தெரிந்து கொள்வோம்
இந்தியாவின் சுதந்திரத்திற்கு
வித்திட்ட வேலுார்
சிப்பாய் புரட்சி
இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடந்தது வேலுாரில் தான்.
இந்தியாவில் சுதந்திர காற்றை சுவாசித்து வரும் இன்றைய இளைய தலைமுறையினர் சுதந்திரம் எப்படி கிடைத்தது, அதற்கான மூல காரணம் குறித்து அறிந்து கொள்ளவில்லை.
பழைய தலைமுறையினர் அவர்களுக்கு அதை பற்றி சொல்ல நேரம் கிடைக்காதபடி நம் வாழ்க்கை முறை தற்போது அமைந்துள்ளது. இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியரும் அறிந்திருக்க வேண்டியது இந்திய விடுதலைக்கு வித்திட்ட வேலுாரில் நடந்த சிப்பாய் புரட்சி ஆகும்.
ஜாலியன் வாலாபாக்கில் கி.பி., 1857 ல் நடந்த சிப்பாய் கலகம் இந்திய சுதந்திர போரில் முக்கிய பங்கு வகிப்பது உண்மைதான்.
அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே வேலுார் கோட்டையில் நடந்த சிப்பாய் கலகம், பின்னால் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஒரு முன்னோடியாக விளங்கியது.
வரலாறு:
கி.பி., 1799 ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடந்த போரில் ஆங்கிலேயர்களால் திப்புசுல்தான் கொல்லப்பட்டார். இதனால் அவரது 12 மகன், 8 மகள்கள், உறவினர்கள் என 1,378 பேர் கைது செய்யப்பட்டு, ஓய்வூதியம் அளித்து வேலுார் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
இதில் திப்புசுல்தானின் மகன், மகள்கள் மட்டும் கோட்டைக்குள் உள்ள திப்பு மகால், ைஹதர் மகாலில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு பணி செய்ய வந்த 1,812 பேர் கோட்டைக்கு வெளியே தங்க வைக்கப்பட்டனர்.
அவர்கள் மட்டும் தினமும் மூடு பல்லக்கில் கோட்டைக்கு வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
கிளச்சிக்கு காரணம்:
கி.பி., 1806 ம் ஆண்டு மதாராஸ் படைக்கு முதன்மை தளபதியாக இருந்த சர்ஜான் கிரேட் வேலுார் கோட்டையை பாதுகாத்து வந்த இந்திய சிப்பாய்களுக்கு புதிய விதிமுறைகள் புகுத்தினார்.
அதன்படி ராணுவ அணி வகுப்பிற்கு வரும் இந்து சிப்பாய்கள் காதில் கடுக்கண் அணியக்கூடாது, சமய சின்னங்கள் நெற்றியில் இடக்கூடாது. இஸ்லாமிய சிப்பாய்கள் தாடியை அகற்றி மீசை வைத்துக் கொள்ள வேண்டும்.
பன்றி, பசுவின் தோலினால் செய்யப்பட்ட புதிய தலைப்பாகைகளை அணிய வேண்டும். இஸ்லாமியர்கள் பன்றியை அசுத்தமான மிருகமாகவும், இந்துக்கள் பசுவை தெய்வமாகவும் மதித்தனர். இதனால் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர்.
மார்பில் சிலுவை சின்னம் அணிய வேண்டும். இவை தங்கள் மதக் கோட்பாடுகளை அவமதிப்பதாகவும், மதம் மாற்ற முயற்சி என்றும் இந்திய சிப்பாய்கள் கூறினர்.
இதனால் கர்னல் டேர்லி என்பவர் இதை எதிர்த்த சிப்பாய்களுக்கு தினமும் 100 சவுக்கடியும், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்தார். பலர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். சிலர் இட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்திய சிப்பாய்கள் ஆத்திரமடைந்து புரட்சி செய்ய முடிவு செய்தனர். இதற்கு திப்பு சுல்தானின்
மூத்த மகன் மைசூத்தீன் என்பவர் ஆதரவு கொடுத்து திட்டம் போட்டு கொடுத்தார்.
[01/04, 8:56 am] Dhinakaran: ஒடுக்கப்பட்ட புரட்சி:
கி.பி., 1806 ம் ஆண்டு ஜூலை மாதம் 14 ம் தேதி புரட்சி செய்ய இந்திய சிப்பாய்கள் திட்டமிட்டனர். முஸ்தபா பேக் என்ற இந்திய சிப்பாய் உளவு அதிகாரி கர்னல் போர்பஸ் என்பவனிடம் புரட்சியை போட்டுக் கொடுத்து விட்டான்.
இதனால் 10ம் தேதிக்கு திட்டத்தை இந்திய சிப்பாய்கள் மாற்றினர். அன்று அதிகாலை 2:00 மணிக்கு இந்திய சிப்பாய்கள் அணி வகுப்பு மரியாதை நடக்கும் இடத்தில் ஒன்று கூடினர். ஆங்கிலேயர்கள் தங்களை சுடுகிறார்கள் என்று தவறான தகவல் தெரிவித்தனர்.
ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் கோட்டையில் ஆங்கிலேயர்கள் தங்கியிருந்த பங்களாவுக்கு சென்று 250 அதிகாரிகள், காவல் காத்திருந்த 200 ஆங்கிய சிப்பாய்களை சுட்டுக் கொன்றனர்.
கோட்டை கொடி மரத்தில் இருந்த ஆங்கில அரசின் யூனியன் ஜாக் கொடியை இறக்கி திப்புசுல்தானில் புலிக்கொடியை ஏற்றினர்.
திப்பு சுல்தானின் மைசூத்தீன் என்பவரை அரசனாக அறிவித்தனர். சிப்பாய்கள் புரட்சி செய்வது குறித்து மேஜர் கூட்ஸ் என்பவர் ராணிப்பேட்டையில் இருந்த அதிகாரிகளுக்கு டெலிகிராம் கொடுத்தார்.
இதனால் அங்கிருந்த மேஜர் ஜில்லப்ஸி என்பவர் தலைமையில் 2,000 குதிரை படைகளுடன் காலை 7:00 மணிக்கு வேலுார் கோட்டைக்கு வந்தனர்.
வெற்றிக் களிப்பில் இருந்த இந்திய சிப்பாய்கள் கோட்டை கதவை மூட மறந்ததால் ஆங்கில சிப்பாய்கள் சுலபமாக கோட்டைக்குள் புகுந்தனர்.
காலப்பர் துப்பாக்கிகளை கொண்டு 900 இந்திய சிப்பாய்களை சுட்டுக் கொன்று புரட்சியை அடக்கினர்.
சிப்பாய் புரட்சி மிகவும் கடுமையான முறையில் 24 மணி நேரத்தில் ஆங்கில படைகளால் ஒடுக்கப்பட்டது.
தலைவன் இல்லாத சிப்பாய் புரட்சி தோல்வியில் முடிந்தது.
தண்டனை:
புரட்சிக்கு காரணமான 117 இந்திய சிப்பாய்கள் விசாரணைக்கு பிறகு கோட்டை மேற்கே உள்ள மரத்தில் துாக்கிலிட்டன
[01/04, 8:58 am] Dhinakaran: மரத்தில் துாக்கிலிட்டனர். 600 சிப்பாய்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
500 பேர் நாடு கடத்தப்பட்டனர். 300 பேர் பீரங்கியின் வாய் பகுதியில் சுட்டு உடல் சிதறிக்கப்பட்டு கோட்டை அகழில் வீசப்பட்டனர்.
தற்கொலை:
புரட்சி நடந்த போது பயத்தில் திப்பு சுல்தானின் மகள் திருமணத்திற்கு வந்த பெண்கள் பலர் அங்குள்ள குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.
அதன் பிறகு திப்புசுல்தானில் குடும்பத்தினர், உறவினர்கள், பணியாளர்களை கோட்டையில் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு அவர்களை வேறு சிறைக்கு மாற்ற முடிவு செய்தது.
ஆண்கள் அனைவரும் கொல்கத்தா சிறைக்கும், பெண்கள் மட்டும் வேலுார் கோட்டையில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் இறந்ததும் அவர்களுக்காக அமைக்கப்பட்ட சமாதிகள் இப்போதும் ஆற்காடு சாலையில் உள்ளது.
நினைவுத்துாண்:
புரட்சியில் இறந்த இந்திய சிப்பாய்கள் உடல்கள் கோட்டை அகழியில் வீசப்பட்டது. ஆனால் இறந்த ஆங்கிலேய அதிகாரிகள் உடல்கள் கோட்டைக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்டது. இதனால் புரட்சியை நினைவு படுத்தும் வகையில் கோட்டைக்கு எதிரே மக்கான் சந்திப்பில் இறந்த இந்திய சிப்பாய்களுக்கு 1998 ம் ஆண்டு நினைவு துாண் வைக்கப்பட்டு ஆண்டு தோறும் மலரஞ்சலி நடக்கிறது.
சிப்பாய் புரட்சி தபால் தலை வெளியிடப்பட்டது. 8 ம் வகுப்பு பாட புத்தகத்தில் சிப்பாய் புரட்சி இடம் பெற்றுள்ளது. சிப்பாய் கலகம் என்பது சிப்பாய் புரட்சி என மாற்றப்பட்டது. சிப்பாய் புரட்சி நடந்து 215 ஆண்டுகள் ஆகின்றது.
பார்க்கலாம்:
புரட்சியில் ஆங்கில படையினர் பயன்படுத்திய இரும்பினால் ஆன குண்டு, வெடி மருந்து கலவை இரும்பு குடுவை இன்றும் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. அப்போது நடந்த சண்டையில் கோட்டை மதில்சுவர் குண்டுகளால் துளைக்கப்பட்டதன் அடையாளம் இன்றும் காணலாம்.
கி.பி., 1806 ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி வேலுார் கோட்டையில் ஒரு நாள் மட்டும் நடந்த சிப்பாய் புரட்சி தான் முதல் இந்திய சுதந்திர போருக்கு வித்திட்டது.
Comments
Post a Comment