கதிர் ஆனந்த் எம்பி பேச்சு டெல்லியில்
10 ஆண்டுகளாக கடல் நீருக்கடியில்
தொல்லியல் ஆய்வுகள் நடந்ததா?
பாராளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்பி
கேள்வி
பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் வேலுார் திமுக எம்பி கதிர் ஆனந்த் பேசியதாவது:
இந்திய தொல்லியல் துறை கடந்த 10 ஆண்டுகளாக கடல் நீருக்கடியில் ஆய்வுகளை மேற்கொள்ளவில்லையா? அதன் விவரங்கள், பண்டைய தமிழ்நாட்டில் சங்க காலத்தை சேர்ந்த தொல்லியல் எச்சங்கள் பூம்புகார், கொற்கைக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டதா?
கடல் ஆய்வுப் பணிகளில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையுடன் இணைந்து பணியாற்ற இந்திய தொல்லியல் துறை விரும்புகிறதா? அப்படியானால் அதன் விவரங்கள் என்ன? என கேள்வி எழுப்பினார்.
இத்றகு மத்திய அரசின் கலாச்சாரம், சுற்றுலா துறை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்து பூர்வமாக கொடுத்த பதில்: 1962 முதல் 1968 ம் ஆண்டு வரை பூம்புகாரில் அகழ்வாராய்ச்சிகள் இந்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்டது. கொற்கையில் அகழாய்வு தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு பழங்காலதடயங்கள் கண்டுபிடிப்புக்கள் வெளியிடப்பட்டன.
மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய தொல்லியல் துறை செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
Comments
Post a Comment