மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது மதுரை மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

மக்களின் ஜனநாயக
உரிமை
பறிக்கப்படுகிறது
மார்க். கம்யூ மாநாட்டில்
சீத்தாராம் யெச்சூரி

மதுரை:
மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுவதாக மதுரையில் நடந்து வரும் மார்க். கம்யூ மாநாட்டில்
சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
மார்க். கம்யூ தமிழ் மாநில 23 வது மாநாடு மதுரையில் நேற்று 30 ம் தேதி தொடங்கியது.  3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.
பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு மாநாட்டில் பேசியதாவது: பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச முடியவில்லை. மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது. அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
எதிரிகளை பயப்படுத்துவதற்காக அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் பெரிய முதலாளிகளுக்கு விற்கப்படுகிறது.
விலைவாசி உயர்வு, வேலை இல்லாதது குறித்து மத்திய அரசு பேசுவதில்லை. புதிய கல்விக் கொள்கை மூலம் தங்களது கொள்கைகளை புகுத்துகிறார்கள். ரஷ்யா, உக்ரைன் போரினால், அமெரிக்க பல தில்லுமுல்லுகளை செய்து வருகிறது.  அமெரிக்காவின்  ஜூனியர் பார்ட்டனராக  இந்தியாவை மாற்றும்  வகையில் மோடி அரசு செயல்படுகிறது. மோடி அரசை வீழ்த்த மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரி இயக்கங்களால் மட்டுமே  முடியும்.
தமிழகத்தில் இடது சாரிகளை பலப்படுத்துவதன் மூலம் பாஜக, அதிமுக கட்சிகளை வீழ்த்த முடிவும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மதுரை எம்பி வெங்கடேசன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் சவுந்தரராசன், வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் இராமலிங்கம்,  விஜயரானன், மதுரை மாநகர மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன்,
மதுரை புறநகர மாவட்ட செயலாளர் இராஜேந்திரன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்