வலம்புரி விநாயகர் செய்திகள்
🚩
*காலை தரிசனம்----------!*
*வஸந்த நவராத்திரி தரிசனம்.....!!*
இன்று
வெள்ளிக்கிழமை !
பிலவ வருடம் :
பங்குனி மாதம் 18 ஆம் நாள்....!
ஏப்ரல் மாதம் : முதல் தேதி :
(01-04-2022)
சூரிய உதயம் :
காலை : 06-23 மணி அளவில் !
சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-25 மணி அளவில் !
இன்றைய திதி : வளர்பிறை :
பிரதமை...!
அமாவாசை..
காலை 12-30 மணி வரை அதன் பிறகு பிரதமை....!
இன்றைய நட்சத்திரம் :
உத்திரட்டாதி...
காலை 11-10 மணி வரை ! அதன் பிறகு ரேவதி...!
இன்று
மேல் நோக்கு நாள் !
யோகம் :
சித்தயோகம் ! அமிர்தயோகம் !!
சந்திராஷ்டமம் :
இன்றும்
சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் !!
ராகுகாலம் :
காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!
எமகண்டம் :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!
குளிகை :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!
சூலம் :
மேற்கு : பரிகாரம் : வெல்லம் !
கரணம் :
மாலை : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !
நல்ல நேரம் :
காலை : 06-00 மணி முதல் 09-00 மணி வரை !!
10-00 மணி முதல் 10-30 மணி வரை !!
மதியம் : 01-00 மணி முதல் 03-00 மணி வரை !!
இரவு : 08-00 மணி முதல் 11-00 மணி வரை !!
இன்றைய சுப ஓரைகள் :
சுக்கிர ஓரை :
காலை : 06-00 மணி முதல் 07-00 மணி வரை !!
புதன் ஓரை :
காலை : 07-00 மணி முதல் 08-00 மணி வரை !!
சந்திர ஓரை :
காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !
குரு ஒரை :
காலை : 10-00 மணி முதல் 10-30 மணி வரை !
இன்றைய சிறப்புகள் :
இன்று
வசந்த நவராத்திரி...!
சக்தி வழிபாட்டின்...
பண்டிகைகளில் முக்கியமானவையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்தவை நவராத்திரி விழாக்கள் தான்...!
குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும், கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும்...
எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்னி புராணம் கூறுகின்றது ..!
அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே...!
ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியனதான்..!
புரட்டாசி குளிர் கால ஆரம்ப மாதம். பங்குனி மாதம் கோடையின் துவக்க காலம்.
இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகள் நன்மை பயக்கும் விதத்தில் அமைந்துள்ளன.
பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள்.
அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்....!
வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி...!
ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி....!
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி....!
தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி....!!
பெரும்பாலான இடங்களில் மிக பிரசித்தமாகக் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி எனும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியே..!
ஆலயங்களிலும், வீடுகளிலும் மிகவும் கொண்டாட்டமாக நடத்தப்படக் கூடியது சாரதா நவராத்திரி.
வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி தவிர வேறு விரத விழா இல்லை.
வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம்.
இந்த சாரதா நவராத்திரி போகநவராத்திரி எனும் மகிழ்வைக் கொடுக்கக் கூடிய நவராத்திரியாகும்.
பங்குனி மாதத்தில் கொண்டாபடுவது
வசந்த நவராத்திரி...!
வசந்த நவராத்திரி பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும்..!
மறுநாள் ஆகிய பிரதமை - தெலுங்கு வருடப்பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும்..!
இந்த நவராத்திரி ஸ்ரீ ராம நவமியுடன் முடியும்...!
பொதுவாக வட இந்தியாவிலும், தென் இந்தியாவில் சிற்சில கோயில்களில் மட்டுமே நடத்தப்படக் கூடியது.
இந்த நவராத்திரி பொதுவாக ஆலயங்களில் மட்டுமே நடக்கக் கூடியது...!
சாரதா நவராத்திரி போகம் எனும் மகிழ்வைத் தருவது,
வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது...!
வசந்த நவராத்திரி நல் பக்தியையும், அந்த நல்பக்தியால் நல் வாழ்வையும் அளிக்கக் கூடியது...!
வசந்த நவராத்திரி அம்பிகையின் வடிவமாகிய ராஜச்யாமளா அல்லது ராஜமாதங்கீஸ்வரி எனும் வடிவத்தைப் போற்றுவதாக அமையக் கூடியது...!
*அம்பாள் அருளாளே ... இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தேசியம்..!*
*தெய்வீகம்..! பேரின்பம் ...!*
*அன்புடன் செல்வராஜ்.* 🚩🚩
Comments
Post a Comment