வாரியார் கதை

கிருபானந்த வாரியார்

வேலுார் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லுாரை சேர்ந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார். சமய சொற்பொழிவாளரான அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்கான அரசாணை எண் 39, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் 2021 ம் ஆண்டு பிப்., மாதம் 26 ம் தேதி படி தமிழக அரசு சார்பில் கிருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாளான ஆக., 25 ம் தேதி அரசு விழாவாக கொண்டாட அறிவித்து வெளியிடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
திருமுருக கிருபானந்த வாரியார்
வாழ்க்கை வரலாறு:
25.8.1906 ம் ஆண்டு காங்கேயநல்லுாரில் திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தார். தந்தை மலலையதாச பாகவதர், தாய் மாதுஸ்ரீ கனகவல்லி அம்மாள்.
8 வயதிலேயே இவர் கவி பாடும் ஆற்றல் பெற்றார். 12 வயதில் பதினாராயிரம் பண்களை கற்று 18 வயதில் சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்தார்.
19 வயதில் அமிர்த லட்சுமி என்பவரை திருமணம் செய்தார். 23 வயது வயதில் சென்னை ஆனைகவுனியில் தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம் 4 ஆண்டுகள் வீணை கற்றார். முருக பக்தரான இவர் தினமும் ஆன்மீக சொற்பொழிவாற்றி வந்தார்.
இவர் சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்றவற்றில் புலனை பெற்றவர். இவர் தனியாக புராண பிரசங்கள் செய்தார். இவரது பிரசங்கங்கள்  பேச்சு வாழ்க்கையையொட்டியே அமைந்திருந்ததால் பாமர மக்களை கவர்ந்தார். இதனால் இவரை அருள் மொழி அரசு, திருப்புகழ் ஜோதி என்றும் மக்களால் பாராட்டப்பட்டவர்.
இவரது சொற்பொழிவுகள் நாடக பாணியிலும், குட்டிக் கதைகளில் வரும் நகைச்சுவையுடன் சொல்வது சிறப்பாகும்.
இவர் 1936 முதல் திருப்புகழ் அமிர்த்தம் என்ற மாத இதழை 27 ஆண்டுகள் நடத்தி வந்தார். இதில் பாமர மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதினார்.
சிவவருட் செல்வர், கந்தவேள் கருணை, இராம காவியம், மகாபாரதம், தாத்தா சொன்ன குட்டி கதைகள், பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு என 150 நுால்கள் எழுதியுள்ளார்.
திருவிழாக்களில் புகழ் பெற்ற கோவில்களில் பக்தி சொற்பொழிவாற்றி வந்தார். இவர் வெளிநாடான லண்டனில் பக்தி சொற்பொழிவு ஆற்றி விட்டு 1993 ம் ஆண்டு நவ., மாதம் 7 ம் தேதி இந்தியாவுக்கு திரும்பி வரும் வழியில் விமானத்தில் இறந்தார்.
இவரது சொந்த ஊரான காங்கேயநல்லுாரில் இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திலேயே முழு உருவ சிலை அமைக்கப்பட்டு தனிக்கோவிலாக  பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோவில் உள்ள பகுதி தொண்டு நிறுவத்தின் மூலமாக அவரது குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்