முடியும் என்று தெரிந்தால் முயற்சி எடுங்கள்
முடியும் என்று தெரிந்தால் முயற்சி எடுங்கள்..! முடியாது என்று தெரிந்தால் பயிற்சி எடுங்கள்.!!
நம்பிக்கை என்ற சிறு நூலிழையில் தான்.. அனைவரின் அன்பும் இயங்கிக் கொண்டிருக்கிறது..!!
பார்த்துக் கொண்டிருக்கும் உறவை விட... காத்துக் கொண்டிருக்கும் உறவுக்குத் தான் பாசம் அதிகம்..!!
உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் உண்மையாக இருந்தால் போதும்..!மற்றவர்களிடம் அதை நிருபிக்க வேண்டியதில்லை..!!
வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்.. உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை தான் கூட வரும்..!!
கதவைத் தட்டாத காரணத்தால்.. எத்தனையோ வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது..!!
மனம் எதிலும் திருப்தி அடைவதில்லை.. ஏற்றுக்கொள்ளப்படுகிறது அவ்வளவு தான்..!!
தவறுகள் அனுபவங்களைக் கொடுக்கும்..!அனுபவங்கள் தவறுகளைக் குறைக்கும்..!!
கடந்து போன காலங்கள் காலாவதி ஆன மருந்துகள். வாழ்க்கையின் வலிகளுக்கு மருந்தாக இருப்பதில்லை. உறுத்தும் ஆழ்மன வலிகள் நினைவைக் கடந்தால் தான் நம்பிக்கை எனும் மருந்து நாளும் வாழ்வில் நலமளிக்கும்.
நாமும் மகிழ்ந்திருப்போம். மற்றவரையும் மகிழ்விப்போம்.
வாழ்க வளமுடன்.
வாழ்க நலமுடன்.
Comments
Post a Comment