குத்து விளக்கு பூஜை
உலக மக்களின் க்ஷேமத்திற்காக காட்பாடியில் பிராமணர் சங்கம் நடத்திய குத்து விளக்கு பூஜை
வேலூர், ஜன 4
தமிழ்நாடு பிராமணர் சங்கம் காந்தி நகர் கிளை சார்பாக, அனைத்து மக்களின் க்ஷேமம் மற்றும் சுபிட்சமாக வாழ்வதற்காக வேண்டி, கூட்டுப் பிரார்த்தனையாக தமிழ்நாடு பிராமணர் சங்கம், காட்பாடி காந்தி நகர் கிளையினர் குத்து விளக்கு பூஜை நிகழ்ச்சி, இன்று ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காந்தி நகர் கிளை தலைவர் டி.வி. துரைராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.
முன்னதாக பொதுச் செயலாளர் நிர்மலா வாசு அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
காந்தி நகர் பிராமணர் சங்க பொருளாளர் எஸ். ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் பட்டாபிராம சாஸ்திரிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வினாயகர் பூஜையுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியை மதன் சிவாச்சாரியார் அவர்கள்,
குரு வந்தனம்
சங்கல்பம்
லலிதா ஸஹஸ்ர நாமம்
லக்ஷ்மி அஷ்டோத்திரம்
கீர்த்தனைகள்
புஷ்பாஞ்சலி
மங்கள ஆரத்தி
உள்ளிட்ட பூஜைகளை செய்தார்.
குத்து விளக்கு பூஜையில் காட்பாடி, சத்துவாச்சாரி மற்றும் வேலூரில் இருந்து ஏராளமான பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.
நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் சாய்ராம், பொதுக்குழு உறுப்பினர்கள் ரங்கநாதன், நாகலட்சுமி ராதாகிருஷ்ணன் , நாராயணன், சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சியில் வேலூர் வெல்பிராஸ் பிராமணர் சங்க தலைவர் க. ராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Comments
Post a Comment