கெட் அவுட் அமைச்சர் துரைமுருகன், வேட்பாளர் கதிர் ஆனந்த்தை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்

வேலூர்:

ஊருக்குள் விடாமல் அமைச்சர் துரைமுருகன், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்தை  கிராம மக்கள் திருப்பி அனுப்பினர்.

சிட்டிங் அமைச்சர் மற்றும் எம்பி ஊருக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்த சம்பவம்  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அணைக்கட்டு கன்னிகாபுரம் பகுதியில் வாக்குசேகரிக்கச் சென்ற அமைச்சர் துரைமுருகன், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்தை தடுத்து நிறுத்தி ஊருக்குள் வரவிடாமல் கிராம மக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.
சாலை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை தேவைகளையும் செய்துதரவில்லை. கடந்த முறை தேர்தலுக்கு வாக்கு கேட்க வந்த கதிர் ஆனந்த் சாலை வசதி, தண்ணீர் வசதி செய்து தருவதாக கூறினார். அதை நம்பி அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தோம். அதன் பிறகு கதிர் ஆனந்த் வாக்குறுதியை
நிறைவேற்றவில்லை. தொகுதிக்கும் வரவில்லை. இப்போது தேர்தல் வந்துள்ளது இதனால் எங்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வந்துள்ளார். ஏன் வருகிறீர்கள்எனகுற்றஞ்சாட்டி வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. 
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பாபு கெஞ்சி பார்த்தார். பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். கிராம மக்கள் சம்மதிக்கவில்லை.
இந்த விவகாரத்தால் காருக்குள்ளேயே அமைச்சர் துரைமுருகன் உட்கார்ந்திருந்தார். கடைசி வரை போலீஸார் மற்றும் திமுகவினர்பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் சமரசம் ஆகாததால், அமைச்சர் துரைமுருகன், வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் தி.மு.க-வினர் திரும்பிச் சென்றனர்.

ஒரு சிட்டிங் அமைச்சர் அதிலும் திமுகவின் பொதுச் செயலாளர், சீனியர் அமைச்சர் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த்தைநுழைய விடாமல் பொதுமக்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
எந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் ஒதுக்கப்பட்ட இந்த ஊருக்கு ஏன் வந்தீர்கள் என கோஷமிட்ட இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மீது விரிஞ்சிபுரம்காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.*
இது குறித்து ராமாபுரம் மக்கள் கூறியது:வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் ராமாபுரத்தில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் துரைமுருகன் அவருடைய மகன் கதிர் ஆனந்தத்திற்காக பிரச்சாரம் செய்ய வந்தபோது ஊர் பொதுமக்கள்  ஊருக்குள் வரக்கூடாது என்று திருப்பி அனுப்பி வைத்தார்கள் துரைமுருகன் மற்றும் நந்தகுமார் 
இனி வருங்காலங்களில் பொதுமக்களை ஏமாற்ற முடியாது இதுவே ஒரு முன்னுதாரணம்* இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்