முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வேலூர்    9-5-25

 முன்னாள் படைவீரர்கள் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் அரசு மாணியத்துடன் கடனை பெற்றுகொண்டு தொழில் துவங்கி தொழில் முனைவோராகலாம் ஆட்சியர் சுப்பு லெட்சு பேச்சு 
________________________________________
       வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் முன்னாள் படை வீரர் குறைதீர்வு கூட்டம்  சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கமானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் திரளான முன்னாள் படைவீரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர் இக்கூட்டத்தில் ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில்  முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டம் மூலம் முன்னாள் படைவீரர்களும் தொழில் துவங்கி தொழில் முனைவோராகலாம் இதன் மூலம் அவர்களுக்கு 30 சதவிகிதம் அரசு மாணியத்துடன் ரூ.1 கோடி வரையில் கடன் வழங்கபடும் இதுவரையில் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 80 முன்னாள் படைவீரர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது தொழில் துவங்குவதற்கு பல பயிற்சிகளும் வழங்கபடுகிறது இந்த சிறப்பு திட்டத்தை அனைத்து முன்னாள் படைவீரர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பேசினார் பின்னர் முன்னாள் படை வீரர்களிடம் ஆட்சியர் மனுக்களையும் பெற்றுகொண்டார்

Comments

Popular posts from this blog

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை