அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் மனித நேயம் அவசியமாக உள்ளது - கேரளா முன்னாள் ஆளுநர் சதாசிவம் பேச்சு

வேலூர்    
10-12-25

அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் மனிதநேயம் அவசியமாக உள்ளது காலநிலை மாற்றம் போன்ற பிரச்சணைகள் கண்டுபிடிப்புகளால் சரி செய்ய முடியாது - மாணவர்கள் விதிகள் சட்டங்களை அறிந்திருக்க வேண்டும் - உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான  .சதாசிவம்  பேச்சு
 
வேலூர், டிச.10 -
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் துறை சார்பில் 19-ஆவது உலகளாவிய உற்பத்தி மற்றும் மேலாண்மை மாநாடு  அண்ணா அரங்கத்தில்  விஐடி வேந்தர் முனைவர்  விசுவநாதன்  தலைமையில் நடைபெற்றது இதில்   சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான  .சதாசிவம்  கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கி வைத்தார் இதில்  விஞ்ஞானிகள் சதிஷ்ரெட்டி,மதுசூதன் ரெட்டி,தாலபில் பிரதீப் ஆகியோர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டு விழாமாநாட்டு  மலரையும் வெளியிட்டனர் இந்த சர்வதேச மாநாடு மூன்று நாட்கள் நடைபெறுகிறது இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் 
   இவ்விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான  .சதாசிவம்  பேசுகையில் இந்தியா அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் முன்னோடி நாடாக விளங்குகிறது ஆராய்ச்சி படிப்புகள் தொழில் முனைவோர் புதிய கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் முன்னோடியாக இந்தியா விளங்குகிறது உலக மாணவர்கள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சில கருத்துகளை சொல்லி கொள்கிறேன் ஏன் என்று கேள்வி எழுப்புங்கள் தோல்வியை சந்தித்தாலும் அது தான் வெற்றியின் ஆராய்ச்சியின் முதல் படி மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் மனிதநேயம் அவசியம், உலகத்தை பற்றி சிந்தியுங்கள் புதிய கண்டுபிடிப்புகள் வெளிப்படைதன்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் மேலும் கால நிலை மாற்றம் போன்றவைகள் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளால் சரி செய்ய முடியாதது மேலும் மத்திய மாநில அரசுகளின் விதிகள் சட்ட உரிமைகளையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் சட்டத்தில் என்னென்ன விதிகள் உள்ளது உரிமைகள் உள்ளது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென பேசினார் இவ்விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்