விழிப்புணர்வு போட்டி
வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில்
மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்பு
விழிப்புணர்வு போட்டிகள்
வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஓவியம், கட்டுரை பேச்சு ஆகிய மாவட்ட அளவிலான போட்டிகள் காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்டரங்கில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, வரவேற்று பேசினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் எஸ்.மகாலிங்கம், ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.உ.நி.பள்ளி, கரிகிரி தலைமையாசிரியர் கோ.பழநி, காங்கேயநல்லூர் தி.மு.சி.வா.அ.ஆ.மே.நி.பள்ளி, அ.ஜெயதேவரெட்டி, சைதாப்பேட்டை அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் டி.சண்முகம், தாதிரெட்டிப்பள்ளி அரசுயர் பள்ளி தலைமையாசிரியர் எம்.கேசவன், செம்பேடு அரசுயர் பள்ளி தலைமையாசிரயர் பிரேம்சாய்பாபா ஒடுகத்தூர் பள்ளி தலைமையாசிரியர் பிச்சை ஆகியோர் போட்டிகளை நடைத்தினர்.
நடுவர்கள்
முதுகலை ஆசிரியர்கள் ஶ்ரீவெங்கடேஸ்வரா மேனிலைப்பள்ளி கே.கல்பனா, ஈ வெ ரா நா அ. மாதிரி மகளிர் மே.நி.பள்ளி பழனி, பட்டதாரி ஆசிரியர்கள் என்.கே.எம்.மே.நி.பள்ளி, சாய்நாதபுரம், பரமானந்தம், இலத்தேரி அரசு ஆண்கள் பள்ளி ஜெயக்குமார், பொய்கை அரசு மேனிலைப்பள்ளி முருகன், கே.வி.குப்பம் மகளிர் பள்ளி ஜி.சீனிவாசன் ஓவிய ஆசிரியர்கள் காட்பாடி ஆண்கள் பள்ளி சி.குணசேகரன், சத்துவாச்சாரி எ.பிரபுகுமார், கொணவட்டம் பி.தரணிபாபு, காங்கயேநல்லூர் எ.ஆனந்தன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
வேலூர் நகர், புறநர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். இப்போட்டிகளில் 120 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக இணைய தளம் வாயிலாக அறிவிக்கப்படும் அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
Comments
Post a Comment