வேலூரில் 108 டிகிரி வெயில்
வேலுாரில் வெயில்
108 டிகிரி
வெயிலுக்கு பெயர் போன வேலுாரில் கடந்த சில நாட்களாக அதிக வெப்ப நிலை காணப்பட்டது. நேற்று 106 டிகிரி பதிவானது. (41.3) இன்று 108 டிகிரி (42.2) பதிவானது. காலை முதலே அனல் காற்று வீசியது. கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.
சாலையில் கானல் நீர் தெரிந்தது.
நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது. வரும் 4 ம் தேதி அக்னி தொடங்குகிறது. அதற்கு முன்னதாகவே வெப்பநிலை உயர்வினால் வேலுார் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
குளிர் பானம், இளநீர் கடைகளில் கூட கூட்டம் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்தை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வேலூரின் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை
42.2 °C
108.0°F
Comments
Post a Comment