விழா
திருப்பத்தூர்மாவட்டம்
வாணியம்பாடி நகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 2 இடங்களில் நகர்புற துணை சுகாதார நிலையங்கள் அடிக்கல் நாட்டு விழா.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணமேடு பகுதி நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு நகர மன்ற துணைத் தலைவர் கையாஸ் அஹமத் தலைமை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் பானுப்பிரியா வெங்கடேசன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் சங்கர் அனைவரையும் வரவேற்றார்.இதில் சிறப்பு அழைப்பாளராக நகர திமுக செயலாளரும் 10வது வார்டு மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார் கலந்து கொண்டு நகர்புற துணை சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.இதே போல் பஷீராபாத் கே.கே முதல் தெருவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற துணை சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நகர திமுக செயலாளரும் 10வது வார்டு நகரமன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார் கலந்துகொண்டு பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் நகர கழக துணை செயலாளர் தென்னரசு, அவைத் தலைவர் முஹம்மத் ஜான், டொக்கு இலியாஸ், ஜப்ருல்லா, இஷ்தியாக் அஹமத், நகர மன்ற உறுப்பினர்கள் நாசீர் கான், கலீம் பாஷா, ஏஜாஸ் அஹமத், பஷீர் அஹமத், பல்கீஸ் சலீம், ஷாஹீன் பேகம் சலீம், சித்தரா தென்னரசு, கிளை செயலாளர்கள் ஓ.எம்.சலீம், தவுசீப் அஹமத், இர்ஷாத் கான், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
இதனைத் தொடர்ந்து நகர கழக செயலாளர் சாரதி குமார், நகராட்சி 26 மற்றும் 27 ஆகிய வார்டுகளில் இருந்து வரும் கழிவு நீர் கால்வாய் மூலமாக மழை காலங்களில் அதிக அளவு மழை நீர்யுடன் கழிவுநீர் கலந்து பஷீராபாத் பகுதியில் உள்ள சாலை மற்றும் வீடுகளில் புகுந்து வருவதால் அதனை கட்டுப்படுத்த ஆய்வு மேற்கொண்டார். பின்னர் 24வது மன்ற உறுப்பினர் கலீம் பாஷா தம்பி மனைவி கடந்த 8 நாட்களுக்கு முன்பு இறந்ததைத் தொடர்ந்து அவருடைய வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார்
Comments
Post a Comment