உடல் சோர்வு போக இதை படியுங்க

🌼  'உடல் சோர்வு' (Chronic Fatigue).

இது பெண்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா என்றால், நாற்பது வயதைக் கடந்த ஆண்களும்  இதைத்தான் சொல்கிறார்கள். 
முதலில், இந்த சோர்வு ஏன் வருகிறது என்று தெரிந்து கொள்வோம். 

1: சோர்வின் ஐந்து மூல காரணங்கள்
 (The 5 Root Causes)

1. #ஊட்டச்சத்துகுறைபாடு (Nutritional Deficiency): முதல் காரணம் மிக எளிமையானது. உங்கள் இரத்தத்தில் சிவப்பணுக்கள் (RBC) குறைவாக இருக்கலாம். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கலாம். அல்லது நீங்கள் சாப்பிடும் இரும்புச்சத்தை உடல் கிரகித்துக் கொள்ள முடியாமல் (Absorption issues) திணறலாம். வண்டியில் பெட்ரோல் இல்லாமல் எப்படி ஓடும்? அதுபோலத்தான் இது.

2. #பிராணவாயுகுறைபாடு (Oxygen Deficiency): இதைத்தான் நான் மிக முக்கியமாகப் பார்க்கிறேன். நாம் எல்லோரும் மூச்சு விடுகிறோம். ஆனால், நம் உடலுக்குத் தேவையான அளவு ஆழமாக மூச்சு விடுகிறோமா? இல்லை. நிறைய பேர் இரண்டு மாடி படி ஏறினாலே மூச்சு வாங்குவதை பார்க்கிறேன். லங்ஸ் (Lungs) நன்றாக இருக்கும், ஹார்ட் (Heart) நன்றாக இருக்கும், ஆனால் மூச்சு வாங்கும். காரணம், உங்கள் நுரையீரல் காற்றை உள்ளிழுப்பதற்கும், கரியமில வாயுவை வெளியேற்றுவதற்கும் இடையே உள்ள அந்த 'கேப்' (Gap) குறைந்துவிட்டது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருந்தால், உடல் எப்படி இயங்கும்?

3. #தசைஅழற்சி மற்றும் #பலவீனம் (Muscle Wasting): இன்றைய தலைமுறையினரிடம் நான் பார்க்கும் மிகப்பெரிய பிரச்சனை இது. தசைகளுக்குத் தேவையான புரதச்சத்து (Protein) இல்லை. காலையில் இருக்கும் பலம் மதியம் 11 மணிக்கே காலியாகிவிடுகிறது என்றால், உங்கள் தசைகள் சோர்ந்து போய்விட்டன என்று அர்த்தம். ஸ்கூல் விட்டு வரும் குழந்தைகள் பேக்கை கூட கழட்டாமல் சோபாவில் விழுவதற்கு காரணம், சோம்பேறித்தனம் அல்ல, 'புரோட்டீன் பற்றாக்குறை'.

4. #மனச்சோர்வு (Mental Fatigue): "நாளைக்கு திங்கட்கிழமையா? ஐயோ ஆபீஸ் போகணுமே!" என்ற நினைப்பு ஞாயிறு மதியமே வந்துவிடுகிறதா? இது உடல் சோர்வு அல்ல, மனச்சோர்வு. லாக்டவுனில் வீட்டுக்குள்ளேயே முடங்கி, டிவியும் மொபைலுமே கதி என்று கிடந்தோம் நினைவிருக்கிறதா? ஒன்றரை வருடங்கள் அப்படியே பழகிய நம் மனம், இப்போது மீண்டும் பழைய வேகத்திற்கு வர மறுக்கிறது. மனது சோர்வாக இருந்தால், அது உடலையும் முடக்கிப்போடும்.

