தி மு மு க தலைவர் இக்பால் கொடுத்த புகார்
திமுமுகழக
மாநிலத்தலைவர்
இக்பால் மனு
திராவிட முஸ்லிம் முன்னேற்றக்கழக மாநில தலைவர் ஜிஎஸ். இக்பால் தலைமையிலான நிர்வாகிகள் வேலுார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனிடம் மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தொழில வளர்ச்சிக்காவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் முதல் அமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்றார்.
ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதல் அமைச்சர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அவதுாறு பரப்பி வருகிறார்.
இது சமூக நீதிக்கும், அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே அண்ணாமலை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment