கோரிக்கை


தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து நம்முடைய செய்தித் துறையின் அமைச்சருடைய உதவியாளர், செய்தித் துறையின் கூடுதல் இயக்குனர்கள் திரு.செல்வராஜ் திரு.மேகவர்ணம் தலைமைச் செயலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி திரு. முத்தமிழ் செல்வன் முதலமைச்சரின் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி திரு.மாறன் ஆகியோரை சந்தித்து புதிதாக ஓய்வூதியம் பெற இருக்கிற நம்முடைய 42 மூத்த பத்திரிகை யாளர்களுக்கு முதலமைச்சர் ஓய்வூதிய அரசாணையை வழங்குவதற்காக நன்றி தெரிவித்ததுடன், நம்முடைய நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர ஓய்வூதியத் தொகையை 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை வழங்கி அதை நினைவுறுத்தி வந்தோம். நம்முடைய சங்கத்தைச் சேர்ந்த திரு. நெடுமாறன் திரு. சந்திரசேகரன் திரு. மகேந்திரன் மதுரையைச் சேர்ந்த திரு. கனக சபை, திரு ராஜேந்திரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர் .

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்