வேலூர் போக்குவரத்து நெரிசல் ஏன்
வேலுாரில் போக்குவரத்தை
கட்டுப்படுத்த முடியாமல்
திணறும் போக்குவரத்து போலீசார்
சாலை பணிகள் நடந்து வருவதால், வேலுாரில் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.
வேலுார் மாவட்டம், வேலுாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் பஸ் ஸ்டாண்டு மூன்றாக பிரிக்கப்பட்டு வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டு முன்புறம், மக்கான், பழைய பஸ் ஸ்டாண்டில் செயல்படுகிறது.
வேலுாரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருவதால் நிறை இடங்களில் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. சத்துவாச்சாரியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேலுார்– காட்பாடி சாலை புதிய பாலாற்று பாலம் பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால் போக்குவரத்து அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. வேலுாரில் 50 ஆயிரம் ஆட்டோக்கள், ஒரு லட்சம் பைக்குகள், 20 ஆயிரம் கார்கள் உள்ளன.
அரசு, தனியார் பஸ்கள் 1,250, டவுன் பஸ்கள் 230 சென்று வருகின்றன. ஓட்டல்கள், தனியார் மருத்துவமனைகள் முன்பக்கம் ஆக்கரமிப்பு செய்யப்பட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 500 க்கும் மேற்பட்ட சரக்கு, காய்கறி வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
பழைய பஸ் ஸ்டாண்டு திருவள்ளுவர் சிலைக்கு பின்புறம் உள்ள பகுதியை ஆக்கரமித்து கடைகள் கட்டியுள்ளனர்.
இதனால் பஸ் ஸ்டாண்டுக்குள் சென்றும், வரவும் முடியாமல் சாலைகளில் நீண்ட நேரம் பஸ்கள் நிற்கின்றன.
இது போன்ற காரணத்தினால் வேலுார், காட்பாடி, சத்துவாச்சாரியில் 24:00 மணி நேரமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சத்துவாச்சாரியில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ள வேலுாருக்கு செல்ல ஒரு மணி நேரம் ஆகின்றது. போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.
Comments
Post a Comment