மன்னிப்பு கேட்ட மார்க்.கம்யூ. நிர்வாகி
பிரதமர் மோடியை
தரக்குறைவாக
பேசுவதா?
ரயிலில் பா.ஜ., நாராயணன் திருப்பதி
வாக்குவாதம்
மன்னிப்பு கேட்ட
மார்க். கம்யூ., நிர்வாகி
வேலுார், பிப்.
ஓடும் ரயிலில், பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய மார்க். கம்யூ., நிர்வாகி பயணிகள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
தமிழக பா.ஜ., மாநில துணைத்தலைவராகவும், செய்தி தொடர்பாளாரகவும் இருப்பவர் நாராயணன் திருப்பதி. இவர் இன்று காலை சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் சதாப்தி விரைவு ரயிலில் சி 3 ஏசி பெட்டியில் சேலத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அதே ரயிலில் அதே பெட்டியில், சென்னை ஸ்ரீபெரும்புதுாரை சேர்ந்த மார்க். கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் என்பவர், தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஈரோட்டிற்கு சென்றார்.
இந்த ரயில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சந்திப்பு ரயில்வே ஸ்டேஷனுக்கு காலை 8:30 மணிக்கு வந்தது. அப்போது, சாமுவேல்ராஜ், பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசினார். அதை நாராயணன் திருப்பதி கண்டித்தார்.
நான் கம்யூ., கட்சியை சேர்ந்தவன், அப்படித்தான் பேசுவேன், என்னை கேட்க யாராலும் முடியாது என்று பேசிய அந்த நபர், நாராயணன் திருப்பதியை ஒருமையில் பேசியுள்ளார்.
அப்போது ரயில் பயணிகள் சிலர் பிரதமர் குறித்து தரக்குறைவாக பேசியதை கண்டித்தனர். குழந்தைகள் பலர் அழுதுள்ளனர். அதையெல்லாம் அந்த நபர் கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டே வந்தார். பொதுக்கூட்ட மேடைகளில் பேசலாமே தவிற, ரயிலில் பேசி குழப்பத்தை ஏற்படுத்தலாமா என பயணிகள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து நாராயணன் திருப்பதி, ரயில் டிக்கட் பரிசோதகரிடம் புகார் செய்து விட்டு, நடந்த சம்பவம் குறித்து வேலுார் மாவட்ட பா.ஜ., தலைவர் மனோகரனுக்கு தெரிவித்தார். இந்த ரயில் காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு காலை 8: 45 மணிக்கு வந்தது. அப்போது இந்த சம்பவம் குறித்து வேலுார் மாவட்ட பா.ஜ., தலைவர் மனோகரன் காட்பாடி ரயில்வே போலீசில் புகார் செய்தார்.
இதனால் ரயில்வே போலீசாரும், மனோகரனும் அந்த ரயிலில் ஏறினார். அதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றது. போலீசார் ரயில் பயணிகளிடம் விசாரித்ததில், சாமுவேல்ராஜ், பிரமதர் மோடியை தரக்குறைவாக பேசியது உறுதியானது.
இதனால் ரயில் திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றதும், சாமுவேல்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதையறிந்த சாமுவேல்ராஜ், பிரதமரை தரக்குறைவாக பேசியதற்காக பயணிகள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இது வீடியோவில் போலீசால் பதிவு செய்யப்பட்டது.
இதனால் சாமுவேல்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த ரயில் காலை 10:45 மணிககு ஜோலார்பேட்டை சென்ற வரை இந்த சம்பவம் நடந்தது. மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது: ரயிலில் வந்த பொது மக்கள் பலர், பிரதமர் குறித்து தரக்குறைவாக பேசிய நபரை கண்டித்தது, தமிழ்நாடு மாற்றத்தை நோக்கி செல்கிறது என்பதை உணர்த்தியது. இந்தியா மட்டுமல்ல உலகமே பிரதமர் மோடியை பாராட்டிக்கொண்டிருக்கிறது. அப்படியிக்கும் போது அந்த நபர் பேசியது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சனையில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசாருக்கும், வேலுார் மாவட்ட பா.ஜ., தலைவர் மனோகரனுக்கும், பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த பயணிகளுக்கு நன்றி. கம்யூ., கள் அராஜகத்தை வெளிப்படுத்தும் என் பயணம் தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
His name suggests that he is a Christian. Due to BJP, christian missionaries efforts to convert become difficult and hindus become more proud of their religion, that is making the narrow minded christians and muslims jittery. More than a party, Samuel outburst is due to his hatred towards hindu religion. We Hindus should get understand our enemies and keep them where they deserve
ReplyDelete