வாங்க வாங்க ஏலகிரி மலைக்கு போங்க போங்க காரில்
ஏலகிரி மலையில்
பயணிகள் குவிந்தனர்
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை உள்ளது. சுற்றுலா தலமான ஏலகிரி மலை கொரோனா தொற்று பரவல் குறைந்த பிறகு திறக்கப்பட்டது. இதனால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஏலகிரி மலை பற்றிய விவரம்:
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகில் உள்ளது. ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை, இதமான காற்று காணப்படுகிறது. மலையில் உள்ள அத்னாவூர், பொன்னேரி, நிலாவூர், மங்களம் என 14 கிராமங்களில் விவசாயம் செய்கின்றனர்.
29. 2 சதுர கி.மீ., பரப்பளவு கொணடது. மக்கள் தொகை 14 ஆயிரம். மலையின் உயரம் 1048.5 மீட்டர் கடல் மட்டத்திலிருந்து. சீதோழ்ண நிலை கோடை காலம் 34 டிகிரி, குளிர் காலம் 11 டிகிரி.
பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகளில் மலைக்கு வர வேண்டும். ஒவ்வொரு வளைவிலும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.
பார்க்க வேண்டிய இடங்கள்:
புங்கனுார் ஏரி படகு இல்லம்
குழந்தைகள் பூங்கா
முருகன் கோவில்
அத்னாவூர், நிலாவூர் அரசு பழத்தோட்டம்
புங்கனுார் ஏரி
அரசு மூலிகை பண்ணை
தொலை நோக்கு கருவி
ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி
மங்களம் ஏரி
நடை பயணம் செய்யலாம்
நிலாவூர் தம்புரான் குளம், தேவ நாச்சியம்மன் கோவில்
பரண் பார்வை மையம்
அத்னாவூர் ஏரி படகு மையத்தில் படகு சவாரி
இயற்கை பூங்கா
சிறுவர் பூங்கா
துாரம்:
சென்னையில் இருந்து 236 கி.மீ., வேலுாரில் இருந்து 91 கி.மீ., வாகனத்தில் வருபவர்கள் வர நல்ல சாலை உள்ளது.
சென்னையில் இருந்து வாணியம்பாடி– ஜோலார்பேட்டைக்கு செல்லும் சாலையில் பொன்னேரி கூட்டு சாலையில் இருந்து மலைக்கு செல்லலாம்.
ரயில் மூலம் வருபவர்கள் சென்னையில் இருந்து கோவை, பெங்களூரு மார்க்கத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து 20 கி.மீ., துாரம் உள்ள ஏலகிரி மலைக்கு வரலாம். நிறைய டாக்சிகள் உள்ளது.
Thanks for giving this details sir
ReplyDelete