5. #மைட்டோகாண்டிரியா செயலிழப்பு (Mitochondrial Dysfunction): இதுதான் இருப்பதிலேயே மிக முக்கியமான அறிவியல் காரணம். நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் 'மைட்டோகாண்டிரியா' என்று ஒரு உறுப்பு இருக்கிறது. இதுதான் நம் உடலின் 'பேட்டரி'. இந்த மைட்டோகாண்டிரியாவிற்குள் இருக்கும் டிஎன்ஏ (DNA) தான் உங்கள் ஆயுளைத் தீர்மானிக்கிறது.
நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கும் ஆற்றல் - இந்த மூன்றும் சேர்ந்து உடலுக்குள் 'பிராண சக்தி'யாக மாறுகிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்துவது மைட்டோகாண்டிரியாதான். இந்த பேட்டரி வீக் ஆனால் என்ன ஆகும்?

நுரையீரலில் பேட்டரி வீக் ஆனால் ஆஸ்துமா வரும்.
மூளையில் வீக் ஆனால் ஞாபக மறதி வரும்.
இதயத்தில் வீக் ஆனால் ஹார்ட் அட்டாக் வரும்.
நோய் வருவதற்கு முன் உடல் கொடுக்கும் முதல் எச்சரிக்கை மணிதான் இந்த 'உடல் சோர்வு'

சோர்வை விரட்டும் 9 கட்டளைகள்

1. #வெந்நீர்மருத்துவம் (The Miracle of Hot Water)

"நீரின்றி அமையாது உலகு" என்றார் வள்ளுவர். நான் சொல்கிறேன், "வெந்நீரின்றி அமையாது உடல் நலம்".
என்னுடைய மருத்துவ அனுபவத்தில் ஒரு பாட்டியை சந்தித்தேன். 84 வயது. படுக்கையை விட்டு எழ முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் பார்த்துவிட்டு, "வயதாகிவிட்டது, ஒன்றும் செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டார்கள். அந்தப் பாட்டியின் மகன்கள் என்னிடம் வந்தார்கள். நான் நாடி பிடித்துப் பார்த்தேன். பாட்டிக்கு எந்த நோயும் இல்லை. ஒரே பிரச்சனை - 'டீஹைட்ரேஷன்' (Dehydration). உடலில் நீர்ச்சத்து இல்லை.
நான் சொன்னேன், "வேறெந்த மருந்தும் வேண்டாம். அம்மாவுக்கு முறைப்படி வெந்நீர் மட்டும் கொடுத்து வாருங்கள்." நம்புவீர்களா? 30 நாட்களில் அந்தப் பாட்டி எழுந்து உட்கார்ந்து, ஹாலுக்கு வந்து எல்லாரிடமும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்!
இதுதான் தண்ணீரின் மகத்துவம். ஆனால் சாதாரணத் தண்ணீரை விட வெந்நீர் சிறந்தது.
வாத உடல் உள்ளவர்கள்: ஒரு நாளைக்கு 3 லிட்டர் வெந்நீர் குடிக்க வேண்டும்.
பித்த உடல் உள்ளவர்கள்: ஒரு நாளைக்கு 3 லிட்டர் சாதாரணத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கப உடல் உள்ளவர்கள்: ஒரு நாளைக்கு 2 லிட்டர் வெந்நீர் குடிக்க வேண்டும்.
உங்கள் உடல் என்ன வாகு என்று அருகில் உள்ள ஒரு சித்த மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்ததும் வெந்நீர் குடிப்பதை ஒரு விரதமாகவே கடைபிடியுங்கள். ஜீரணக் கோளாறு, சுகர், தொப்பை எல்லாம் காணாமல் போய்விடும்.

