கோரிக்கை
பாலாறு ஏசி வெங்கடேசன் வாணியம்பாடி
மாநில பொதுச்செயலாளர்
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும்
மாநில தலைவர்
தென்பெண்ணை பாலாறு பாசன விவசாயிகள் சங்கம்.
ஒருங்கிணைந்த வேலூர்(திருப்பத்தூர் ராணிப்பேட்டை வேலூர்) மாவட்டத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் அச்சுஊடகவியலார் காட்சி ஊடகவியலாளர் உள்ளிட்ட தோழமை கள் அனைவருக்கும் வணக்கத்துடன் விடுக்கும் வேண்டுகோள்!!!
தமிழக சட்டமன்றத்தில் பொது மற்றும் வேளாண்மை க்கான நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. பாராட்டதக்க அம்சங்கள் பல மேற்படி அறிக்கையில் இருந்தாலும் நிறைகளோடு குறைகளும் இருப்பதை சுட்டிக் காட்டாமல் இருக்கமுடியாது.
குறிப்பாக மேற்படிநிதிநிலைஅறிக்கையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.
மேற்படிமூன்றுமாவட்டங்களின் முதன்மைநீராதாரமான பாலாற்றின் தொடர்நீர்வரத்துக்காக தீட்டப்பட்ட தென்பெண்ணை பாலாறு இணப்புத்திட்டம் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. முந்தைய ஆட்சியில் முதல்வராகவும் துணைமுதல்வராகவும் இருந்தவர்கள் அவர்கள் வாழும் பகுதிகளுக்கு பல்லாயிரம் கோடியில் நிதி ஒதுக்கீடு செய்துக்கொண்டு அவினாசி அத்திக்கடவு நீர்செறிவூட்டும்திட்டம் மேட்டூர்சரபங்கா உபரி நீர் திட்டம் காவிரி வைப்பாறு கருமேனிஆறு குண்டாறு திட்டங்களை தீட்டிசெயல்பாட்டுக்குகொண்டுவந்துவிட்டனர்.
ஆனால் பாலாறு மற்றும் தென்பெண்ணை படுகை களுக்கு அவர்கள்எந்ததிட்டத்தையும்செயல்படுத்தவில்லை. அதேதுரோகசெயல்பாட்டைத்தான் தற்போதைய தி. மு. க. அரசும் மேற்கொள்வதாக எண்ணத்தோணுகிறது.
அதேநேரத்தில் மேற்படி தென்பெண்ணை பாலாறு நதிகளின் படுகையைசேர்ந்த எந்த அரசியல் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் களும் இதில்அக்கரைகாட்டாத நிலையிலேஉள்ளது வேதனைக்குரியது ஆகும்.
மத்திய நீராதரவளநிறுவனம் ஆய்வுகள்நடத்திமுடித்து மத்திய நீர்ஆணையம்ஏற்றுக்கொண்ட தற்போது மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் பார்வையில் இருக்கும்
1.தென்பெண்ணைபாலாறு இணைப்பு த் திட்டம்
2.தென்பெண்ணை செய்யாறுஇணைப்புதிட்டமும்(நந்தன் கால்வாய் திட்டம்) நீண்டகாலமாகவே நிலுவையில் உள்ளது. இந்த திட்டங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
காவிரியில் தொடர்ந்து அடாவடி செய்துவரும் கர்நாடக மாநிலம் தென்பெண்ணை மற்றும் பாலாற்றுநீர்வரத்திலும் மோசடி செய்து வருகிறது.
பெங்களூரு ஒரத்தூர் ஏரியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் கலவாரப்பள்ளிஅணைக்குவரவேண்டிய தென்பெண்ணை ஆற்று நீரை தடுத்துமடைமாற்றி சிக்பெல்லாபூர் கோலார்மாவட்ட ஏரிகளுக்கு நீர்ஏற்றும்அமைப்புகள்மூலம் கொண்டு செல்கிறது.
தென்பெண்ணை யின் தூயநீராதரமாக விளங்கிவந்த மார்கண்டேய நதியின் குறுக்கே கோலார்மாவட்ட யார் கோல் வனப்பகுதியில் 162அடிஉயரம்கொண்ட பெரும்அணையைக்கட்டி தடுத்துவிட்டது. இதனால் கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்துபாதிக்கப்படுவதோடு வேப்பனப்பள்ளி கிருஷ்ணகிரி பர்கூர் ஊத்தங்கரை தொகுதிகளின் விவசாயமும் குடிநீரும் பாதிப்புக்கு உள்ளாகி ஊத்தங்கரை பாம்பாறுஅணைக்கட்டின் நீராதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
நீண்டகால மாக இந்த பகுதியில் உள்ளமக்களிடம் வாக்குகளைப்பெற அரசியல் கட்சிகள் தென்பெண்ணை எண்ணெகொல்புதூர்_மார்கண்டேய நதி மாரசமுத்திரம்தடுப்பணைதிட்டத்தை நிறைவேற்றுவதாகூறிவந்தனர்.
அதைப்பற்றிய எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.
இந்ததிட்டம்நிறைவேறிஇருந்தாலாவது மாரா சமுத்திரம் தடுப்பணை யில் இருந்து படேதலாவ்ஏரிவழியாக பத்துக்கும் மேற்பட்ட ஏரிகள்நிரம்பி மத்தூர் ஏரி வழியாக ஊத்தங்கரை பாம்பாறுஅணைக்கட்டின் நீராதாரம் மேம்பட்ட இருக்கும்.
ஆனால் தற்போது வெளியான நிதிநிலை அறிக்கைகள் இந்த குறைகளுக்கு தீர்வுக் காண்பதாக தெரியவில்லை. குறிப்பாக பாலாறு தென்பெண்ணை ஆறுகள் பாயும் மாவட்டங்களின் நீராதாரங்களுக்கான திட்டங்கள் இல்லாத காரணத்தால் வடத் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறி தான்!
அதனால் இந்த மாவட்டங்களைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் கள் சட்டமன்றத் திலும் நாடாளுமன்ற உறுப்பினர் கள் நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வையுங்கள்.
ஊடகவியல் உறவுகள் இவ்வாறு அவர் கூறினார்:
Comments
Post a Comment