விடுதலை
வேலுார் சிறையிலிருந்து
8 கைதிகள் விடுதலை
வேலுார், ஆக.
அண்ணா பிறந்த நாளையொட்டி வேலுார் சிறையிலிருந்து எட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி, நீண்ட காலம் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ணம் அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் 47 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்ய பரிந்துரை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் கட்டமாக கடந்த வாரம் ஐந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்று இரண்டாம் கட்டமாக எட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு உரிய பெருட்களும், உணவுப் பொருட்களையும் சங்க செயலாளர் ஜனார்த்தனன் வழங்கினார்.
விடுதலை செய்யப்பட்ட கைதிகள் விவரம்: கன்னியப்பன், சேகர், அய்யனார், பரமேஸ்வரன், அண்ணாமலை, வேலு, ஆனந்தமோர், நாராயணன்.
E V R பிறந்த நாள், அண்ணாதுரை பிறந்த நாள் என கொலை, கொள்ளை செய்தவர்களை விடுதலை செய்வதால், அவர்கள் வெளியில் வந்து அந்த குற்றத்தை தொடர்வார்கள்...
ReplyDelete