2. #முட்டை தரும் முழுமையான சக்தி (Egg for Energy)
சைவமா, அசைவமா என்ற விவாதத்தை ஒதுக்கி வையுங்கள். மருந்தாக நினைத்து இதைச் செய்யுங்கள். தினமும் காலை உணவில் இரண்டு முட்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.
வேக வைத்தோ, பொரியலாகவோ, ஆம்லெட்டாகவோ - எப்படிப் பிடித்திருக்கிறதோ அப்படிச் சாப்பிடுங்கள். முட்டையில் இருக்கும் புரதமும், நுண்ணூட்டச்சத்துக்களும் (Micronutrients) சோர்வை விரட்டுவதில் நம்பர் ஒன்.
நிறைய டீனேஜ் பெண்கள், கல்லூரிப் பெண்கள் வீட்டில் சிடுசிடுவென இருப்பார்கள். எதைச் சொன்னாலும் கோபம் வரும். முகத்தில் ஒரு களை இருக்காது. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு 30 நாள் தொடர்ந்து காலை உணவில் இரண்டு முட்டை கொடுத்துப் பாருங்கள். 31-வது நாள் அந்தப் பெண்ணின் முகத்தில் இருக்கும் அமைதியையும், ஆற்றலையும் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

3. #சூரியக்குளியல் (Sun Bathing)
நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. "காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்" என்று சொன்னது சாமி கும்பிடுவதற்கு மட்டுமல்ல, உங்கள் ஆயுளைக் கூட்டுவதற்கு.
நவீன அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? காலை நேர சூரிய ஒளி உங்கள் உடலில் படும்போது, அது 63 வகையான நோய்களைத் தடுக்கிறது! ஏற்கெனவே நோய் இருந்தால் அதன் வீரியத்தைக் குறைக்கிறது.
தினமும் காலை 6 அல்லது 7 மணிக்கு, மொட்டை மாடிக்குச் செல்லுங்கள். ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நில்லுங்கள். முடிந்தால் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். அல்லது அமைதியாக உட்கார்ந்து 'ஆதித்ய ஹிருதயம்' கேளுங்கள்.
வாழ்க்கையில் தோற்றுவிடுவோமோ என்ற பயம், மனக்கவலை, தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களுக்கு சூரிய ஒளி ஒரு மாபெரும் மருந்து. அது உங்கள் ஆன்மாவையே சுத்தகரிக்கும் வல்லமை கொண்டது.

4. #நடப்போம், நலம் பெறுவோம் (Walk for Life)
நேற்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (Stanford University) ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டது. 23 வருடம் ஆராய்ச்சி செய்து அவர்கள் கண்டுபிடித்த உண்மை என்ன தெரியுமா? "யார் ஒருவர் தினமும் 12,000 ஸ்டெப்ஸ் (Steps) நடக்கிறார்களோ, அவர்களின் ஆயுள் 20% கூடுகிறது."
அதாவது உங்கள் அப்பாவின் மரபணுப்படி நீங்கள் 80 வயது வாழ்வீர்கள் என்றால், தினமும் நடந்தால் நீங்கள் 96 வயது வரை வாழ்வீர்கள். அதுவும் எப்படி? நோய் நொடி இல்லாமல்!
நான் உடனே உங்களை 12,000 அடி நடக்கச் சொல்லவில்லை. அது கடினம். ஆனால், ஒரு நாளைக்குக் குறைந்தது 2000 முதல் 4000 அடிகளாவது நடக்க முடியாதா? கடைக்குப் போவது, கோயிலுக்குப் போவது, மொட்டை மாடியில் நடப்பது என எதையாவது செய்யுங்கள். நடக்கும்போது உங்கள் இதயம், நுரையீரல், மூளை என ராஜ உறுப்புகள் அனைத்தும் புத்துயிர் பெறுகின்றன.

