செங்கோட்டையில் பறந்த முதல் தேசிய கொடி குடியாத்தத்தில் தயாரிப்பு
சுதந்திரம் பெற்றவுடன்
செங்கோட்டையில் பறந்த
முதல் தேசிய கொடி
குடியாத்தத்தில்
தயாரிப்பு
சுதந்திரம் பெற்றவுடன் டெல்லி செங்கோட்டையில் பட்டொலி வீசி பறந்த முதல் தேசிய கொடி வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது.
நாடு முழுவதும் தேசிய கொடி ஏற்ற அதிகளவு கொடி தேவைப்பட்டது. இதனால் பல்வேறு நிறுவனங்களில் கொடி தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனுாரை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் இந்துஸ்தான் லுங்கி கம்பனி நடத்தி வந்தார்.
அவரும், அவரது மனைவி முனிரத்தினம் அம்மாளும் இணைந்து இரண்டு கோடி கொடியை கைத்தறியில் நெசவு செய்து டெல்லிக்கு அனுப்பினார்.
அவர் தயாரித்து அனுப்பிய கொடிதான், செங்கோட்டையில் ஏற்ற தேர்வு செய்யப்பட்டது. 1947 ம் ஆண்டு ஆக., 15 ல் சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் முதல் தேசிய கொடியாக அது ஏற்றப்பட்டது.
கொடியை சிறப்பாக தயாரித்ததற்காக நேரு பாராட்டி அனுப்பிய கடிதத்தை அவரது குடும்பத்தினர் இன்றளவும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகின்றனர்.
Comments
Post a Comment