பயிற்சி பெற்றகடற்படை விமானிகள் சான்றிதழ் வழங்கும் விழா
ராணிப்பேட்டைமாவட்டம்
அரக்கோணம் கடற்படை விமானதளத்தில் பயிற்சி நிறைவு செய்த வீரர்களுக்கு நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தலம் இயங்கி வருகிறது. இதில் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி (எச்.டி.எஸ்.) சார்பில் 22 வார கடினப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்ப பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 16 கடற்படை விமானிகள் இன்று பட்டம் அளிக்கும் விழா நடைபெற்றது.105-வது ஹெலிகாப்டர் கன்வர்ஷன் கோர்ஸ் நிகழ்ச்சியில் கிழக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீன வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார் அதனை தொடர்ந்து விடுக்கான வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு பயிற்சி நிறைவு செய்த அதில் சிறப்பாக செயல்பட்ட வீரருக்கு ‘தங்க சிறகுகள்’ வழங்கப்பட்டது.பறக்கும் திறனில் அதிக மதிப்பெண் பெற்ற பயிற்சி விமானிக்கு அளிக்கப்படும் கிழக்கு கடற்படை தளபதி ரோலிங் டிரோபி, லெப்டினன்ட் ஆதித்யா சிங் கவுருக்கு வழங்கப்பட்டது. மொத்த திறனில் முதலிடம் பெற்றதற்கான கேரள ஆளுநர் ரோலிங் டிரோபி லெப்டினன்ட் நிகில் தியாகிக்கு வழங்கப்பட்டது. இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்புப் படை மற்றும் நட்பு நாடுகளின் ஆயுதப்படைகள் ஆகியவற்றைச் சேர்ந்த 884 விமானிகளுக்கு உயர்தர ஹெலிகாப்டர் பறக்கும் பயிற்சி வழங்கியுள்ளது புதியதாக பயிற்சி முடித்த விமானிகள் விரைவில் இந்திய கடற்படை முன்னணி பிரிவுகளில் இணைக்கப்பட உள்ளனர். இவர்கள் கண்காணிப்பு, ரோந்து, தேடல்-மீட்பு , கடல் கள்வர் எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றவுள்ளனர்…
Comments
Post a Comment