மண்டல குழு தலைவர்கள் தேர்வு
மண்டல குழு
தலைவர்கள் தேர்வு
வேலுார் மாநகராட்சியில் மேயராக சுஜாதா, துணை மேயராக சுனில்குமார் உள்ளனர்.
60 வார்டுகளில் உள்ள நான்கு மண்டல குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. தி.மு.க., சார்பில் ஒன்றாவது மண்டலத்திற்கு புஷ்பலதா, இரண்டாவது நரேந்திரன், மூன்றாவது யூசுப்கான், நான்காவது மண்டல தலைவராக வெங்கடேசன் ஆகியார் மண்டல குழு தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
கமிஷனர் அசோக்குமார் தலைமையில் தேர்தல் நடந்தது. ஒன்றாவது மண்டலத்திற்கு தி.மு.க., வை சேர்ந்த புஷ்பலதா, நான்காவது மண்டலத்திற்கு தி.மு.க., வை சேர்ந்த வெங்கடேசன் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மூன்றாவது மண்டல குழு தலைவர் பதவிக்கு தி.மு.க., யூசுப்கானை எதிர்த்து அ.தி.மு.க., வை சேர்ந்த எழிலரசன் மனு தாக்கல் செய்தார். இதில் 11 ஓட்டுக்கள் பெற்று தி.மு.க., வேட்பாளர் யூசுப்கான் வெற்றி பெற்றார்.
இரண்டாவது மண்டல குழு தலைவர் பதவிக்கு அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தி.மு.க., வை சேர்ந்த சுரேந்திரனுக்கு எதிர்ப்பாக அக்கட்சியை சேர்ந்த ஆர்.பி., ஏழுமலை மனு தாக்கல் செய்தார்.
இதில், தி.மு.க., போட்டி வேட்பாளர் ஆர்.பி., ஏழுமலை மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், நரேந்திரன் வெற்றி பெற்றதாகவும் கமிஷனர் அசோக்குமார் அறிவித்தார்.
தேர்வு செய்யப்பட்ட மண்டலக்குழு தலைவர்களை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வேலுார் கார்த்திகேயன், அணைக்கட்டு நந்தகுமார் பாராட்டினர்.
Comments
Post a Comment