உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?
விருப்பமான இல்லத்தை சொந்தமாக்கிக்கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பு சென்னை மாநகர வாசிகளுக்கு, நகரின் மையப்பகுதியில் விருப்பமான இல்லத்தை குறைந்த விலையில் சொந்தமாக்கிக்கொள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளது. அதன் விவரம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஜெ.ஜெ.நகர் கோட்டம் சார்பில் சென்னை மாநகரில் அம்பத்துார்– வானகரம் சாலையில் 19 அடுக்கு மாடியில் கட்டப்பட்டுள்ள 2394 குறைந்த வருவாய் பிரிவு– LIG பன்னடுக்கு மாடித்திட்டத்தில் காலியாக உள்ள குடியிருப்புக்களை கொள்முதல் திட்டத்தின் கீழ் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய பொது மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குலுக்கல் இல்லை. விலை விவரம்: அம்பத்துார் திட்டப்பகுதி IV ல் உள்ள 2394 குறைந்த வருவாய் பிரிவு (தரை தளம் முதல் 19 தளங்கள் உள்ளன) அடுக்கு மாடி குடியிருப்புக்கள். காலியாக உள்ள குடியிருப்புக்களின் எண்ணிக்கை 1846 கட்டட பரப்பளவு 619 முதல் 640 சதுர அடி வரை. விலை ரூ 26,88,000/– முதல் ரூ 27,80,000/- வரை. விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டிய 5...