நமது மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராஜமாணிக்கம் பேட்டி

நமது மக்கள் கட்சி
நிறுவனத்தலைவர்
ராஜமாணிக்கம் பேட்டி:

மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற் சங்கங்கள் நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடத்தி வருகிறது.
இது குறித்து நமது மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் ராஜமாணிக்கம் அளித்த சிறப்பு பேட்டி: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கை விட வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 சதவீத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
தேசிய பணமாக்கும் திட்டத்தை கை விட வேண்டும். எல்.ஐ.சி., யின் பங்குளை மத்திய அரசு விற்பனை செய்யக்கூடாது.
இது போன்ற கோரிக்கைகளுக்காக மத்திய தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தம் நடத்தி வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
எனவே மத்திய தொழிற் சங்க நிர்வாகிகளை உடனடியாக மத்திய அரசு அழைத்து இந்த பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்