கஞ்சா வியாபாரிகள் கைது
வேலுார், ராணிப்பேட்டை
மாவட்டங்களில்
கஞ்சா வியாபாரிகள்
6 பேர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் கஞ்சா கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்கச் சென்ற போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தையடுத்து, கஞ்சா கும்பலை போலீசார் தேடி வந்தனர்.
அரக்கோணம் சித்தேரியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளான குமரேசன், 22, தண்டலம் அரிதாஸ், 21, பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அஜீத், 23, வடமாம்பாக்கம் பிரபு, 24, ஆகியோரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துது ஒன்னரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது
ஆந்திரா மாநிலம், சித்துாரில் இருந்து வேலுார் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை சோதனை செய்து 20 கிலோ கஞ்சா, 335 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டனத்தை சேர்ந்த கிலோ ஜோகி ராஜூ, 37, கிலோ சுப்பராவ், 35, கிலோ கோபி, 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Comments
Post a Comment