பாலாறு பெருவிழா 5 நாட்கள் நடக்கிறது

பாலாறு பெருவிழா
5 நாட்கள் நடக்கிறது


வேலுார், ஜூன் 27
வேலுாரில் ஐந்து நாட்கள் நடக்கும் பாலாறு பெருவிழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அகில பாரதீய சந்நியாசிகள் சங்க பொதுச் செயலாளர் சேலம் ஆத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
இது குறித்து அவர் வேலுாரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: பாலாற்றின் சிறப்பை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த மே மாதம் நந்தி மலையிலிருந்து தீர்த்த கலசங்களுடன் ரத யாத்திரையாக கர்நாடகா, ஆந்திரா மாநிலம் வழியாக தமிழகத்தில் பல இடங்களுக்கு சென்றது. யாத்திரை நிறைவு விழாவையொட்டி வரும் 29ம் தேதி முதல் ஜூலை மாதம் 3 ம் தேதி வரை ஐந்து நாட்கள் பாலாறு பெருவிழா வேலுார் திருமலைக்கோடி நாராயணி மகாலில் நடக்கிறது.
தினமும் காலை 5:00 மணி முதல் இரவு 8:00 வரை விழா நடக்கிறது. வரும் 29 ம் தேதி நடக்கும் தொடக்க விழாவில், தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கின்றனர். 30ம் தேதி அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு பங்கேற்கின்றனர். ஜூலை 1 ம் தேதி பெண் துறவியல் பங்கேற்கும் சக்தி மாநாடு, 2 ம் தேதி நீர் வளம் பாதுகாப்பு, இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கம், 3ம் தேதி கிராம கோவில் பூசாரிகள் மாநாடு நடக்கிறது. இதில் நாடு முழுவதுமிருந்து 1,000 துறவிகள் பங்கேற்கின்றனர்.
வேலுார் செல்லியம்மன் கோவில் அருகில் உள்ள பாலாற்றங்கரையில் தினமும் பாலாறு நதிக்கு மகா ஆரத்தி நடக்கிறது.
மாநாட்டில், தேசிய, தமிழக நதிகளை இணைப்பது, பாலாற்றில் கழிவுகள் கலப்பது, ஆக்கரமிப்பது தடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும். பேட்டியின் போது மன்னார்குடி செண்டலங்கார செண்பகமன்னார் சம்பத்குமார் ராமானுஜ ஜீயர் உடனிருந்தார்.

 righttimerightnews.com என்று Google Chrome - ல் type செய்து இனி செய்திகள் பார்க்கலாம்

Comments

  1. Good step...should create hindu spiritual vibration

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்