அமாவாசை தரிசனம்
🚩
*காலை அமாவாசை தரிசனம் !*
*காசி,ராமேஸ்வர தரிசனம் !!*
கலியுகாப்தம் 5124
விக்ரம ஸம்வத் 2079
சுபகிருது வருடம் :
ஆனி மாதம் 14 ஆம் நாள்....!
ஜூன் மாதம் : 28 ஆம் தேதி :
(28-06-2022)
இன்று
செவ்வாய்க்கிழமை !
சூரிய உதயம் :
காலை : 06-06 மணி அளவில் !
சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-34 மணி அளவில் !
இன்றைய திதி : தேய்பிறை :
சதுர்த்தசி..
காலை 06-45 மணி வரை ! அதன்பிறகு அமாவாசை !!
இன்றைய நட்சத்திரம் :
மிருகசீருஷம்..
இரவு 08-00 மணி வரை ! அதன் பிறகு திருவாதிரை !!
இன்று
சம நோக்கு நாள் !
யோகம் :
இரவு 08-00 மணி வரை சித்தயோகம் !
அதன்பிறகு..
யோகம் நன்றாக இல்லை !!
சந்திராஷ்டமம் :
இன்று
விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் !!
விருச்சிக ராசிக்கு..
செவ்வாய்,புதன்,
வியாழன் மாலை 06-30 மணிவரை சந்திராஷ்டமம் !!
ராகுகாலம் :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!
எமகண்டம் :
காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!
குளிகை :
மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!
சூலம் : வடக்கு !
பரிகாரம் : பால் !!
கரணம் :
காலை: 07-30 மணி முதல் 09-00 மணி வரை !
நல்ல நேரம் :
காலை :
08-00 மணி முதல் 09-00 மணி வரை !
மதியம் :
12-00 மணி முதல் 01-00 மணி வரை !
இரவு :
07-00 மணி முதல் 08-00 மணி வரை !
இன்றைய சுப ஓரைகள் :
சுக்ர ஓரை :
காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !!
குரு ஓரை :
மதியம் : 12-00 மணி முதல் 01-00 மணி வரை !!
இன்றைய சிறப்புகள் :
இன்று
ஸர்வ அமாவாசை !
இன்று
அமாவாசை விரதம் !!
இன்று
முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டிய நாள் !
மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை... !
மதி மறைந்த நாள்..!!
பிண்ட பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள் !
இன்று
தான தர்மங்கள் செய்ய வேண்டிய நாள்..!
தந்தை இல்லா ஆண் மகனும் மாமனார் இல்லா பெண்கள் மட்டுமே அமாவாசை வழிபாடு செய்ய வேண்டும் !
நம்மையே நம்பியுள்ள கோமாதா..கால்நடைகள் பறவைகள்..
போன்ற ஏனைய ஜீவராசிகளுக்கும் உணவு அளித்து மகிழ வேண்டிய நாள்....
அமாவாசையில் நம் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள்..
அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நமது நோய் நொடிகள் அகலும்..
நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் நமக்கு அமையும்.!
அமாவாசை அன்று செய்ப்படும் தான தர்மங்களால் தீராத கடன் ஒழியும்.!
தீர்க்க முடியாத வியாதிகள் குணமாகும் !
யார் விட்ட சாபமோ என அஞ்சிய துன்ப வாழ்க்கை அகலும்...!!
இன்று
தான தர்மங்கள் செய்ய வேண்டிய நாள் !
*பித்ருக்கள் அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்..!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தேசியம்..!*
*தெய்வீகம்..! பேரின்பம் ...!!*
மூதாதையர் பித்ருக்களின் அருளால்
வாழ்க வளமுடன் 🛕🙏🚩
Hindu dharmam gave us a wonderful way of life...get the blessings of our ancestors and also gave food and protect birds and other animals
ReplyDelete