5. #எண்ணெய்குளியல் - என் எனர்ஜி ரகசியம் (Oil Bath)
பலர் என்னிடம் கேட்பார்கள், "குருஜி, அதிகாலை 3 மணிக்கு எழுகிறீர்கள். இரவு 11 மணி வரை இடைவிடாமல் நோயாளிகளைப் பார்க்கிறீர்கள். வாரத்தில் 7 நாட்களும் உழைக்கிறீர்கள். 22 வருடங்களாக ஓய்வே இல்லாமல் எப்படி உங்களால் இவ்வளவு எனர்ஜியுடன் இருக்க முடிகிறது?"
இதோ என் ரகசியம்: எண்ணெய் குளியல்.
தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, தியானம் முடித்ததும், என் முதல் வேலை - உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தேய்த்து, 20 நிமிடம் ஊறி, சுடச்சுட வெந்நீரில் குளிப்பதுதான்.
இன்றைய காலத்தில் வாரம் ஒருமுறையாவது இதைச் செய்ய முடியுமா என்று பாருங்கள்.
பெண்கள்: செவ்வாய் மற்றும் வெள்ளி.
ஆண்கள்: புதன் மற்றும் சனி.
உடம்பில் இருக்கும் அத்தனை உஷ்ணத்தையும் (Heat) இது எடுத்துவிடும். ஹார்மோன் பிரச்சனையா, மாதவிடாய் கோளாறா, வெள்ளைப்படுதலா? ஒரு மாதம் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்துப் பாருங்கள். அந்தப் பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஆண்களுக்கு, எண்ணெய் குளியல் அந்தத் தீய பழக்கங்களில் இருந்து விடுபட உதவும். இது என் அனுபவ உண்மை.

6. #வெங்காயம் - ஒரு சஞ்சீவி (The Power of Onion)
மருத்துவ ஜோதிடத்தின் படி, பெண்களின் உடல் 'கந்தகம்' (Sulfur) சார்ந்தது. ஆண்களின் உடல் 'பாதரசம்' (Mercury) சார்ந்தது. இந்த இரண்டு உடல்களிலுமே ஒரு ரசாயன மாற்றத்தை (Catalyst) ஏற்படுத்தக்கூடிய சக்தி உலகில் இரண்டே பொருட்களுக்குத்தான் உண்டு.
வெங்காயம்
பூண்டு
இவற்றை நம் சித்தர்கள் 'அமிர்தம்' என்றே சொல்வார்கள். மதிய உணவில் தயிர் சாதத்திலோ அல்லது சாலட்டாகவோ சின்ன வெங்காயத்தை பச்சையாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு 25 கிராம் வெங்காயம் தினமும் உடலுக்குள் சென்றால், உங்கள் செல்களின் ஆயுள் நீடிக்கும். நீண்ட காலம் வாழ்பவர்கள் உணவில் வெங்காயம் அதிகம் இருக்கும்.

7. #இயற்கைப்புரதம் (Natural Protein)
இன்றைக்கு ஜிம்முக்கு போகும் இளைஞர்கள் செய்யும் பெரிய தவறு, செயற்கையான புரோட்டீன் பவுடர்களை (Artificial Protein) வாங்கிச் சாப்பிடுவது. இதனால் பிற்காலத்தில் கிட்னி பாதிப்பு, யூரிக் ஆசிட் பிரச்சனைகள், கவுட் (Gout) வலி என்று அவதிப்படுகிறார்கள். நேற்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் கூட இது பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது.
தயவுசெய்து இயற்கையை நம்புங்கள்.
நாட்டுக்கோழி அல்லது வெள்ளைக் கோழி இறைச்சி.
வேக வைத்த பயறு வகைகள் (சுண்டல்).
முட்டை.
இவற்றில் இல்லாத சத்தா அந்த டப்பா பவுடரில் இருக்கப் போகிறது? செயற்கை வேண்டாம், இயற்கை போதும்.

8. #நெய் - பயப்படத் தேவையில்லை (Ghee is Good)
"ஐயோ நெய்யா? கொலஸ்ட்ரால் வந்துடுமே!" என்று பயப்படுபவரா நீங்கள்? முதலில் அந்தப் பயத்தைத் தூக்கி எறியுங்கள். நெய்க்கு ஆங்கிலத்தில் 'Clarified Butter' என்று பெயர். பதப்படுத்தப்பட்ட நல்ல கொழுப்பே நெய்.
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 10 மில்லி நல்ல கொழுப்பு தேவை. உணவில் 5 மில்லி கிடைத்துவிடும். மீதி 5 மில்லிக்கு ஒரு ஸ்பூன் உருக்கிய நெய் தினமும் மதிய உணவில் சேர்ப்பது மிக மிக அவசியம்.
நம் மூளை 60% கொழுப்பால் ஆனது. நல்ல கொழுப்பு இல்லையென்றால் மூளை சோர்ந்து போகும். நரம்புகள் பலவீனமாகும். கொலஸ்ட்ரால் மாத்திரைகளை சாப்பிட்டு, இருக்கும் எனர்ஜியையும் குறைத்துக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதில், சுத்தமான நெய்யை, முடிந்தால் வீட்டிலேயே வெண்ணெய் வாங்கி உருக்கிச் சாப்பிடுங்கள். அதன் மணமே உங்கள் பசியைத் தூண்டும், உடலை வளர்க்கும்.

