ஓய்வூதியர் தினம்
*வேலூரில் மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில்*
*ஓய்வூதியர் தினம்*
வேலூர்:
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழுவின் வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் ஓய்வூதியர் தின விழா வேலூர் பெல்லியப்பா கட்டிட கூட்ட அரங்கில் கொண்டாடப்பட்டது.
ஓய்வூதியம் என்பது இனாமாக தரப்படும் ஒன்றல்ல ஊழியர்களுக்கு நியாயமாக தர வேண்டியது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினை நகார வழக்கில் தீர்ப்பு வழங்கிய நாளான இன்று ஓய்வூதியர் தினமாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்
இன்று நடைபெற்ற இந்த விழாவிற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எம்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட பொருளாளர் எ.கதீர்அகமது வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ந.பர்வதராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளிக்கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பொ.குமரேசன், அகில இந்திய தொலை தொடர்பபுத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட ஆலோசகர் வி.மணி, அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்க மாநில கௌரவ தலைவர் ஜி.நரசிம்மன், அகில இந்திய இன்சூரன்ஸ் பென்சனர்கள் சங்கத்தின் கோட்ட செயலாளர் டி.செந்தில்வேல், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பின் மாவட்ட செயலாளர் கு.தர்மன், பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கே.குமார், தட்சிண ரயில்வே ஓய்வூதியர் சங்க கோட்ட உதவி செயலாளர் கே.முருகானந்தம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ப. ரவி, ஓய்வுபெற்ற பள்ளிக்கல்லூரி ஆசிரியர் நல சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஆறுமுகம், பொருளாளர் அ.சிவக்குமார், துணைத்தலைவர் ஜி.ராஜேந்திரன், இல.சீனிவாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பழைய ஓய்வூதிய முறையில் ஓயூவூதியம் பெறுவோர்கள் அதனை தக்க வைத்துக்கொள்ளவும் புதிய ஓய்வுதிய முறையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறையினை அமல்படுத்தாமல் பழைய ஓய்வூதிய முறையியை அமல்படுத்தவும் தொடர்ந்து போராட வேண்டிய சூழ்நிலையில் இன்றைய தினம் கொண்டாடப்பட்டது.
Comments
Post a Comment