ஒடுக்கத்தூர் புளி
விற்பனையை சந்தைப்படுத்த
தெரியாமல் உள்ள ஒடுக்கத்துார் புளி
உற்பத்தியாளர்கள்
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியை சேர்ந்தது ஒடுக்கத்துார். இதன் அருகில் ஜவ்வாது மலை தொடர்கள் உள்ளது. மலை அடிவாரத்தில் லட்சக்கணக்கான புளிய மரங்கள் உள்ளன.
இவற்றில் ஆண்டுக்கு ஒரு முறை காய்க்கும் புளியங்காய்கள் காய்க்கிறது. இதற்காக புளி மரங்களை பலர் ஏலம் எடுக்கின்றனர்.
ஜன., மாதம் மரத்தில் இருந்து புளியங்கொட்டைகளை உலுக்கி எடுத்து விற்பனை செய்கின்றனர். அவற்றை வாங்கிச் செல்லும் உற்பத்தியாளர்கள் அதிலிருந்து புளியங்காய்களை பறித்து காய வைத்து கொட்டை, புளி, விழுதுகளை தனியாக பிரித்தெடுக்கின்றனர்.
பின் அவற்றை சுத்தப்படுத்தி தனித்தனியாக விற்பனை செய்கின்றனர். புளியங்கொட்டையோடு சேர்ந்த புளி 10 கிலோ 100 ரூபாய்க்கும், கொட்டையை பிரித்து சுத்தம் செய்யப்பட்ட புளி ஒரு கூடை 800 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கூடையில் 10 கிலோ முதல் 15 கிலோ வரை புளி உள்ளது.
ஜன மாதம் முதல் வாரம் தொடங்கும் இந்த பணிகள் முடிந்து மார்ச் மாதம் புளி விற்பனைக்கு கிடைக்கிறது. இதற்காக ஒடுக்கத்துாரில் புளிச்சந்தை தினமும் நடக்கும். உற்பத்தி செய்தவர்கள் புளியை இங்கு கொண்டு வைத்து விற்கின்றனர்.
பொது மக்கள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒரு ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் மதிப்புக்கு புளி விற்பனை செய்யப்படுகின்றது.
நல்ல புளிப்பு சுவை கொண்ட ஒடுக்கத்துார் புளியை விற்பனை சந்தைபடுத்த தெரியாமல் உள்ள நிலை உள்ளது.
இதனல் வெளியூர் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கூடை கூடையாக புளியை வாங்கிச் சென்று வேறு பெயர்களில் விற்று அதிக லாபம் ஈட்டுகின்றனர். புளி விழுதை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அதிலிருந்து ஊறுகாய்கள் தயாரிக்கின்றனர்.
இதில் லாபம் அடைவது வியாபாரிகள் தான். உற்பத்தியாளர்களுக்கு குறைந்த லாபமே வருகிறது.
இதனால் ஒடுக்கத்துாரில் புளி விற்பனை மையத்தை அரசு அமைக்க வேண்டும் என புளி உற்பத்தியாளர்கள் அரசுக்கு பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
Comments
Post a Comment