பயிற்சி பெறும் போலீசாருக்கு முதலுதவி பயிற்சி
*காவலர் பயிற்சிப் பள்ளியில்*
*பெண் பயிற்சி காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி*
வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் 276 புதிய பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஏழு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது பயிற்சியின் ஒரு பகுதியாக முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டது
முதலுதவி பயிற்சி துவக்க விழாவிற்கு முதல்வர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார் துணை முதல்வர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்
முதன்மை கவாத்து அலுவலர் பாலாஜி வரவேற்றுப் பேசினார்.
இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி ரெட் கிராஸ் அவைத் தலைவர் மற்றும் முதலுதவி பயிற்சியாளர் செ.நா.ஜனார்த்தனன் முதல் உதவி விரிவுரையாளர் புலவர் பெ.முருகேசன் முதலுதவி பயிற்சி பெற்ற வி.பழனி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
முதன்மை சட்ட விரிவுரையாளர் கனிமொழி காட்பாடி ரெட்கிராஸ் துணைத்தலைவர் ஆர் சீனிவாசன் யூத் ரெட் கிராஸ் தலைவர் ரமேஷ்குமார் ஜெயின் மருத்துவக் குழு தலைவர் டாக்டர் தீனபந்து செயற்குழு உறுப்பினர் எ.ஸ்ரீதரன் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்த பயிற்சியில் முதல் உதவியாளர் செய்ய வேண்டிய வேண்டும் மயக்க நிலையில் இருந்தால் எப்படி முதலுதவி அளிப்பது செயற்கை சுவாசம் அளிக்கும் முறை எலும்பு முறிவு ஏற்பட்டால் கட்டுப் போடும் முறைகள் பாம்புக்கடி விஷப் பூச்சிக் கடி ஏற்பட்டால் செய்யக்கூடிய நடைமுறைகளில் காயம் ஏற்பட்ட பகுதியில் ரத்த ஒழுக்கை தடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல் முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது நாளையும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
நல்ல பயிற்சி இறுதியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு சிறப்பாக பதிலளித்த பயிற்சி பெண் காவலர்களுக்கு பரிசுகளை துணை முதல்வர் ரவிச்சந்திரன் வழங்கினார்
Comments
Post a Comment