உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?
விருப்பமான இல்லத்தை
சொந்தமாக்கிக்கொள்ள ஒரு
பொன்னான வாய்ப்பு
சென்னை மாநகர வாசிகளுக்கு, நகரின் மையப்பகுதியில் விருப்பமான இல்லத்தை குறைந்த விலையில் சொந்தமாக்கிக்கொள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஜெ.ஜெ.நகர் கோட்டம் சார்பில் சென்னை மாநகரில் அம்பத்துார்– வானகரம் சாலையில் 19 அடுக்கு மாடியில் கட்டப்பட்டுள்ள 2394 குறைந்த வருவாய் பிரிவு– LIG பன்னடுக்கு மாடித்திட்டத்தில் காலியாக உள்ள குடியிருப்புக்களை கொள்முதல் திட்டத்தின் கீழ் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய பொது மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குலுக்கல் இல்லை.
விலை விவரம்:
அம்பத்துார் திட்டப்பகுதி IV ல் உள்ள 2394 குறைந்த வருவாய் பிரிவு (தரை தளம் முதல் 19 தளங்கள் உள்ளன) அடுக்கு மாடி குடியிருப்புக்கள். காலியாக உள்ள குடியிருப்புக்களின் எண்ணிக்கை 1846 கட்டட பரப்பளவு 619 முதல் 640 சதுர அடி வரை.
விலை ரூ 26,88,000/– முதல் ரூ 27,80,000/- வரை. விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டிய 5% முன் வைப்புத்தொகை ரூ 1,39,000/- சேவை வரி ரூ 1,02,400/-- மற்றும் பராமரிப்புக் கட்டணம் கூடுதலாக செலுத்தப்பட வேண்டும்.
நிபந்தனைகள்:
முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டை பெற அந்தந்த குடியிருப்புக்கு உண்டான முன் வைப்பு தொகைக்கான வங்கி DD யுடன் விண்ணப்பித்தவர்களுக்கு குடியிருப்பு வீடு ஒதுக்கப்படும். DD செலுத்திய பின் ரூ 230– செலுத்தி விண்ணப்பத்தினை பெற்று ரூ 200– பதிவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
மீதமுள்ள 90% தொகையை ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டவுடன் 30 நாளில் செலுத்தி விட வேண்டும். வங்கியில் கடன் பெறுவதற்கு வசதியாக A & B சான்றிதழ் வழங்கப்படும். 21 வயது உள்ளவர்கள் தான் வீடு வாங்க இயலும். மேற்படி குடியிருப்புக்கள் தற்போது உள்ள நிலையிலேயே விற்பனை செய்யப்படும்.
விண்ணப்பங்கள் அலுவலக நாட்களில் மட்டும் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 4:00 மணி வரை விற்பனை மற்றும் பதிவு செய்யப்படும். பதிவு கட்டணம், விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டிய முன் வைப்புத்தொகை போன்ற இதர தொகைகளை DD ஆக செலுத்த வேண்டும்.
சிறப்புக்கள்: பூங்கா, கண்காணிப்பு கேமரா, சிறந்த கழிவரை திட்டம், லிப்ட், மெட்ரோ குடி தண்ணீர் மற்றும் போர் தண்ணீர், 3 பேஸ் மின் இணைப்பு, ஜென் செட், 11 ஏக்கர் நிலத்தில் 11 பிளாக், 19 மாடிகள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பராமரிப்பு, பைக் பார்க்கிங், 40 அடி சாலை, மத்திய அரசின் மானியம் ரூ 2. 50, அத்திப்பட்டு– டன்லப் முகப்பேரு, நொளம்பூர், அம்பத்துார் எஸ்டேட் அருகில், விரைவில் மெட்ரோ.
மேலும் விவரங்களுக்கு WWW.tnhb.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
அலுவலக முகவரி:
செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஜெ. ஜெ. நகர் கோட்டம், 3 வது தளம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வணிக வளாகம், திருமங்கலம், சென்னை– 600101.
குடியிருப்பு தேவைப்படுவோர்
திரு. எஸ். ஜெயச்சந்திரன், மேலாளர் மற்றும் விற்பனை சேவை: 94459 96172 தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Comments
Post a Comment