சநேயர் வழிப்பாட்டிற்கு மிகவும் தேவையான மனத்தூய்மையை அனைவரும் மறந்து விட்டீர்கள்   பல்வேறு தீய எண்ணங்களுக்கு தங்களுடைய இதயத்தில் வாடகை இல்லாமல் குடி அமர்த்தி விட்டு மனத்தூய்மையுடன் இருக்கிறேன் என்று கூறினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?   நான்---நீதிதேவன்&கர்மகாரகன்    ஒவ்வொருவரும் செய்து வரும் தவறுகளுக்கு தண்டனைகள் கொடுக்ககூடிய அதிகாரத்தை எனக்கு கொடுத்து இருக்கிறார்கள் ஏழை-பணக்காரன் படித்தவன்-படிக்காதவன் போன்று எவ்வித பாகுபாடுமில்லாமல் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு கடமை தவறாமல் தண்டனை கொடுத்து விடுவேன்   எங்கெல்லாம் தூய்மை இருக்கிறதோ அங்கெல்லாம் என்னால் நெருங்க முடியாது எங்கெல்லாம் அழுக்கு இருக்கிறதோ அங்கெல்லாம் நான் இருப்பேன்  என்னுடைய பார்வை சர்வநாசனம்  நான் வாங்கி

கதை

Image
🌹🌺"" *ஸ்ரீ கிருஷ்ணனிடம் பக்தி செய்ய ...தொடங்கிவிடு !! இனிமேலும்  காரணம் சொல்லாதே ! என்பதை --- விளக்கும் எளிய கதை* 🌹🌺 -------------------------------------------------------- 🌺🌹🌺“ அன்பு பக்தனே.... இனியும் காரணம் சொல்லாதே, ஸ்ரீ கிருஷ்ணனிடம் பக்தி செய் ; பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே ! 🌺உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !!! நீ சொல்கின்ற காரணங்களில் பல பக்தர்கள் வாழ்விலும் இருந்தது ! 🌺அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி செய்தார்கள்! நீயும் அவர்களைப் போல் முயற்சித்துப் பார் ! 🌺குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதா? குசேலரைப் போல் பக்தி செய் ! மனைவி அடங்காப் பிடாரியா ?  சந்த் துகாராமைப் போல் பக்தி செய் ! 🌺கணவன் கொலைகாரப் பாவியா ? மீராவைப் போல் பக்தி செய் ! புகுந்த வீட்டில் கொடுமையா ? சக்குபாயைப் போல் பக்தி செய் ! 🌺உடலில் வியாதியால் வேதனையா ? நாராயண பட்டத்ரியைப் போல் பக்திசெய்! 🌺யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா ? ஜயதேவரைப் போல் பக்தி செய் ! 🌺இளம் விதவையாய் குழந்தைகளுக்காக வாழ்கிறாயா ?  குந்திதேவியைப் போல் பக்தி செய் ! 🌺மனைவியை இழந்து கு

அண்ணாமலையார் தரிசனம்

Image
அருணாசலேசுவரர் தரிசனத்திற்கு 5 மணி நேரம் காத்திருப்பு வேலுார் அருணாசலேசுவரர் தரிசனத்திற்கு 5 மணி நேரம் பக்திர்கள் காத்திருந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த நவ மாதம் 27 ம் தேதி கார்த்திகை  தீபம் விழா கொடியேற்றப்பட்டது. டிச. 6 ம் தேதி மாலை தீபம் ஏற்றப்பட்டது. தீப விழா தொடங்கியது முதல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தினசரி தரிசனத்திற்கு  வருகின்றனர். தற்போது  பள்ளி, கல்லுாரிகள் தொடர் விடுமுறையாததாலும், நேற்றும் சனி, இன்று ஞாயிறு வார விடுமுறை மற்றும்  அய்யப்ப  பக்தர்கள் சீசன் என்பதாலும் அருணாசலேஸ்வரை  தரிசிக்கவும், கிரிவலம் செல்லவும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. நேற்று 4 லட்சம் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்தனர். இன்று 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.  இதனால் அண்ணாமலையாரை தரிசிக்க 5 மணி நேரம் காத்திருந்தனர். கிரிவலம் செல்ல 10 மணி நேரம் ஆனது. இதனால் திருவண்ணாமலைக்கு செல்லும் பஸ்கள் நிரம்பி வழிகிறது. கார்கள் அதிகளவு வருகின்றது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா பக்தர்கள் அதிள

வாழ்த்து

Image
அனைவரையும் நேசிப்போம், அன்பை சுவாசிப்போம் வேலுார் இன்று  கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தையொட்டி வேலுார் பேராயர், வேலுார் சிஎஸ்ஐ பேராயர், ெஹன்றி சர்மா நித்தியானந்தம் தலைமையில் சிஎஸ்ஐ ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை நடந்தது. இதில் சர்மா நித்தியானந்தம் பேசியதாவது: கிறிஸ்துவை வழிபடுவதே கிருஸ்மஸ் ஆகும். அவர் மனிதராக மண்ணில் அவதரித்தார். கடவுளே நமக்காக மனிதன் ஆனார். இதனால் மக்கள் ஞானம் பெற்றனர். யாரும் பயப்பட வேண்டாம், அடிமையாக வாழ வேண்டாம் என ஏசு நமக்கு போதித்தார். எனவே அனைவரையும் நேசிப்போம், அன்பை சுவாசிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.