மறியல்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன் வாடி ஊழியர்கள் மறியல்
வேலூர்,டிச.9-
தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ஜூலி தலைமையில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.
மாநில துணைத்தலைவர் தேவி மறியல் போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினார்.மாவட்ட தலைவர் விஜயலட்சுமி பொருளாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.
1993-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி முறையே ரூ.10 மற்றும் 5 லட்சம் பணிப்கொடையாக வழங்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்
குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளைப் போல மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Comments
Post a Comment