மார்க்.கம்யூ முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணன் பேட்டி
மார்க்., கம்யூ., முன்னாள்
வேலுார் மாவட்ட செயலாளர்
நாராயணன் பேட்டி:
மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற் சங்கங்கள் நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடத்தி வருகிறது.
இது குறித்து மார்க். கம்யூ., முன்னாள் வேலுார் மாவட்ட செயலாளர் நாராயணன் அளித்த சிறப்பு பேட்டி:
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கை விட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 சதவீத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
தேசிய பணமாக்கும் திட்டத்தை கை விட வேண்டும். எல்.ஐ.சி., யின் பங்குளை மத்திய அரசு விற்பனை செய்யக்கூடாது.
குறிப்பாக, தனியாருக்கு எல்.ஐ.சி., யின் பங்குகளை விற்பது தேச நலனுக்கு எதிரானது. இது பொது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் பலவற்றுக்கும் பங்களித்துள்ள எல்.ஐ.சி., யின் பங்குகளை விற்ற மத்திய அரசு எடுத்துள்ள முடிவு மிகவும் முறையற்றது.
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களோடு ஒப்பிட்டால் எந்த காலத்திலும் சரிவை சந்திக்காக நிறுவனமாக உள்ளது எல்.ஐ.சி., மட்டும் தான்.
நல்ல லாபத்தை ஈட்டி வரும் எல்.ஐ.சி., நிறுவனத்தின் மூலம் ரயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம், நீர் பாசனம், குடிநீர் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு முதலீடு செய்துள்ள தொகை ரூ 28,84,331 கோடி ஆகும்.
இந்திய பொருளாதாரத்திற்கு எல்.ஐ.சி., ஒரு அமுத சுரபியாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான எல்லா திட்டங்களுக்கும் உதவிய நிலையில் அதை ஏன் தனியாரிடம் கொடுத்து மக்களின் நம்பிக்கையை அரசு சீர்க் குலைக்க வேண்டும்.
பங்குகளை விற்பனை செய்வதால் பொருளாதார திட்டங்களுக்கு நிதி வழங்க இயலாமல் இந்திய பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிடும்.
எவவே மத்திய அரசு இது போன்ற முடிவுகளை கை விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment