2 இ ட் ச ம் பனை மர விதைகள் விதைக்க திட்டம்
இந்தாண்டு 2 லட்சம் பனைமர
விதைகள் விதைக்க திட்டம்
மண்ணும் மரமும் குழுவினர்
அசத்தல்
ராணிப்பேட்டையில் உள்ள மண்ணும், மரமும் குழுவினர் இந்தாண்டு 2 லட்சம் பனைமர விதைகள் விதைக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ராஜூ கூறினார்.
தமிழர்களின் உணவிலும், வாழ்க்கையிலும் இரண்டற கலந்த பனை மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலைமை நீடித்தால் வருங்காலத்தில் பனை மரத்தை படங்களில் தான் பார்க்க முடியும்.
இதை மீட்டெடுக்கும் முயற்சியில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பெல் நிறுவனத்தில் கூடுதல் பொது மேலாளராக பணியாற்றி வரும் ராஜூ, 58, என்பவர் தலைமையில், மண்ணும் மரமும் என்ற இயற்கை பாதுகாப்புக்குழு 2019 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இது குறித்து மண்ணும் மரமும் குழுவின் தலைவர் ராஜூ அளித்த பேட்டி: மண்ணும், மரமும் குழுவில் பள்ளி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் என 60 பேர் உள்ளனர்.
சேலம், திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பனை விதைகள் கொள்முதல் செய்யப்படுகின்றது.
உலக அளவில் 108 நாடுகளில் பனைமரம் வளரும் தன்மை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமான மரமாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு 20 கோடிக்கு மேலான பனைமரங்கள் இருந்தன.
தற்போது செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் தற்போது 2 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. பனை மரத்தின் பட்டை, பழம், நுங்கு, பதநீர் என ஒவ்வொரு பாகங்களும் மனிதர்களுக்கு பயன் தரக்கூடியதாக உள்ளது.
இந்த மரத்தின் சல்லி வேறானது 40 சதவீதம் நிலத்தடி நீரை சேமிக்கக் கூடியதாக உள்ளது.
இதனால் ஒரு பனை மரத்தை அழித்தால், அது ஒரு மனிதனை கொன்ற கணக்கில் வரும் என முன்னோர்கள் கூறினர்.
இதனால் பனைமரங்களை வளர்க்க விதைகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 5 கோடி பனை விதைக்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக கடந்தாண்டு 1. 78 லட்சம் பனை விதைகளையும், 5 ஆயிரம் மரக்கன்றுகளையும் நட்டுள்ளோம்.
இந்தாண்டு 2 லட்சம் பனை விதைகளையும், 6 ஆயிரம் மரக்கன்றுகளையும் நட திட்டமிட்டு இது வரை 25 ஆயிரம் விதைகள், 1,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மண்ணும் மரமும் குழுவின் நோக்கமே அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாப்பான இயற்கை சூழலை விட்டுச் செல்ல வேண்டும் என்பது தான்.
ராணிப்பேட்டை, நரசிங்கபுரம், மணியம்பட்டு, தெங்கால், திருவலம், சேர்க்காடு, லாலாப்பேட்டை, காஞ்சனகிரி மலை பகுதிகளிலும், ஏரி கரைரைகள், ஆற்றுப்படுகைகள், நீர் நிலைகள், பொது இடம், பள்ளி வளாகங்கள், கோவில்களில் நட்டு வருகிறோம்.
கடந்தாண்டு 1. 78 லட்சம் பனை விதைகளை விதைத்ததில் தற்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் 2 அடி உயரமும், மரக்கன்றுகள் 4 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது.
பனை மரங்களை யாராவது வளர்க்க விரும்பினால் மண்ணும் மரமும் குழுவினருக்கு 94422 08894 என்ற மொபைலில் தொடர்பு கொண்டால் பனை விதைகள், மரக்கன்றுகள் இலவசமாக வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment