செய்திகள்
திருப்பத்தூர்மாவட்டம்
9-12-25
ஆம்பூர் அருகே சோப் வாங்கினால் பரிசு கூப்பன் மூலம் வீட்டு உபயோகப்பொருட்கள் தருவதாக பணம் பறித்த கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர், மாதனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், தாங்கள் விற்கும் சோப்பு வாங்கினால் அதில் விழும் பரிசு கூப்பன் மூலம், டிவி, ஏர் கூல்ர், கேஸ் அடுப்பு, உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்களை தருவதாகவும், இதற்கு முன் பணம் 7500 ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கூறி பல பேரிடம் பணத்தை பறித்து சென்று பொருட்கள் கொடுக்கவில்லை எனவும் ஒரு சிலருக்கு கொடுத்த பொருட்கள் முறையாக வேலை செய்யாத நிலையில் மீண்டும் சோப் வாங்கினால் பரிசு கூப்பன் தருவதாக மின்னூர் பகுதியில் வந்தவர்களை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி பின்னர் அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்,
அதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த ஆம்பூர் கிராமிய போலீசார் அவர்களிடம் விசாரணை செய்த போது வெட்டுவானம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் ,ராஜா மற்றும் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது, அதனை தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வரும் நிலையில் இதேபோல் வேலூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் சோப்பு வாங்கினால் வீட்டு உபயோக பொருட்கள் கொடுப்பதாகவும் அதற்கு முன்பணம் 7500 கொடுக்க வேண்டும் என கூறி பணம் பறித்து சென்றதாக கூறப்படும் நிலையில் வேலூர் சத்துவாச்சாரி காவல்துறையினரும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ராணிப்பேட்டைமாவட்டம்
பானாவரம் அருகே அனுமதி பெறாமல் கிராவல் மண் எடுத்த டிராக்டர், ஜேசிபி வாகனம் பறிமுதல், ஒருவர் கைதுசெய்த பானாவரம் போலீசார்.
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் காவல் எல்லைக்கு உட்ப்ட்ட தப்பூரில் இருந்து தாங்கள் செல்லும் ரோட்டோரமாக உள்ள ஏரியில் அனுமதி பெறாமல் கிராவல் மண்ணை டிராக்டர் மூலம் கடத்துவதாகபானாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றபோது ஜேசிபி இயந்திரம் மூலம் டிராக்டருக்கு கிராவல் மண் நிரப்பிக் கொண்டிருந்துள்ளனர். போலீஸ்சாரை பார்த்ததும் ஜேசிபி இயந்திரம், டிராக்டர் ஓட்டுநர்கள் தப்பி ஓடி உள்ளனர்.போலீசார் டிராக்டர் ஓட்டுனரை மாடிக்கு பிடித்தனர். ஜேசிபி இயந்திரம், ட்ராகடரை பறிமுதல் செய்தனர். போலீஸ்சார் விசாரணையில் டாக்டர் ஓட்டுநர் தப்பூர் காலனி பகுதியை சேர்ந்த சுதாகர் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஜேசிபி இயந்திரம் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்
Comments
Post a Comment