9. #பூண்டு பால் கஷாயம் - இரவு நேர மந்திரம் (Garlic Milk Remedy)
இதுதான் இந்த மொத்தக் கட்டுரையின் 'ஹைலைட்'. 108 வர்ம புள்ளிகளையும் தூண்டிவிடும் ஒரு எளிய வீட்டு வைத்தியம் இது. புற்றுநோய் நோயாளிகள் கூட, கடைசி கட்டத்தில் வலி தாங்க முடியாமல் வரும்போது, இதைச் சாப்பிட்டுவிட்டு "சார், நான் நோய் வருவதற்கு முன் எப்படி இருந்தேனோ, அப்படி உணர்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார்கள்.
செய்முறை:
பால்: 50 மில்லி
தண்ணீர்: 100 மில்லி
பூண்டு: 2 பல் (நன்கு நசுக்கியது அல்லது அரைத்தது)
இவை மூன்றையும் சேர்த்து அடுப்பில் வையுங்கள். தண்ணீர் வற்றி, பால் மட்டும் (50 மில்லி) மிஞ்சும் வரை காய்ச்சுங்கள். பிறகு வடிகட்டி, அதில் 10 சொட்டு விளக்கெண்ணெய் (Castor Oil) மற்றும் தேவைப்பட்டால் சிறிது தேன் கலந்து, இரவு படுக்கும் முன் குடியுங்கள்.
பலன்கள்:
மறுநாள் காலை மலம் கழிக்கையில், சைக்கிள் டியூபில் இருந்து காற்று இறங்குவது போல, வயிற்றிலிருந்து கெட்ட வாயு (Gas) எல்லாம் 'புஸ்' என்று வெளியேறிவிடும்.
வயிறு லேசானாலே, மனமும் உடலும் லேசாகிவிடும்.
நுரையீரல் (Lungs) வலுப்பெறும். குறட்டை குறையும். ஆஸ்துமா தொல்லை இருக்காது.
உடலில் உள்ள வலிகள், சோர்வு மாயமாய் மறையும்.
இதை ஒரு மண்டலம் (48 நாட்கள்) செய்து பாருங்கள். உங்கள் எனர்ஜி லெவல் 50% அதிகரிப்பதை நீங்களே உணர்வீர்கள்.

 மேலே சொன்ன 9 விஷயங்களில், உங்களால் முடிந்ததை இன்றே தொடங்குங்கள். குறிப்பாக, எண்ணெய் குளியல் மற்றும் இரவு பூண்டு பால் - இந்த இரண்டையும் மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டீர்கள் என்றால், உலகில் எந்த நோயும் உங்களை நெருங்காது.

இதை ஒரு 100 நாள் சவாலாக (100 Days Challenge) எடுத்துக்கொள்ளுங்கள். "இன்று முதல் நான் என் உடலை நேசிக்கப் போகிறேன்" என்று உறுதிமொழி எடுங்கள். 100 நாட்கள் கழித்து, 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
பகிர்வு பதிவு - Dr. கெளதமன் அவர்களின் முகநூல் பக்கத்தில்லிருந்து, அன்புடன் Er.P. வேல் முருகன், ve constructions & Real estate, Vellore Sri Balaji Agencies ( HP GAS கமர்சியல்)

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்