பாலாறு கலந்தாய்வுக் கூட்டம்
பாலாறு பெருவிழா
கலந்தாய்வுக்கூட்டம்
விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆம்பூர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா கலந்தாய்வுக்கூட்டம் ஏப். மாதம் 3 ம் தேதி காலை 11:30 மணிக்கு வேலுார் திருமலைக்கோடி நாராயணி மகாலில் நடைபெற உள்ளது.
ஸ்ரீபுரம் சக்தி அம்மா தொடங்கி வைக்கிறார். அகில பாரதீய சந்நியாசிகள் சங்க பொருளாளர், மாநாடு ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா, சிரவையாதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், அகில பாரதீய சந்நியாசிகள் சங்க பொதுச் செயலாளர் ஆத்மானந்த சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் 2011 ம் ஆண்டு முதல் தமிழகத்ததில் உள்ள அனைத்து நதிகளும் உற்பத்தியாகும் மலையிலிருந்து கடலில் சங்கமமாகும் இடம் வரை தீர்த்த கலசங்களுடன் ரத யாத்திரை, பாத யாத்திரை செய்து, நதிகளை புனிதமாக வழிபட வேண்டும், புனித தீர்த்தத்தை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்த வேண்டும். குப்பைகள் கொட்டுதல், கழிவுநீர் செல்லும் நதியாக இல்லாமல் உயிர்களின் ஜீவாதாரமக விளங்கும் நதிகளை பாதுகாக்க வேண்டும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இப்போது புராணங்களினால் வழிபட்ட பாலாற்று அன்னையின் சிறப்பை மக்களுக்கு விழிப்புணர்வு ஏறபடுத்த பாலாறு உற்பத்தியாகும் கர்நாடகா மாநிலம் நந்தி மலையிலிருந்து ஆந்திரா, தமிழ்நாடு, செங்கல்பட்டு கிழக்கு கடற்கறைசாலை, வயலுார் வரை தீர்த்த கலசங்களுடன் ரத யாத்திரை, பாத யாத்திரை நடத்த தீர்மானித்துள்ளோம்.
நிறைவு விழாவாக வரும் ஜூன் மாதம் 29ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை வேலுார் திருமலைக்கோடி நாராயணி மகாலில் 5 நாட்கள் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் நாடு முழுவதுமிருந்து சந்நியாசிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், ஆன்மீக சான்றோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment