பேர்ணாம்பட்டு அருகே 3 யானைகள் மர்ம சாவு வனத்துறையினர் விசாரணை
பேர்ணாம்பட்டு ்அருகே 3 யானைகள் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை .
பேர்ணாம்பட்டு, டிச.5–
வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே சாத்கர் மலையில் நேற்று ஒரு யானை தண்ணீரில் இறந்து கிடந்தது. மேலும் அதே பகுதியில் இரண்டு யானைகள் அல் ஏரிக்கு மேல் கரையில் இறந்து கிடந்தது. 3 யானைகள் சடலம் எலும்பு கூடாக காணப்பட்டது. 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலையில் உள்ள தண்ணீர் ஓடை அருகே யானைகள் அழுகிய நிலையில் எலும்பு கூடாக காணப்பட்டது.
இந்த மலைப்பகுதி தனியாருக்கு சொந்தமானது.. ஒரே நாளில் மூன்று யானைகள் இறந்து கிடந்ததை. சாத்கர் மலைகிராமத்தில் ஆடு மேய்க்கும் மக்கள் பார்த்து விட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பேர்ணாம்பட்டு, வேலுார், சென்னையிலிருந்து வனத்துறையினர் 60 பேர் அடங்கிய குழுவினர் மற்றும் 10 க்கும் மேற்பட்ட வனத்துறை அதிிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆந்திர மாநிலம் பலமனேர் வன அலுவலர் வேணுகோபால், ரேஞ்சர் நாராயணன் தலைமையில் 20 வனத்துறையினரும் விரைந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த விசாரணையில் ஈடுபட்டனர்.
இது குறித்து சாத்கர் மலைப்பகுதி மக்கள் கூறியதாவது: ஒரே பகுதியில், ஒரே நாளில் 3 யானைகள் இறந்துள்ளது மர்மமாக உள்ளது. கடந்த 3 மாதங்களில் இதே பகுதியில் 6 யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.வனத்துறையினர் சரியாக கண்காணிக்காத காரணத்தால் யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளது.
இது குறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினர் கூறியது: இறந்த மூன்று யானைகள் எஞ்சிய உடல்கள்., அதன் எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் யானைகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேர்ணாம்பட்டு வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பேர்ணாம்பட்டு வனப்பகுதியில் யானைகள் இறந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யானைகள் இறந்து அழுகி எலும்பு கூடாக ஆன பிறகே வனத்துறையினருக்கு தகவல் வருவது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பகுதியின் அருகில் ஆந்திர மாநில வனப்பகுதியும் வருவதால், ஆந்திர மாநிலம், பலமனேர் வனத்றையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






GooD NEWS
ReplyDelete