கவலையற்ற மனிதரை காண்பது அரிது

கவலையற்ற மனிதரைக்
காண்பது அரிது.

உங்களுக்குத் தான்
பெரும் கவலை என
சோர்ந்து விடாமல்.

உங்கள் கவலையை
மற்றவர்கள் முன்
மகிழ்வாக்குங்கள்..!

ஆயிரம் இடர்கள்
வந்து வாட்டினாலும்
உங்கள் மனம்
இயல்பாய் இருக்கட்டும்.

இயற்கையோடு இயைந்து
இணைந்திடுங்கள்
மனம் புத்துணர்ச்சி பெறும்.

கடைசி நேர அவசரம்
எப்போதும் சிக்கல் தான்.

ஒவ்வொரு நாளும்
நம் கடமைகள்
என்னென்ன..?

அன்றைய நாளில்
நாம் ஆற்ற வேண்டிய
பணிகள் என்னென்ன..?

நேரம் ஒதுக்கித் திட்டமிட்டால்
கடைசி நிமிடபதற்றமின்றி
நினைத்த நேரத்தில்..
நிம்மதியாய் முடிக்கலாம்.

வாழ்க்கையில்
என்ன இடர் வரினும்
தூக்கத்தை மட்டும்
சமரசம் செய்யாதே.

மனதை திடப்படுத்து
எத்தகைய தடுமாற்றமும்
நல்ல தூக்கத்தினால்
தெளிவான தீர்வுக்கு
வழிவகுக்கும்.

அமைதியான சூழலில்
அரை மணி நேரமாவது
மனம் தனித்திருக்குமானால்

அமைதியில்லா சிந்தனை,
மன அழுத்தம், பதட்டம்,
கோபம், மனச் சோர்வைத்
தவிர்க்கலாம்...

மன ஓட்டத்திற்கு
ஓய்வு கிடைக்கும்.

வாழ்க்கை முடிவுகளில்
தெளிவாக இருங்கள்.
அந்த முடிவில்
நிலையாக இருங்கள்.

வசந்தங்கள் என்றும்
உங்கள் மனவாயிலில்
வரவேற்கக் காத்திருக்கும்.


🌹

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்