ஏர் ஹாரன்கள் ஒழிக்கப்படுமா
வாகனங்களில் காதை
கிழிக்கும் ஏர்ஹாரன்கள்
அகற்றப்படுமா
பொது மக்கள் எதிர் பார்ப்பு
வாகனங்களில் காதை கிழிக்கும் ஏர்ஹாரன்கள் அகற்றப்படுமா பொது மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், நாளுக்கு நாள் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது.
இதனால் பஸ், லாரி, ஆட்டோக்களில் காதை கிழிக்கும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சில வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் இசை வடிவிலான ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏர்ஹாரன்களினால் நடந்து செல்பவர்களும், பைக் ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:
அதிக சத்தம் ஏற்படுத்தும் ஒலி நம் காதருகே கேட்கும் போது அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மனிதன் காதுகளுக்கு குறிப்பிட்ட சப்பத்துக்கு மேல் ஒலியை கேட்டும் திறன் இல்லை.
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை கூட இந்த ஒலி பாதிக்கும். அதிக ஒலியால் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க 90 டெசிபல் ஹாரன் ஒலிப்பான்களை பயன்படுத்த வேண்டும். இதற்கு மேல் பயன்படுத்தினால் இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஒலி மாசு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.
பல வாகனங்களில் ஏர் ஹாரன்களுடன் இரும்புக் குழாய் பொருத்தப்பட்டு 200 டெசிபல் வரை ஒலி எழுப்புகின்றனர். ஒலி மாசு ஏற்படுத்தும் ஏர் ஹாரன்கள் சில நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்து கொண்டுள்ளனர்.
போலீசார் வாகன சோதனையின் போது அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் மூலம் ஏற்படும் விபத்துக்களில் சிக்கி 200 பேர் இறக்கின்றனர், 1,500 பேர் படு காயமடைகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments
Post a Comment