தவறுகளை திருத்தபழக வேண்டும்
தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை.செய்யும் தவறு வெளியே தெரியக் கூடாது என்றே பயப்படுகிறார்கள்.
உண்மையை ஒப்புக் கொள்வதற்கான தைரியம் வந்து விட்டால், தவறு செய்வதற்கான தைரியம் குறைந்து விடும்.
ஒரு தவறை நீங்கள் மறைக்கப் பார்த்தால் அது பல தவறுகளை கொண்டு வந்து சேர்ந்து விடும்.
உங்கள் தவறுகளைப் பிறர் சுட்டிக் காட்டும் முன்பே நீங்களே திருத்திக் கொண்டு,எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நீங்கள் அடையாளமாக இருங்கள்.
செய்தது தவறு தான் என்று நீங்கள் உணர்ந்தால் அதுவே பாதி வெற்றி.
அவை மீண்டும் வராமல் திருத்திக் கொண்டால் நீங்கள் முழு வெற்றியாளர்.
வாழ்க வளத்துடன்!
🌹
Comments
Post a Comment